பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / புதுச்சேரி அரசு / மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 16-08-1996 அன்று புதுச்சேரி அரசு, சமூகநலத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனில் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்துறையின் நோக்கமாகும். துறையின் நிர்வாக அமைப்பு, மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவை பொதுமக்களின் தகவலுக்காக இக்குடிமக்கள் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ளது

துறையின் நோக்கங்கள்

சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் முதியோருக்கு பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்குதல்

பயனடைவோர்

1.  6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்

2. கர்ப்பிணிப் பெண்கள்

3. பாலூட்டும் தாய்மார்கள்

4. விதவைகள் / ஆதரவற்றப் பெண்கள் / திருமணமாகாதவர் / திருநங்கையர்

5. வளரிளம் பெண்கள்

6. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள்

7. முதியவர்

8. வன்முறை மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மகளிர் / பெண் குழந்தைகள்

9. குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்.

துறையின் பல்வேறு பிரிவுகள்

அ. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டப்பிரிவு

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டமானது மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் இளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சத்துணவு வழங்கப்படுகிறது இப்பிரிவு திட்ட அதிகாரியின் கீழ் செயல்படுகிறது

ஆ. மகளிர் நலப் பிரிவு

பெண்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் இப்பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இது மட்டுமின்றி புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மங்களம் திட்டம், மகளிர் ஆணையம் போன்ற நிறுவனங்கள் இப்பிரிவின் கீழ் இயங்குகின்றன. துணை இயக்குநர் (மகளிர் நலம்) இப்பிரிவின் அதிகாரியாக செயல்படுகிறார்

இ. சமூகப் பாதுகாப்பு பிரிவு

வயது முதிர்ந்தவர்களையும், பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இப்பிரிவின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பிரிவின் அதிகாரி துணை இயக்குநர் (சமூக பாதுகாப்பு)

இத்துறையால் நடத்தப்படும் விடுதிகள்

வ.எண்.

நிறுவனத்தின் பெயர்

முகவரி

1

பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியருக்கான தங்கும் விடுதி

காப்பாளர் பணிபுரியும் மகளிர் மற்றும் மாணவியருக்கான தங்கும் விடுதி, இராஜாஜி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி.

இயக்குநரகம் மற்றும் துணை அலுவலகங்களின் முகவரி

வ.எண்.

அலுவலகத்தின் முகவரி

தொலைபேசி

1

இயக்குநர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2244964 (Per) 0413-2242621 0413-2244964 (FAX)

2

முதுநிலை கணக்கு அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2242621

3

துணை இயக்குநர் (மகளிர் நலம்), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2242621

4

துணை இயக்குநர் (சமூக பாதுகாப்பு), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2246940

5

திட்ட அதிகாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2242621

6

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, ஒ.கு.ந.தி திட்டம் I, ஜி.கே. மூப்பனார் வணிக வளாகம், வில்லியனுர், புதுச்சேரி

0413-2666184

7

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, ஒ.கு.ந.தி திட்டம் III, எண் 1, முதல் குறுக்கு, சொர்ணா நகர், அரியங்குப்பம், புதுச்சேரி

0413-2601934

8

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, ஒ.கு.ந.தி திட்டம் IV, எண். 38 மகாத்மா காந்தி வீதி, முத்தியால்பேட்டை, புதுச்சேரி

0413-2239430

9

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, ஒ.கு.ந.தி திட்டம் V, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வளாகம், புது சாரம் (LC வளாகம் அருகில்), காமராஜர் சாலை, புதுச்சேரி

0413-2244785

10

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, ஒ.கு.ந.தி திட்டம் II, பெருந்தலைவர் காமராஜர் வளாகம், Civil Station Complex, காரைக்கால்

04368-223614

11

நல அதிகாரி, மண்டல நிர்வாக அலுவலகம், மாஹே

0490-2332370

12

நல அதிகாரி, கிளை அலுவலகம், ஏனாம்

O884-2321319

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் நிர்வாக அமைப்பு

அரவணைப்பு உதவி நலத்திட்டம்

1. திட்டத்தின் குறிக்கோள் : சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துவதற்காகவும், பெண் குழந்தைகளுக்கு கூடுதல் சத்தான உணவளிப்பதற்காகவும், தாய்மார்களுக்கு ரூ. 1200/- விதம் வழங்கப்படுகிறது.

2. உதவித் தொகை : ரூ. 1200/- வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது

3. தகுதிகள் :

அ) விண்ணப்பதாரரின் வருட வருமானம் ரூ. 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆ) விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரோ / அவரது கணவரோ புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்குக் குறையாமல் குடியிருப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

இ) விண்ணப்பதாரர் 18 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும்.

ஈ) 01-04-2005 முதல் பிறந்த பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.

உ) ஒரு தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

அ) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்

ஆ) குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

இ) ஆதார் அட்டை நகல்

5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதுச்சேரி பிராந்தியம்

துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி.

காரைக்கால்

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால்.

மாஹே / ஏனாம்

நல அதிகாரி, மாஹே / ஏனாம்.

6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் : நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும்

7. காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி

புதுச்சேரி பிராந்தியம்

இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை,

புதுச்சேரி.

காரைக்கால்

மாவட்ட ஆட்சியர், காரைக்கால்.

மாஹே / ஏனாம்

மண்டல நிர்வாகி, மாஹே / ஏனாம்.

விதவை மகளிரின் குழந்தைகளுக்கு தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயில செலவு செய்த கட்டணக்கொகையை திரும்ப அளித்தல்

1. திட்டத்தின் குறிக்கோள் : விதவை மகளிரின் குழந்தைகள் தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயில ஊக்குவிப்பதற்காக விதவை மகளிரின் குழந்தைகளுக்கு, சுருக்கெழுத்து மற்றும் தட்டெழுத்து பயில செலவு செய்த கட்டணத்தொகையை திரும்ப அளித்தல்

2. உதவித் தொகை : மாதத்திற்கு ரூ. 50/- விதம் 6 மாதங்களுக்கு தட்டெழுத்து இளநிலைக்கும் 10 மாதங்கள் வரை தட்டெழுத்து மேல்நிலைக்கும் சுருக்கெழுத்துப்பயிற்சிக்கு வழங்கப்படுகிறது.

3. தகுதிகள் :

1) வருட வருமானம் ரூ. 24,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2) விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமையும், புதுச்சேரி பிரதேசத்தில் 5 ஆண்டிற்கு குறையாமல் குடியிருப்பும் பெற்றிருத்தல் வேண்டும்

4. இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

1) வருவாய்த்துறையிடமிருந்து பெறப்பட்ட குடியிருப்பு மற்றும் வருமானச் சான்றிதழ்.

2) பயிற்று நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்.

3) கணவரின் இறப்பு சான்றிதழ்

4) ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

5) மூன்று மாதத்திற்கு கட்டணம் செலுத்திய ரசீது

6) ஆதார் அட்டையின் நகல்

7) ரேஷன் அட்டையின் நகல்

8) முதியோர் பென்ஷன் அட்டையின் நகல்

5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

புதுச்சேரி பிராந்தியம்

துணை இயக்குனர் (மகளிர் மேம்பாடு) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி

காரைக்கால்

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, காரைக்கால்.

மாஹே / ஏனாம்

நல அதிகாரி, மாஹே / ஏனாம்

6. மனுக்களை பரிசீலிக்கும் காலம் : நிதி நிலைமையை பொறுத்து அவ்வப்பொழுது குறித்த காலங்களில் விண்ணப்பங்கள் பரிசீலித்து தேர்ந்தெடுக்கப்படும்

7. காலதாமதமானால் அணுகவேண்டிய முகவரி :

புதுச்சேரி பிராந்தியம்

இயக்குனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி

காரைக்கால்

மாவட்ட ஆட்சியர், காரைக்கால்

மாஹே / ஏனாம்

மண்டல நிர்வாகி, மாஹே / ஏனாம்.

வரதட்சணை ஒழிப்பு சட்டம், 1961 / விதிமுறைகள் 1998

இச்சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்திற்கான தனிச்சட்டம் 1998ல் இயற்றப்பட்டது. இதன் கீழ் புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பகுதிகளுக்கும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் புகார்கள் விசாரிக்கப்படுகின்றன.

வ.எண்.

அதிகாரி

பகுதி

1

இயக்குநர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் முழுவதுக்கும்

2

துணை இயக்குநர் (மகளிர் நலம்), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி

புதுச்சேரி பகுதி

3

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, காரைக்கால்

காரைக்கால் பகுதி

4

பிராந்திய நிர்வாக அதிகாரி, மாஹே

மாஹே பகுதி

5

பிராந்திய நிர்வாக அதிகாரி, ஏனாம்

ஏனாம் பகுதி

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் / விதிகள் 2005

மத்திய அரசால் இச்சட்டம் 26-10-2006 ஆண்டு அமுல் படுத்தப்பட்டது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு இல்லங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவை நான்கு பிராந்தியங்களுக்கும் அறிவிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேவை புரிவோரை நியமனம் செய்ய தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது இத்திட்டத்தின் கீழ் ஆறு குடும்ப நல மையங்கள் துவக்கப்பட்டு, ஆறு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அலுவலகங்களில் குடும்ப நல ஆலோசககராகவும் பணியாற்றுகின்றனர்

பணியிடங்களில் மகளிருக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள்

உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி பணிபுரியும் மகளிருக்குப் பணியிடங்களில் நிகழும் பாலியல் கொடுமைகளை விசாரிக்க பிராந்திய வாரியான புகார்க்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துறையின் இயக்குநர் நான்கு பிராந்திய குழுக்களின் மாநில அளவிலான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

குழந்தை திருமணத் தடை சட்டம், 2006

இச்சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு 16-11-2010 அன்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களுக்கும் குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரிகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது

1) துணை இயக்குநர் (மகளிர் நலம்) - புதுச்சேரி பகுதி

2) குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி - காரைக்கால் பகுதி

3) பிராந்திய நிர்வாக அதிகாரி - மாஹே பகுதி

4) பிராந்திய நிர்வாக அதிகாரி - ஏனாம் பகுதி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம்

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம் 31-03-1993 அன்று துவக்கப்பட்டது. இக்கழகம் மூலம் பெண்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சுய தொழில் செய்ய நிதியுதவியும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது. இக்கழகத்திற்கு தேவையான நிதி இத்துறையால் ஒதுக்கப்படுகிறது.

மங்களம் திட்டம்

இத்திட்டம் 13-03-1995 முதல் தனியாக செயல்படத்துவங்கியது. மங்களம் திட்டம் நகர்ப்புற / கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டம் செயல்படத் தேவையான நிதி இத்துறையால் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மகளிர் ஆணையம்

புதுச்சேரி மகளிர் ஆணையம் 05.10.2004 அன்று அமைக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் நிலையை உயர்த்துவது, பெண்களுக்கு நிகழும் விரும்பத்தகாத செயல்களைத் தடுப்பதும் இவ்வாணையத்தின் பணிகளாகும். ஆணையத்திற்கு தேவையான நிதி இத்துறையால் ஒதுக்கப்படுகிறது.

பெண்களுக்கான மாவட்ட ஆதார மையம் (மத்திய அரசு திட்டம்)

இந்திய அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வழிகாட்டுதலின் படி மாநில அதிகார குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாண்புமிகு முதல்வர், மற்றும் அமைச்சர் தலைமை செயலர் மற்றும் செயலர் ஆகியோர் மாநில அதிகார குழு வழிகாட்டுதலின் படி மகளிர் சம்பந்தமான பிரச்சனைகளை கவனிப்பார்கள். மாநிலத்தில் உள்ள பெண்களின் சமூக பொருளாதார, மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக மாவட்ட ஆதார மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அனைத்து வளர்ச்சி திட்டங்கள் சென்றடைய வலிமைப்படுத்துவதே இந்த குழுவின் நோக்கம். முன்னிலைபடுத்துவது ஒத்துழைப்பது போன்ற செயல்களின் மூலம் திட்டங்களை செயல்படுத்தும், அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளின் பங்களிப்பின் மூலம் வளர்ச்சி, ஆக்கமுள்ள சூழல் வாயிலாக சமூக மாற்றத்தை உருவாக்கலாம். இந்த மாநில ஆதார மையம் புதுச்சேரி மகளிர் மற்றம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்ட மகளிருக்கான பொருளாதார உதவி மற்றும் ஆதார சேவைகள் அளித்தல் (மத்திய அரசு திட்டம்)

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், "பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட மகளிர்க்கான மறுசீரமைப்பு முறைமை - பொருளாதார உதவி மற்றும் ஆதரவு சேவைகள்" திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் நமது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி குற்றம் சார்ந்த சேதங்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வாரியம், மாநில அளவில் ஒன்றும், மாவட்ட அளவிலான இரண்டு வாரியங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்திரா காந்தி மகப்பேறு நல உதவி திட்டம்

(சோதனை திட்டம் - ஏனாம் பகுதி மட்டும்) மத்திய அரசு உதவி பெறும் திட்டம்

1. குறிக்கோள் : வேலைக்கு செல்லும் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் பேறு காலத்தில், அவர்களின் பணிச்சுமையையும், வருமான இழப்பையும் ஈடுசெய்யும் வகையிலும், குழந்தை பிறப்பதற்கு முன்பும், பின்பும் போதிய ஓய்வு எடுக்க வழி செய்வது.

2. நல உதவி தொகை :  ஒவ்வொரு பயனாளியும், முன் பேறு கால மற்றும் பின் பேறு கால உடல் நல பரிசோதனை, தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது, முதல் ஆறு மாத காலத்திற்கு தாய்பால் மட்டுமே குழந்தைக்கு உணவாக அளித்தல் போன்றவைகளை சரியாக முடித்து இருந்தால் ரூ.4000/- மூன்று தவணைகளில் அளிக்கப்படும்.

3. தகுதிகள் மற்றும் பயனாளிகள் :

1) 19 வயது நிரம்பிய கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும். வருமான உச்சவரம்பு இல்லை.

2) அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிப்பப்படுவதால் அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

3) பயனாளிகள் முதல் குழந்தை பெற்ற பிறகு இரண்டாவது முறை இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தாலும் மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தாலும், மகப்பேறு உதவி இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்

4. விண்ணப்பிக்கும் முறை :

1) கருவுற்ற பெண்கள் முதல் 4 மாத்திற்குள்ளாகவே அங்கன்வாடியில் பதிவு செய்ய வேண்டும்.

2) பதிவு செய்த ஒவ்வொரு பயனாளிக்கும் தாய் சேய் நல அட்டை அங்கவாடி ஊழியர்களிடமிருந்து பெற்று அதில் இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து விவரங்களையும் நேரத்துடன் துணை சுகாதார செவிலியர் மற்றும் அங்கவாடி ஊழியர் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

3) மகப்பேறு நல உதவிகள் தாய் சேய் நல அட்டையில் உள்ள அனைத்து விவரங்களும் பூர்த்திசெய்யப்பட்டிருந்தால் அதனை நல அதிகாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஏனாம் அவர்கள் பரிசீலனை செய்து இத்திட்ட பயன்களை வழங்குவார்.

5. விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் காலம் : இத்திட்டத்திற்கென்று தனி விண்ணப்பம் கிடையாது. கருவுற்ற 4 மாதத்திற்குள்ளாக அந்தந்த அங்கன்வாடியில் பயனாளிகளின் பெயரை பதிவு செய்தல் வேண்டும். நிதிநிலைமைக்கேற்ப, விண்ணப்பங்கள் தகுந்த காலங்களில் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்

6. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

நல அதிகாரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை,ஏனாம்

மண்டல நிர்வாகி, ஏனாம்.

வளரிளம் பருவப் பெண்களின் அதிகாரத்திற்கான ராஜீவ்கந்தி திட்டம் (சோதனைத் திட்டம் - காரைக்கால் மட்டும்) மத்திய அரசு திட்டம்

1. திட்டத்தின் குறிக்கோள் : பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லாத வளரிளம் பெண்களின் உடல் நலம் பேணுவது, மேம்பட்ட ஊட்டச்சத்து மற்றும் விடுமுறைகால திறமைகளை வெளிப்படுத்துதல்

2. அளிக்கும் உதவி :

1) 4 கிலோ அரிசி மற்றும் 1.125 கி.கிராம் கொண்டைக் கடலையும் மாதந்தோறும் பயனாளிகளின் விட்டிற்கே வழங்குதல்.

2) இரும்பு மற்றும் போலிக் அமில மாத்திரைகள் வழங்குதல்

3) உடல்நல பரிசோதனை மற்றும் சுகாதார சேவைகளை செய்தல்

4) ஆரோக்கியமான மற்றும் சத்துணவுக் கல்வி வழங்குதல்

5) பாலியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்குதல்

6) வாழ்க்கைதரம் பற்றிய பொதுச்சேவைகளை கல்வி மூலம் கற்பித்தல்

3. தகுதிகள் : 11 வயதிலிருந்து 14 வயதுடைய வளரிளம் பெண்கள் (பள்ளி செல்லாத குழந்தைகள்)

14 வயது முதல் 18 வயதுள்ள வளரிளம் பெண்கள் (பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகள்)

4. விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை : இந்த திட்டத்திற்கென தனியாக விண்ணப்பம் ஏதும் இல்லை. 11 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பெண்கள் அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பயனாளிகளுக்கு கிஷோரி கார்டு வழங்கப்படும்.

5. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி,

கிளை அலுவலகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, காரைக்கால்.

ஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, புதுச்சேரி அரசு

2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top