অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்

பெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்

பிரதமரின் வேண்டுகோள்

ஆணும் பெண்ணும் சமம் தான் என்பது நமது மந்திரம்

“பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அவளுக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் தான் இது.

நோக்கம்

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் அரியானா மாநிலம் பானிபட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய மனிதவள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

இந்த திட்டத்தின் பிரதான அம்சமே பெண் குழந்தையை கருவிலே முன்கூட்டி கண்டறிந்து சிசுவதை செய்வதை தடுக்கும் சட்டமான பி..சி. மற்றும் பி.என்.டி.டி. சட்டத்தினை முழுமையாக அமல்படுத்துவதாகும். அதாவது, தேசிய அளவில் பெண்குழந்தை குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். பெண்குழந்தை பிறப்பு வீதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களை தேர்வு செய்து பெண் குழந்தையின் தேவை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து பிரச்சாரம் செய்வது ஆகியவை முக்கிய அம்சமாகும். இதுபோன்று பெண்குழந்தைகள் குறித்து மக்கள் மனதில் உள்ள எண்ணத்தினை மாற்றுதல், உணர்வுப்பூர்வமாக்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமுதாய அடிப்படையிலான ஆதரவை திரட்டுதல் ஆகியவையும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.

பெண்குழந்தையுடன் சுயபடம்

பெண்குழந்தைகள் குறித்து இந்திய சமுதாயத்தில் ஊறிகிடக்கும் மனப்போக்கை மாற்றுவது தான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய முயற்சியாக உள்ளது. அரியானா மாநிலத்தில் பிபூர் கிராமத்தலைவர் “பெண்குழந்தையுடன் சுயபடம்” ( செல்பி) எடுக்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை பிரதமர் நரேந்திரமோடி தனது மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பாராட்டி உள்ளார். இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தங்கள் மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு உலக அளவில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் இதுபோன்று செல்பி போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் இது பெண்குழந்தைகளை பெற்றுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சிகள்

பெண்குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பலதுறை சார்ந்த மாவட்ட அளவிலான செயல் திட்டங்களும் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் அது சார்ந்த பயிற்சிகள், முதல் நிலை பணியாளர்களுக்கும் மாவட்ட அளவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 9 முறை அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரேதசங்களையும் உள்ளடக்கி இத்தகைய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சில உள்ளூர் முயற்சிகள்

பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் கீழ், பித்தோரோகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்விக்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கு இதற்காக மாவட்ட முனைப்புக்குழு மற்றும் வட்ட முனைப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்குழந்தை பிறப்பு விகிதாச்சாரத்தினை சமன்படுத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை இந்த அமைப்புகள் அழகாக தடம்போட்டு கொண்டு செல்கின்றன. சமுதாயத்தில் ஆழமாக ஊடுருவிச்சென்று இந்த திட்டத்தின் சிறப்பினை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது இந்த அமைப்புகள். அரசு துறை ஊழியர்கள், இராணுவப் பள்ளிகள், மற்றும் இதர பள்ளிக்கூடங்களின் ஒத்துழைப்போடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேரணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம், திட்டத்தின் தாக்கத்தினை அதிகரிப்பதற்காக பித்தோரோகர் மாவட்டத்தில் தெரு முனை நாடகங்களும் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன. கிரமாங்களில் மட்டும் இந்த தெரு முனை நாடகங்கள் நடத்தப்படவில்லை, மக்கள் கூடும் சந்தைகளிலும் நடத்தப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு முயற்சிகள்

பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நாடகங்களில் காட்சி சார்ந்த கதையாக மக்களிடம் எடுத்துச் செல்லும் போது, அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கான பிரச்சினைகள், அவர்களின் கஷ்டங்கள், வாழ்க்கையில் அவள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவையும் இந்த தெரு முனை நாடகங்களில் எடுத்துச் சொல்லப்படுகிறது. இது தவிர, கையெழுத்து பிரச்சாரம், உறுதிமொழி கூறுதல் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி, பெண் குழந்தைகள் பாதுகாப்போம், கற்பிப்போம் திட்டத்தின் தகவல்கள் முதுநிலை கல்லூரி மாணவர்கள் 700 பேர் மற்றும் இராணுவத்தினர் வாயிலாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உங்கள் கனவுக்காக ஒருநாள் வாழ்வோம் - திட்டம்

பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. உங்கள் கனவுக்காக ஒருநாள் வாழ்வோம் என்ற திட்டத்தின் கீழ் அந்த மாவட்ட நிர்வாகம் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு முன்மொழிவு விண்ணப்பங்களை கொடுத்துள்ளது. இதன்படி, அந்த மாணவிகள் தாங்கள் விருப்பம் போல டாக்டர், போலீஸ் அதிகாரி என்ஜினீயர் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் செலவிட முடியும்.

இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 70க்கும் மேற்பட்ட மாணவிகள் இதுவரை இத்தகைய தொழில் வல்லுநர்களுடன் ஒரு நாளை மகிழ்ச்சியுடன் செலவிட்டுள்ளனர். அவர்களின் தொழில் சார்ந்த சூழலை அவர்கள் உணர்ந்துகொள்ள முடிகிறது. அத்துடன் அவர்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கான முடிவுகளை எடுக்கும் நல்ல வாய்ப்பாகவும் இது அமையும்.

ஆதாரம் : http://www.pmindia.gov.in/ta/© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate