பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

IGST சட்டம் - ஒட்டுமொத்தப் பார்வை

IGST சட்டம் குறித்த கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

கேள்வி 1: IGST என்றால் என்ன?

பதில்: ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவை வரி என்றால் IGSTயின் கீழ் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வணிகம் அல்லது வர்த்தகம்    ஆகியவற்றிற்காக வழங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி.

கேள்வி 2: மாநிலங்கள் இடையிலான வழங்கல் என்றால் என்ன?

பதில்: வணிகம் அல்லது வர்த்தகம் சார்ந்த விஷயங்களுக்காக, மாநிலங்களிடையே நடக்கும் சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கலாம். வழங்குபவர் மற்றும் அதைப் பெறுபவர் ஆகியோர் வெவ்வேறு மாநிலங்களில் வேறு யூனியன் பிரதேசங்களில் மாநிலத்திற்கும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருப்பதுதான் இவை தவிர இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள், SEZ களுக்கும் தொழில் விரிவுபடுத்துவோருக்கு, அல்லது மாநிலங்களுக்கு இடையில் இல்லாத வழங்கல் ஆகியன இதில் அடங்கும். (IGST-ன் சட்டப் பிரிவு -   8)

கேள்வி 3: மாநிலங்கள் இடையிலான பொருள் வழங்கல்கள் மற்றும் சேவைகளை  எவ்வாறு IGSTயின் கீழ் வரி விதிக்க முடியும்?

பதில்: மாநிலங்கள் இடையிலான சரக்கு வழங்கல்களுக்கு IGST ஐ மத்திய அரசு வசூலிக்கும். GST என்பதன் CGST மற்றும் SGST ஆகியவற்றை சேர்த்து மாநிலங்கள் இடையில் நடக்கும் அனைத்து விதமான வரிவிதிப்புக்கு உள்ளாகக் கூடிய சரக்குகள் மற்றும் சேவைகள் வழங்கல்களுக்கு இந்த வரி விதிக்கப்படும்.இரு மாநிலங்களுக்கிடையே விற்பனை செய்பவர் IGST வரியை செலுத்துவார். இதை அவருக்கென்று ஏற்கெனவே இருக்கும் IGST, CGST, SGST கடனுரிமையை அவரது வாங்கிய பொருள் மதிப்பீட்டுக்கு எதிராக சீரமைவு செய்துவிட்டு மீதித்  தொகையை IGST வரியாகச் செலுத்துவார்.

ஏற்றுமதி செய்யும் மாநிலம், SGST - யில் வசூலானதை IGSTக்கான வரியாகச் செலுத்தும். இறக்குமதி செய்யும் வர்த்தகர் தனது வெளியீட்டு வரிச்சுமையை IGST- யின் மூலமான வருவாயைத் தனக்கு வர வேண்டிய வருவாயாக பாவித்து அதைக் கோரிப் பெறுவார்.

அதேபோல IGST மூலமாகப் பெற்ற வருவாயை, இறக்குமதி செய்யும் மாநிலத்திற்குத் திருப்புவார்கள் இந்தத் தொகை SGST க்குச் செலுத்துவதற்குப் பயன்படுத்தியதாக இருக்கும்.

இதைப் பற்றிய தகவல்கள், அதற்கான மத்திய முகமை மையத்திற்கத் தெரிவிக்கப்படும். இதுதான் மத்திய மாநில அரசுகளின் இடையே நடக்கும் வணிகம் தொடர்புடைய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வகிக்கும். மத்திய மாநில அரசுகளில் யார், யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதைச் சொல்லி, நிதி வழங்கலைச் சீரமைக்கும்.

கேள்வி 4: IGST வரைவுச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?

பதில்: IGST வரைவுச் சட்டம் 9 அத்தியாயங்களில் 25 பிரிவுகள் கொண்டது. சட்டம், பொருள்கள் வழங்கும் இடத்தைத் தீர்மானிப்பதற்கு தீர்மானிக்க விதிகளை வகுத்துள்ளது. இதன்படி வழங்கல் என்பது சரக்குகள் பிராயணப்படுதல் அடங்கியது. பொருள் வழங்கல் இடம் என்பது, சரக்குகளின் பெயர்ச்சி முடியும் இடம். அங்குதான் அதைப் பெறுவதற்கு கொண்டு சேர்த்தல் என்பது நடைபெறும். இதைத்தான் பொருள் வழங்கல் இடம் என்று விதிமுறை கூறுகிறது. பொருட்களின் பெயர்வு இல்லாதபோது, அதைப் பெற்றுக்கொள்பவர் எங்கு வந்து பெறுகிறாரோ, அதுதான் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும் வழங்கும் பொருள், குறிப்பிட்ட இடத்தில் ஒன்றிணைப்பு செய்யப்பட்டு முழுமையான பொருள் உருவாக்கப்பட்டால், அதுதான் பொருள் வழங்கல் இடம் என்று கருதப்படும். இறுதியாக பொருட்கள், சரக்குகள் ஆகியன பயண வழியில்  வழங்கப்பட்டால், அது பெறப்படும் இடம்தான் பொருள் வழங்கும் இடம்.

அதுபோல, பொருளை வழங்குபவரும், பெறுபவரும், இந்தியாவினுள் இருந்தால், அது உள்நாட்டு வழங்கல் அல்லது பொருளை வழங்குபவரோ, பெறுபவரோ வெளிநாட்டில் இருந்தால், அது சர்வதேச வழங்கல்கள் என்று கருதப்படும். இதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மற்ற சில குறிப்பிட்ட வழிமுறைகளும் இருக்கின்றன. வலைதளம் வாயிலாகத் தகவலைப் பெற்று வரி செலுத்தல்; வெளிநாட்டில் இருக்கும் ஒருவர். இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்படாத ஒருவருக்கு குறிப்பிட்ட தரவுத் தளத்தை அணுக்கம் செய்ய அனுமதிப்பது. இதற்காக, சட்டப் பிரிவு 14 IGST சட்டப்படி மிக எளிமையான முறையில் பதிவு செய்துகொள்ள முடிவது.

கேள்வி 5: IGST மாதிரியின் சாதக அம்சங்கள் என்ன?

பதில்: IGST மாதிரியின் உண்டாகும் பெரும் சாதக அம்சங்களாவன:

1. மாநிலங்களுக்கு இடையிலான ITC பரிமாற்றத்தை தடைகளின்றி பராமரிக்க முடிவெது

2. மாநிலங்கள் இடையிலான விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் ஆகியோருக்கு முன்னதாக வரிசெலுத்தத் தேவையில்லாத நிலை, மற்றும் பெரிய அளவிளலான நிதி முடக்கம் இருதரப்பினருக்கும் ஏற்படாதிருத்தல்

3. ஏற்றுமதி செய்யும் மாநிலத்திற்கு உபரிப் பணம் திருப்புதல் என்பது கிடையாது. ஏனென்றால் வரி செலுத்தும்போதே ITC முழுவதும் பயன்படுத்தப்பட்டு விடும்.

4.சுயமாக கண்காணிக்க ஏற்ற மாதிரி.

5.வரி விதிப்பை எளிமையாக வைத்திருப்பதன் முலம், வரி நடுநிலைத் தன்மையை உறுதி செய்கிறது.

6. மிக எளிமையான கணக்கீட்டு முறை இருப்பதால், வரி செலுத்துபவர் பல்வேறு  விதிகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை.

7. மிக அதிக அளவிலான கட்டுப்படுதலை உறுதி செய்ய வழி செய்து கொடுப்பதால், அதிகமான வரிவதல் செய்ய திறனான வழியை உருவாக்குகிறது. இந்த மாதிரி மூலம், தொழிலில் இருந்து தொழிலுக்கு மற்றும் தொழிலில் இருந்து வாடிக்கையாளருக்கு என்ற இரு விதமான பரிமாற்றங்களையும் கையாள  முடியும்.

கேள்வி 6: இறக்குமதியும் / ஏற்றுமதியும் GSTயின் கீழ் எவ்வாறு வரி விதிப்பு செய்ய முடியும்?

பதில்: எல்லா விதமான இறக்குமதி/ஏற்றுமதி ஆகியன GST (GST) வரி விதிப்பிற்கான மாநிலங்கள் இடையிலான வர்த்தகமாகக் கருதப்படும். வரிகட்டுவது யார் என்ற கேள்விக்கு, சரக்குகள் எங்கே சென்று அடைகின்றனவோ அவர்கள் மற்றும் SGST வரியைப் பொறுத்த மட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த மாநிலத்திற்குச் செல்கிறதோ, யார் அதை பயன்படுத்துகிறார்களோ அந்த மாநிலம்தான் வரி செலுத்த வேண்டும். இதில் இறுதியான, முழுமையான எதிரீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் IGST யின் ITC வரி இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கும், சேவைகளுக்கும் செலுத்தப்பட்டு விடும். ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு வரி ஏதுமில்லை. ஏற்றுமதி செய்பவர். பத்திர உத்திரவாதத்தின் பேரில் ஏற்றுமதி செய்யலாம். அதுவும் சுங்கவரி எதுவும் செலுத்தாமல் இவை தவிர ITC ஐ திரும்பத் தருமாறு கோரலாம். அல்லது ஏற்றுமதி செய்யும் சமயத்தில் IGST செலுத்தி விட்டு அதன் பின் IGST திருப்புதல் கோரலாம் இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் GST சுங்க வரிக் கட்டணச் சட்டத்தின் பிரிவுகளில் வரிவிதிப்புக்குள்ளாகும் இறக்குமதி செய்யும் காலத்தில், சுங்கச் சட்டத்தின் படியும் வரிவிதிபப் இருக்கும். (IGST-ன் சட்டப் பிரிவு 5)

கேள்வி 7:  GST ஐ எப்படி செலுத்த வேண்டும்?

பதில்: செலுத்த வேண்டிய IGST தொகையை ITC-ஐப் பயன்படுத்தியோ பணமாகவோ செலுத்தலாம். அதே சமயம் ITC-ஐக் கட்டணம் செலுத்தப்ப பயன்படுத்தினால் பின்வரும் முறைகளில் செய்ய வேண்டும்.

1. முதலில் இருக்கும் IGST-யின் ITC-யைத்தான் IGST கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம்.

2. IGST-யின் ITC தீர்த்தவுடன் CGST-யின் ITC-IGST கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம்.

3. IGSTயின் ITCயும், GSTயின் ITC யும் தீர்ந்தவுடன்தான் வரி செலுத்துபவர் SGSTயின் ITC ஐப் பயன்படுத்தி, IGSTயின் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்

இதற்குப் பிறகும் செலுத்த வேண்டிய IGST மீதி இருந்தால் அதை பணம் மூலம்  செலுத்தலாம். GST முறைமை மேற்படி நிலைகளில் மட்டுமே கடன் வசதியைப்  பயன்படுத்தி IGST கட்டணத்தை செலுத்த உறுதி செய்கிறது.

கேள்வி 8: ஏற்றுமதி செய்யும், மாநிலம், இறக்குமதி செய்யும் மாநிலம், மத்திய அரசு ஆகியவற்றிடையே ஒப்பந்தம் என்பது எப்படி இருக்கும்?

பதில்: மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்குமிடையே இரண்டு விதமான ஒப்பந்தக் கணக்கீட்டு முறை இருக்கும்.

மத்திய அரச மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலம் ஏற்றுமதியில் ஈடுபடும் மாநிலம் பொருள் வழங்குபவர் பயன்படுத்தும் IGST யின் ITC தொகைக்கு ஈடான  தொகையை மத்திய அரசுக்கு செலுத்தும்.

மத்திய அரசும் இறக்குமதி செய்யும் மாநிலமும்: மத்திய அரசு, இந்த வாணிபம் தொடர்புள்ள டீலர் மாநிலங்களிடையேயான வழங்கல்களுக்கான SGST கட்டணத்தை செலுத்துவதற்குப் பயன்படுத்திய IGST யின் TC தொ-க்கு ஈடான தொகையை மத்திய அரசு செலுத்தும் இவை தொடர்பான மாநில அளவிலான ஒப்பந்தம் குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து டீலர்களும் ஒப்பந்த காலத்தில் தரும் விவரங்களின் ஒட்டுமொத்த கணக்கீட்டின் அடிப்படையில் இருக்கும் இதே போன்றதொரு ஒப்பந்தப்படி தொகை அளித்தல் CGST மற்றும் IGST -க்கு இடையே எடுத்துக்கொள்ளப்படும்.

கேள்வி 9: SEZ பிரிவுகள் அல்லது மேம்பாட்டாளருக்கு வழங்கப்படும் பொருட்கள்  எவ்வாறு கருதப்படும்?

பதில்: SEZ பிரிவுகள் அல்லது மேம்பாட்டாளருக்கு அளிக்கப்படும் பொருள் வழங்கல்கள், ஆகியன முதன்மை (physical) ஏற்றுமதிகளுக்கு இருக்கும்.

பூஜ்ய சதவிகித கட்டணங்கள் முறைமையே இதற்கும் பொருந்தும். பொருள் வழங்குபவர் வரிகள் ஏதுமின்றி SEZ க்கு பெறுகிறார். அதன் பிறகு அது போன்ற வழங்கல்களுக்கான உள்ளிட்டு வரியை திரும்பப் பெறலாம். GSTயின் சட்டப்  பிரிவு 16இன்படி)

கேள்வி 10: தொழில் முறைமைகள், தேவையான விதிகளுக்கு உடன்படுதல் ஆகியன GST/CGST சட்டங்களின்படி ஒன்றானவையா?

பதில்: தொழில் முறைமைகள், விதிகளுக்கு உட்படும் அம்சங்கள் ஆகியன பதிவு செய்தல், வரவு - செலவு கணக்குகள் தாக்கல் செய்வது, வரி செலுத்தல் போன்றவற்றிற்கு ஒன்றேதான். இது தவிர CGST சட்டங்களில் சிலவற்றை மாற்றாமல் அப்படியே IGST சட்டம் தனதாக இணைத்துக்கொண்டுள்ளது. மதிப்பாய்வு கணக்குப் பரிசோதனை, மதிப்பீடு பொருள் வழங்கல் நேரம் விலை விவரச்சீட்டு கணக்கீட்ட முறைகள் வழக்கு விவகார முறைமைகள் முறையீடு  போன்றவை இதில் அடங்கும் (IGST யின் சட்டப் பிரிவு 20).

ஆதாரம் : http://www.cbec.gov.in

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top