பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேலைப் பணி

வேலைப் பணி தொடர்பான கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1: வேலைப் பணி என்றால் என்ன?

பதில்: வேலை என்றால் வேறொரு பதிவு செய்துள்ள, வரி செலுத்தும் நபரின் சரக்குகள் மீது ஒருவரால் புரியப்படும் நிகழ்முறை (அ) செய்முறையைப் பற்றிப் புரிந்து கொள்வதாகும். வேறொருவரின் சரக்குகளைக் கையாளும் அல்லது ப்ராசஸ் செய்யும் நபர் வேலைப் பணியாளர் என்றும் சரக்குகளுக்குச்  சொந்தக்காரர் பணி அளிப்பவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

23.03.1986 தேதியிட்ட அறிக்கை எண்.214/86-CE-ல் உள்ள வரையறையை விட மேற்சொன்ன வரையறை மிக விரிவானதாகும். இந்த அறிக்கையில் வேலைப் பணி என்றாலே உற்பத்திதான் எனப் பொருள் கூறும் விதத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலைப் பணி என்பதன் வரையறை இப்போது அமல்படுத்தப்படப் போகும் GST வரி பின்னணியில் வேலைப்பணி தொடர்பான  வரி விதித்தலின் அடிப்படைத் திட்டத்தில் உள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.

கேள்வி 2. வரி செலுத்துபவரிடமிருந்து ஒரு வேலைப் பணியாளருக்கு அனுப்பப்படும் சரக்கு சப்ளையாகவும், GST வரிக்குட்பட்டதாகவும் ஆகுமா? ஆம்  என்றால் ஏன் அப்படி ஆகிறது?

பதில்: சப்ளை என்பது விற்பனை, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து சப்ளை வடிவங்களையும் உள்ளடக்கியதால் இது சப்ளையாகக் கருதப்படும். ஆயினும் நிபந்தனைகளுடன் கூடிய தகவல் தெரிவிக்கப்பட்ட்ட பதிவு செய்த வரி செலுத்தும் நபர் (பணி அளிப்பவர்) எவ்வளவு இன்புட்கள் மற்றும் / அல்லது கேபிடல் சரக்குகளையும் வரியின்றி வேலைப் பணிக்காக வேலைப்பணியாளருக்கு அனுப்பலாம்; அங்கிருந்து அது பிற வேலைப்பணியாளர்களுக்குச் செல்லலாம்; வரி செலுத்துபவர் அந்த இன்புட்களையும் கேபிடல் சரக்குகளையும் வேலைப் பணியாளர் தொழில் புரியும் இடத்திலிருந்து வேலை முடிந்த பின்னரோ அல்லது அவை அனுப்பப்பட்ட 1 வருடம் 3 வருடங்களுக்குள் இந்தியாவுக்குள் என்றால் வரி செலுத்தியோ அல்லது ஏற்றுமதிச் சரக்கு என்றால் வரி செலுத்தாமலோ அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம்.

கேள்வி 3. வேலைப் பணியாளர் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டுமா?

பதில்: ஆம்; வேலைப் பணி ஒரு சேவை என்பதால், அவரது நிகர லாபம் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப நிலையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேலைப் பணியாளர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.

கேள்வி 4. வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்படும் பணி அளிப்பவரின் சரக்குகள் வேலைப் பணியாளரின் நிகர லாபக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

பதில்: மாட்டாது; அவை பணி அளிப்பவரின் நிகர லாபக் கணக்கில்தான் வரும். ஆயினும், வேலையைச் செய்து முடிக்க வேலைப் பணியாளர் பயன்படுத்தும் சரக்குகள் / சேவைகளின் மதிப்பு வேலைப் பணியாளர் சப்ளை செய்யும் சேவைகளின் மதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

கேள்வி 5. இன்புட்கள் கேபிடல் சரக்குகளையும் தனது இடத்திற்குக் கொண்டுவராமல் நேரடியாக வேலைப் பணியாளரின் இருப்பிடத்திற்கு பணி அளிப்பவர் அனுப்புவாரா?

பதில்: ஆம், பணி அளிப்பவர் அவ்வாறு செய்ய அவருக்கு அனுமதி உண்டு. அத்தகைய சூழலில் இன்புட் (அ) கேபிடல் சரக்கின் மீது பணி அளிப்பவரால் வரிக்கடன் பெறப்படும். இன்புட் கேபிடல் சரக்குகளை 1.3 ஆண்டுகளுக்குள் திரும்பப் பெற்றாக வேண்டும்; அவ்வாறு பெறாவிட்டால் ஒரிஜினல் வர்த்தகப் பரிமாற்றம் சப்ளையாகக் கருதப்பட்டு அதற்கேற்ற வரியை பணி அளிப்பவர் செலுத்த நேரிடும்.

கேள்வி 6. இன்புட்கள் கேபிடல் சரக்குகளையும் வேலைப் பணியாளரின்  இருப்பிடத்திலிருந்து தனது இடத்திற்குக் கொண்டு வராமல் நேரடியாக பணி  அளிப்பவர் சப்ளை செய்வாரா?

பதில்: ஆம். பதிவு செய்யாத ஒரு வேலைப் பணியாளரின் முகவரியைத் தான் தொழில் புரியும் கூடுதல் இடமாக பணி அளிப்பவர் அறிவித்திருந்தால் அவ்வாறு செய்யலாம். வேலைப் பணியாளர் பதிவு செய்தவராக இருந்தால், சரக்குகள் அவரது இருப்பிடத்திலிருந்தே சப்ளை செய்யப்படலாம். ஆணையாளர் அறிவிக்கும் வேலைப் பணிக்கான சரக்கை நேரடியாக வேலைப் பணியாளரின்  இருப்பிடத்திலிருந்து சப்ளை செய்யலாம்.

கேள்வி 7. வேலைப் பணியாளரின் இருப்பிடத்தைத் தனது கூடுதல் தொழில் புரியும் இடமாக அறிவிக்காமல் எத்தகைய சூழலில் பணி அளிப்பவரால் சரக்கை நேரடியாக வேலைப் பணியாளரின் இருப்பிடத்திலிருந்து சப்ளை செய்ய முடியும்?

பதில்: வேலைப் பணியாளர் தொழில் புரியுமிடத்தைத் தனது கூடுதல் தொழில் புரியுமிடமாக அறிவிக்காமல் சரக்கை இருவித சூழல்களில் பணி அளிப்பவரால் நேரடியாக சப்ளை செய்யமுடியும் வேலைப் பணியாளர் பதிவு பெற்ற வரி செலுத்தும் நபராக இருந்தால் (அல்லது) ஆணையாளரின் அறிவிப்பின்படி அத்தகைய சரக்குகளை சப்ளை செய்வதில் பணி அளிப்பவர் ஈடுபட்டிருந்தால்.

கேள்வி 8 வேலைப் பணியாளருக்கு அனுப்பப்படும் இன்புட்கேபிடல் சரக்கை ITC  ஆக எடுக்கத் தேவைப்படும் சட்டப் பிரிவுகள் யாவை?

பதில்: இன்புட்கேபிடல் சரக்கைத்தான் தொழில் புரியுமிடத்தில் பெற்று பின் அதைத் திருப்பி அனுப்பினாலும் அவை முதலில் தனது இடத்திற்கு வராமல் வேலைப்பணியாளரின் இடத்துக்கே நேரடியாக அனுப்பப்பட்டாலும், வேலைப்பணியாளருக்கு அனுப்பப்படும் இன்புட்கேபிடல் சரக்கின் மீதான வரியைக் கடனாகப் பெற பணி அளிப்பவருக்கு உரிமை உண்டு. ஆயினும் வேலைப் பணியைச் செய்து முடித்தவுடன் அவை அனுப்பப்பட்ட 1.3 ஆண்டுகளுக்குள் இன்புட்கேபிடல் சரக்குகள் மீண்டும் திரும்பப் பெற்றாக வேண்டும் அல்லது வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து சப்ளை  செய்யப்பட்டாக வேண்டும்.

கேள்வி 9: குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து இன்புட்கேபிடல் சரக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் அல்லது சப்ளை  செய்யப்படாவிட்டால் என்ன நிகழும்?

பதில்: குறிப்பிட்ட கால அளவுக்குள் வேலைப் பணியாளரின் இடத்திலிருந்து இன்புட்கேபிடல் சரக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் (அ) சப்ளை செய்யப்படாவிட்டால் அவைகள் பணி அளிப்பவரால் வேலைப் பணியாளருக்கு பணி அளிப்பவரி வெளியே அனுப்பிய அதே தினத்தில் (அல்லது இன்புட்கேபிடல் சரக்குகள் வேலைப் பணியாளரின் இடத்துக்கு நேரடியாக அனுப்பப்பட்டு அவரால் பெறப்பட்ட தேதியில்) சப்ளை செய்யப்பட்டதாக அர்த்தம். ஆகவே, பணி அளிப்பவர் இதற்கு வரி செலுத்த நேரிடும்.

கேள்வி 10. கருவி/பொருட்கள் உள்ளிட்ட சில கேபிடல் சரக்குகளை ஒரு முறை பயன்படுத்தினால் மீண்டும் பயன்படுத்த முடியாது; பொதுவாக அவற்றை ஸ்கிராப்பாக விற்கப்படுகின்றன. வேலைப் பணி சட்டங்களில் இதுபோன்ற  சரக்குகளை எப்படிக் கையாளுகின்றனர்?

பதில்: கேபிடல் சரக்குகளை மூன்றாண்டுகளுக்குள் திருப்பிக் கொண்டு வரும் சட்ட நிபந்தனை மோல்டுகள், சாயங்கள், கருவிகள்பொருட்கள் அல்லது சிறு  கருவிகளுக்குப் பொருந்தாது.

கேள்வி 11. வேலைப் பணியில் உருவாகும் கசடு/ஸ்கிராப்பை எப்படிக் கையாள்வது?

பதில்: வேலைப் பணியாளர் தான் தொழில் புரியும் இடத்திலிருந்து வரி செலுத்தப்படும் பட்சத்தில் அவர் பதிவு பெற்றவராக இருந்தால் வேலைப் பணியில் உருவாகும் கசடு/ஸ்கிராப்பை நேரடியாக சப்ளை செய்யலாம்; அவ்வாறு பதிவு செய்யாதபட்சத்தில் அவை வரி செலுத்தப்பட்ட பின் பணி அளிப்பவரால்  சப்ளை செய்யப்படும்.

கேள்வி 12.இடைவழிச் சரக்குகளும் வேலைப் பணிக்கு அனுப்பப்படுமா?

பதில்: ஆம். வேலைப் பணியில் இன்புட் என்றால் வேறு நிகழ்முறையைச் சார்ந்த இடைவழிச் சரக்குகள் அல்லது இன்புட்களில் பணி அளிப்பவர் (அ) வேலைப்  பணியாளர் செய்யும் செய்முறை ஆகியவை அடங்கும்.

கேள்வி 13. வேலைப் பணியுடன் தொடர்புடைய கணக்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு?

பதில்:  வேலைப் பணியுடன் தொடர்புடைய இன்புட்/கேபிடல் சரக்குகளின் முறையான கணக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பு பணி அளிப்பவருடையதாகும்.

கேள்வி 14: வேலைப் பணி தொடர்பான சட்டப் பிரிவுகள் அனைத்து வகைச் சரக்குகளுக்கும் பொருந்துமா?

பதில்: பதிவு பெற்ற வரிசெலுத்தும் நபர் வரிக்கான சரக்கை அனுப்பும்போதுதான் வேலைப்பணி தொடர்பான சட்டப்பிரிவுகள் பொருந்தும். வேறு வகையில் சொன்னால், விலக்கு பெற்ற வரியற்ற சரக்குகளுக்கு (அ) பதிவு செய்த வரிசெலுத்தும் நபர் தவிர வேறொருவர் சரக்கை அனுப்பினால் இவ்விதிமுறைகள் பொருந்தாது.

கேள்வி 15: வேலைப் பணி தொடர்பான சட்டப் பிரிவுகளை முதலாமவர் பின்பற்ற  வேண்டியது கட்டாயமான ஒன்றா?

பதில்: இல்லை. சிறப்பான செய்முறையைப் பின்பற்றாமல் GST தொகையைச் செலுத்தியப் பின் இன்புட்கேபிடல் சரக்குகளை பணி அளிப்பவர் அனுப்பலாம்.  அச்சமயத்தில் வேலைப் பணியாளர் இன்புட் வரிக்கடனை எடுத்து ப்ராசஸ் செய்யப்பட்ட சரக்குகளை (வேலைப் பணி முடிந்தவுடன்) GST செலுத்தப்பட்ட பின்னர் சப்ளை செய்வார்.

கேள்வி 16. வேலைப் பணியாளரும் பணி அளிப்பவரும் ஒரே மாநிலம் அல்லது  யூனியன் பிரதேசத்தில்தான் இருந்தாக வேண்டுமா?

பதில்: வேலைப் பணிக்கான சட்டப் பிரிவுகள் IGST சட்டட்திலும் UTGST சட்டத்திலும் பின்பற்றப்பட்டுள்ளதால் இதற்கு அவசியம் இல்லை. எனவே, பணி அளிப்பவரும் வேலைப் பணியாளரும் ஒரே மாநிலத்தில்யூனியன் பிரதேசத்தில் இருக்கலாம் (அ) வெவ்வேறு மாநிலம்யூனியன் பிரதேசத்தில் இருக்கலாம்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

Filed under:
2.76923076923
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top