பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அமுத சுரபி

அமுத சுரபி நிதி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அமுத சுரபி பெறும் முறை

”அமுத சுரபி நிதி” திட்டத்திலிருந்து கீழ்கண்ட வழியில் விடுவிக்கப்படுகின்றது.

நிதி அளிப்பவர்

நிதி பெறுபவர்

தவணை

மானியம் / கடன்

மாவட்ட அலுவலகம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

2 ( 60 : 40 )

மானியம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

கூட்டமைப்பு

2 ( 60 : 40 )

மானியம்

கூட்டமைப்பு

சுய உதவிக்குழு மூலமாக உறுப்பினர்களுக்கு

கூட்டமைப்பின் முடிவுப்படி

கடன்

அமுத சுரபிக்கான இலக்குகள்

( அ ) முதல் தவணை நிதி பெற கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அடைய வேண்டியவை

 • குறைந்தபட்சம் 80ரூ தகுதி வாய்ந்த இலக்கு மக்களை ( பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உட்பட ) சுய உதவிக் குழுவாக இணைத்திருத்தல்.
 • வாழ்வாதார வள ஆய்வு கிராம சபையால் அங்கீகரிக்கப்பட்டு அதன் தகவல்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருத்தல்.
 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு புதுவாழ்வு திட்ட விதி முறைப்படி மறு சீரமைக்கப்பட்டிருத்தல் (ம) பதிவு செய்தல்.
 • மாவட்ட புதுவாழ்வு சங்கமும், கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் ஒப்பந்தம் ( பிற சேர்க்கை- 2 ) ஏற்படுத்திருத்தல்.
 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு அமுதசரபி மற்றும் பொது நிதி வங்கி கணக்கு துவங்கி இருத்தல் வேண்டும்.

( ஆ ) முதல் தவணை நிதி பெற கூட்டமைப்பு அடைய வேண்டியவை

 • அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் குறைந்தபட்சம் தலா ரூ.20/- உறுப்பினர் கட்டணம் மற்றும் சந்தா (குறைந்தபட்சம் மாதம் ஒன்றிற்கு ஒரு உறுப்பினர் ரூ.5/- வீதம்) வசூல் செய்தல்.
 • பொதுக்குழு அனுமதிக்கும் தொகையினை உறுப்பினர் பங்குத் தொகையாக வசூல் செய்தல்.
 • குறைந்தபட்சம் 70ரூ குழுக்களின் ஆண்டு “நிதி திட்டத்தினை” ஊராட்சி அளவில் தொகுத்த பின் கூட்டமைப்பின் ஆண்டு திட்டம் தயார் செய்து பொதுக் குழுவின் ஒப்புதல் பெறுதல்.
 • கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், துணைக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்கள் அடிப்படை ஆளுமை, நிதி மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு பயிற்சி முடித்தல் மற்றும் களப் பயணம் மேற்கொண்டிருத்தல்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் சங்கமாக பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருத்தல்.

( இ ) இரண்டாம் தவணை பெற அடைய வேண்டியவை ( கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கூட்டமைப்பு )

 • முதல் தவணை நிதியில் 60ரூ தொகை கடனாக வழங்கப்பட்டதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை சமூக தணிக்கை குழுவிடமிருந்து பெற்று கிராம சபையின் ஒப்புதலுடன் மதிப்பீட்டு அணிக்கு அளித்தல்.
 • பயன்படுத்தப்பட்ட தொகையில் குறைந்தது 80ரூ இலக்கு மக்களை சென்று அடைந்திருத்தல் மற்றும் 70 சதவீதம் தொழிலுக்காக பயன்படுத்தி இருத்தல்..
 • 3 மாதத்திற்கு மேல் இடர்பாட்டில் உள்ள கடன் தொகை (மூன்று மாதத்திற்கு மேல் தவணை தவறிய கடன் நிலுவை) மொத்த கடன் நிலுவையில் 5ரூற்கும் குறைவாக இருத்தல்.
 • கூட்டமைப்பு நிர்வாகச் செலவினங்களை தங்களது வருமானத்தின் மூலமே பூர்த்தி செய்யும் நிலையினை அடைந்திருத்தல்.

மதிப்பீடு செய்தல்

நிதியினைப் பெற தகுதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கூட்டமைப்பு மேற்கண்ட இலக்குகள் அடைந்ததை கீழ்கண்ட இரு அணியினர் மதிப்பீடு செய்வர். மதிப்பீட்டு அணியினரின் பரிந்துரையின் பின்னரே நிதி விடுவிக்கப்படும்.

 • சமூக தணிக்கை குழு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணித்தலைவர்.
 • மண்டல மதிப்பீட்டு அணி.

அமுத சுரபி நிதி பயன்பாடு

கூட்டமைப்பு அமுத சுரபி நிதியை, தனி வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும்.

 • கூட்டமைப்பின் பொதுக்குழு அமுத சுரபி நிதி குறித்த பொதுவாக விதிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும்.
 • அந்த விதிமுறைகள் பின்வருமாறு இருக்கலாம்.

அ. கடன் பெறுவதற்கான தகுதி

 • குழு சமூக தரமதீப்பீட்டில் “நன்று” மற்றும் அதற்கு மேலான நிலை பெற்றிருத்தல்.
 • சந்தா, உறுப்பினர் கட்டணம், பங்கு தொகையினை தவறாமல் செலுத்தியிருத்தல்.
 • குழுவிற்கான நிதித் திட்டம் தயாரித்தல்.
 • மேலும் இரண்டாவது முறை கடன் பெறும் குழுக்கள் தணிக்கை அறிக்கை, காப்பீடு ஆவணங்கள் கூடுதலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்

ஆ. கடனுக்கான நோக்கம்

தொழில் கடன் (குறைந்தது 70%)

 • புதிய தொழில் தொடங்க
 • ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை மேம்படுத்த

தொழில் சாரா கடன் (அதிகபட்சம் 30%)

 • மருத்துவ கடன், கல்வி கடன், கந்துவட்டி கடனை அடைத்தல் போன்றவை

இ. கடன் தொகை நிர்ணயித்தல்

 • குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் தொழில் திட்டத்தினை அடிப்படையாக கொண்டு அதிகபட்சமாக ரூ.30,000/- வரை கடன் வழங்கலாம்.
 • குழுவிற்கு வழங்கக்கூடிய அதிக பட்ச கடன் தொகையினை பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.

ஈ. வட்டி விகிதம்

 • குழுவிற்கு விதிக்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 12ரூ இருக்கலாம்
 • குழு, உறுப்பினர்களுக்கு வழங்கும் கடனுக்கான ஆண்டு வட்டி 12ரூ லிருந்து 15ரூ வரை இருக்கலாம். தவணை தவறுதல் வட்டி (அபராத வட்டி) குறித்த முடிவுகள் மீது பொதுக்குழுவின் ஒப்புதல் பெறுதல் அவசியம்.

உ. தவணை

 • கடன் நோக்கத்திற்கு தக்கவாறு கூட்டமைப்பு தவணையினை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
 • கூட்டமைப்பு நிர்ணயிக்கும் தவணை காலத்தை விட மிகவும் குறைவான தவணையினை குழு தனது உறுப்பினர்களுக்கு நிர்ணயிக்க கூடாது.

ஊ. கடன் வழங்கும் போது கூட்டமைப்பு கவனிக்க வேண்டியது

 • குறைந்தபட்சம் 80ரூ கடன் தொகை இலக்கு மக்களை அடைந்திருத்தல்.
 • குறைந்தபட்சம் 70ரூ கடன் தொகையினை தொழில் கடனாக வழங்கி இருத்தல்.

கடன் வழங்குவதற்கான படி நிலைகள்

 1. அமுதசுரபி நிதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளம்பரப்படுத்துதல்
 2. உறுப்பினர் தேவையறிந்து குழு அளவில் விண்ணப்பம் தயாரித்தல்
 3. குடியிருப்பு அளவில் கடன் மனுக்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தல்
 4. கூட்டமைப்பு கடன் விண்ணப்பங்களை பெறுதல்
 5. கூட்டமைப்பில் பெற்ற விண்ணப்பத்தை வாழ்வாதார துணைக்குழு ஆய்வு செய்தல்
 6. செயற்குழுவில் நிதிவிடுவிப்பது குறித்த முடிவுகளை எடுத்தல்
 7. குழுக்களுக்கு காசோலை விடுவித்தல்
 8. உறுப்பினர்கள் குழு மூலம் கடன் பெறுதல்

படி - 1 அமுத சுரபி நிதி குறித்த விழிப்புணர்வு

அமுத சுரபி நிதி பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து விளம்பரப்படுத்துதல்

அமுதசுரபி கடன் குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இத்தகவலை கீழ்கண்ட வழிகளில் செய்யலாம்.

 • கலை நிகழ்ச்சிகள் மூலம்
 • விளம்பரம் செய்வதன் மூலம்
 • குடியிருப்பு அளவிலான கூட்டங்களில் எடுத்துரைப்பதன் மூலம்
 • துண்டு பிரசுரம் செய்தவன் மூலம்
 • தகவல் பலகை மூலம்

மேற்கண்ட வகையில் விளம்பரங்களை செயற்குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளும். இதற்கான செலவுகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கமே ஏற்றுக் கொள்ளும்.

படி - 2 உறுப்பினர் தேவையறிந்து குழுவில் விண்ணப்பம் தயாரித்தல்

 • உறுப்பினர்களின் ஓர் ஆண்டிற்கான நிதி தேவையை அறிந்த பின் அத்தொகையினை குழு திரட்டுதல்

நுகர்வு கடன்

மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கடன்

பெரிய அளவிலான தொழில் தொடங்க கடன்

குழுவால் பூர்த்தி செய்ய முடியாத தொழில் மற்றும் பிற கடன்

குழு மூலம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம்

வங்கி கடன் மூலம்

கூட்டமைப்பின் மூலம்

 • கூட்டமைப்பு மூலம் பெறக்கூடிய கடனுக்கான விண்ணப்பத்தினை தயார் செய்து குடியிருப்பு அமைப்பு மூலம் கூட்டமைப்பிற்கு அளிக்க வேண்டும்.
 • குழுவின் நிதி திட்டத்தின் அடிப்படையில் அம்மாதத்திற்கான நிதி தேவையை அறிய வேண்டும்.
 • உறுப்பினரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான கடன் தொகையை கீழ்கண்டவற்றில் எந்த வகையில் பெறுவது என முடிவு செய்தல் வேண்டும்

படி - 3 குடியிருப்பு அளவில் கடன் மனுவை ஆய்வு செய்து பரிந்துரை செய்தல்

 • சுய உதவிக் குழுக்கள் நிதிதிட்டம் முடித்திருத்தலை உறுதி செய்தல்
 • சமூக தர மதிப்பீட்டில் குழு பெற்ற தரத்தை உறுதி செய்தல்
 • கூட்டமைப்பிற்கு குழுவானது பங்குத்தொகை, சந்தா, நுழைவுக் கட்டணம் செலுத்தி இருத்தலை உறுதி செய்தல்.
 • சுய உதவிக்குழுவின் கூட்டம் தொடர்ந்து முறையாக நடந்து இருத்தலை உறுதி செய்தல்
 • குழுவின் சார்பான பிரதிநிதி குடியிருப்பு அமைப்பின் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பதை உறுதி செய்தல்.
 • விண்ணப்பத்தில் இலக்கு மக்களின் தரம் சரியாக குறிப்பிட்டுள்ளதை உறுதி செய்தல்.
 • குழுவின் கடன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருத்தலை உறுதி செய்தல்
 • குழுவின் தணிக்கை, காப்பீடு செய்தலை உறுதி செய்தல்.

குடியிருப்பு அமைப்பு கூட்டத்தில் உறுதி செய்ய வேண்டியவை

 • கடன் விண்ணப்பங்களை குடியிருப்பு அமைப்பின் கூட்டத்தில், அனைவரின் பங்கேற்புடன் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
 • குடியிருப்பு அமைப்பின் பரிந்துரைகள் அதன் தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
 • தீர்மானத்தின் அடிப்படையில் குடியிருப்பு அமைப்பின் செயலாளர் மற்றும் பொருளாளர் பரிந்துரைத்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
 • குடியிருப்பு அமைப்பு கடன் விண்ணப்பத்தை பெற்ற மூன்று தினங்களுக்குள் கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட வேண்டும்.
 • பின்பு குடியிருப்பு அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட கடன் விண்ணப்பத்தினை கூட்டமைப்பின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க செய்ய வேண்டும்.

படி - 4. கூட்டமைப்பு கடன் விண்ணப்பங்களை பெறுதல்

குடியிருப்பு அளவிலான பிரதிநிதிகள் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கடன் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.

அவ்விவரத்தை கணக்காளர் “கடன் பேரேட்டின்” முதல் பகுதியில் பதிய வேண்டும்.

படி - 5. வாழ்வாதார துணைக்குழுவின் பரிந்துரை

விண்ணப்பித்த கடனுக்கான தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, தேவைப்படின் உறுப்பினரை ஆய்வு செய்யலாம் தனது பரிந்துரையை தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்த பின் நேரடியாக செயற்குழுவிற்கு அளிக்கும்.

ஆய்வின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 • உள்ளூர் வளங்களுக்கு ஏற்ற தொழிலா?
 • தொழில் பற்றிய முன் அனுபவம் / பயிற்சி உள்ளதா?
 • தொழிலுக்கு தேவைப்படும் தொகை சரியாக கணக்கிடப்பட்டு உள்ளதா?
 • கோரப்பட்டுள்ள கடன் தொகை வழங்கும் பட்சத்தில் தொழில் தொடங்க முடியுமா?
 • தொழில் இலாபகரமானதா?

படி - 6. கூட்டமைப்பு செயற்குழுவின் முடிவுகள்

செயற்குழு உறுப்பினர்கள் நிதி விடுவிப்பது குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். கடன் குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் இரண்டு பிரதிநிதிகளின் நிர்வாகிகள் தவிர பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும்.

அ. முதல் கடன் விடுவித்தலுக்கு முன்பு கவனிக்க வேண்டியவை

 • குறைந்தபட்சம் 60ரூ விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
 • குறைந்தது 70ரூ இலக்கு மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் ஆண்டு திட்டம் தொகுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல்.

ஆ. ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் நிதி விடுவிக்கும் போது கவனிக்க வேண்டியவை :

 • குடியிருப்பு அமைப்பு மற்றும் துணைக்குழுவின் பரிந்துரையை உறுதி செய்தல்.
 • கடன் கோரியவர்களில், இலக்கு மக்கள், இலக்கு மக்கள் அல்லாதோர் எத்தனை நபர்கள் என்றும் கடன் கேட்ட தொகை எவ்வளவு என்றும் பார்த்தல். (ஏனெனில் குறைந்த பட்சம் 80ரூ இலக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்)
 • கேட்கப்படும் கடன் தொகையில் தொழில் சார்ந்த மற்றும் தொழில் சாரா கடனுக்காக கேட்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதை பார்த்தல் (குறைந்த பட்சம் 70ரூ தொழில் சார்ந்த கடனாக இருத்தல் வேண்டும்)
 • குழு முந்தைய கடன்களைத் திருப்பி செலுத்திய விதம்.
 • குழுவின் வங்கி மற்றும் வெளிநிறுவன கடன் நிலுவை (தற்போது)
 • குழுவின் கடன் திரும்ப செலுத்தும் தகுதி.
 • உறுப்பினர் குடும்பம் இதுவரை பெற்றுள்ள பயன்கள்.
 • கூட்டமைப்பின் தற்போதைய வங்கி இருப்பு.
 • கூட்ட முடிவுகளை தீர்மானமாக எழுதச் சொல்ல வேண்டும்.
 • பின் முடிவுகளை கூட்டமைப்பின் அறிவிப்பு பலகையில் எழுத சொல்ல வேண்டும்.

படி - 7 கூட்டமைப்பு கடன் வழங்குதல்

கடன் குறித்த முடிவுகள் அறிவிப்பு பலகையில் குறைந்த பட்சம் 3 நாட்கள் எழுதப்பட்டுள்ளதை உறுதி செய்த பின், செயற்குழு, சுயஉதவிக்குழு பிரதிநிதிகளிடம் காசோலையை வழங்க வேண்டும். அப்போது செயற்குழு கீழ்கண்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.

 • கடனை குழுவின் பெயரில் காசோலையாகத்தான் வழங்க வேண்டும்.
 • கூட்டமைப்பின் பணப்பட்டுவாடா ரசீதில் குழு நிர்வாகிகள் கையொப்பம் இட வேண்டும்
 • கடன் திருப்பம், வட்டி விகிதம் போன்ற விவரங்கள் தெளிவாக எழுதப்பட்ட கடன் அட்டையை குழுவிற்கு வழங்க வேண்டும்.
 • கடன் பேரேடு மற்றும் ரொக்க பேரேட்டில் கடன் தொகையை பதிவு செய்ய வேண்டும்.
 • பிராமிசரி நோட்டில் கடன் வழங்கும் தொகை, கடன் திரும்ப செலுத்தும் தவணை குறித்து தெளிவாக பூர்த்தி செய்து குழு நிர்வாகிகளிடம் கையொப்பம் பெற வேண்டும்.

படி - 8 உறுப்பினர்களுக்கு குழு கடன் வழங்குதல்

கூட்டமைப்பிலிருந்து கடனைப் பெற்ற சுய உதவிக்குழு கூட்டம் நடத்தி உரிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 • குழு காசோலை பெற்ற 3 நாட்களுக்குள் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
 • கூட்டமைப்பு யாருக்கு, எவ்வளவு தொகை வழங்கியதோ அதே நபருக்கு அதே தொகை வழங்க வேண்டும்.

குழுவின் பதிவேடுகளிலும் ( அமுதசுரபி - வெளிக்கடன் ) உறுப்பினர்களின் தனி நபர் அட்டையிலும் கடன் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

கடன் கண்காணிப்பு

கூட்டமைப்பு கடன் வழங்கிய பின் அக்கடன் பயன்பாட்டினை தொடர்ந்து கண்காணித்தல் மிக அவசியமாகிறது. இதனை குடியிருப்பு அமைப்புகள் மற்றும் கடன் மற்றும் கண்காணிப்பு துணைக்குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.

கண்காணிக்கப்பட வேண்டியவை

* உரிய நபருக்கு, உரிய நேரத்தில் சரியான தொகை சென்றடைதலை உறுதி செய்தல்.

* கடன் பெற்ற நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல்.

* உருவாக்கப்பட்ட சொத்துக்கள் முறையாக காப்பீடு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தல்.

* கடன் பெற்றவர்கள் கடன் தொகையை முறையாக திரும்ப செலுத்துவதை கண்காணித்தல்.

* குழுக்கள் கடன் செலுத்த தவறும் போது கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 • அபராத வட்டி விதித்தல்
 • தவணை தவறும் குழுக்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / கூட்டமைப்பு / வங்கியிடமிருந்து பிற பயன்களை வழங்காமலிருத்தல்.
 • சொத்துக்களை முடக்குதல் போன்றவை.

ஒவ்வொரு கடனுக்குமான பயன்பாட்டுச் சான்றிதழை செயற்குழு பராமரிக்க வேண்டும். மேலும் கடன் பயன்பாடு குறித்து ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் தவறாது விவாதிக்கப்பட வேண்டும்.

கடன் திருப்பத்தினை கண்காணித்தல்

அ. வழங்கிய கடனை முறையாக வசூல் செய்யும் கூட்டமைப்பே வளர்ச்சி காண முடியும். இவ்வாறு வசூல் செய்வதற்கு கூட்டமைப்பில் அனைத்து நிலைகளில் உள்ள உறுப்பினர்கள் பொறுப்பாவார்கள்.

 1. குழு
 2. குடியிருப்பு அமைப்பு
 3. கடன் மற்றும் கண்காணிப்பு துணைக்குழு
 4. செயற்குழு
 5. பொதுக்குழு

ஆ. கடன் திருப்பத்தை கண்காணிக்கும் முறைகள்

வ.எண்

அமைப்பு

கருவிகள்

1

சுய உதவிக்குழு

கடன் அட்டை

2

குடியிருப்பு அமைப்பு

கேட்பு வசூல் அட்டவணை (DCB)

3

கடன் மற்றும் கண்காணிப்புக் குழு

கேட்பு வசூல் அட்டவணை (DCB)

4

செயற்குழு

கேட்பு வசூல் அட்டவணை (DCB) மற்றும் கடன் கண்காணிப்பு பதிவேடு

5

பொதுக்குழு

அறிக்கைகள்

கூட்டமைப்பின் கடன் திருப்பம் 100% இருப்பது அவசியம்

அமுத சுரபி நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் முறை

மாதந்தோறும் தேவைப்படும் தொகை மற்றும் நிதி இருப்பு ஆராய்ந்து அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும் அதாவது,

1. அதிக விண்ணப்பத்தை நிலுவையில் வைத்து உறுப்பினர்களிடம் தேவையற்ற அதிருப்தியை உருவாக்க கூடாது,

2. அவசர தேவைக்கு நீங்களாக ( உதாரணமாக ரூ10,000 முதல் ரூ25,000). அதிக தொகையை கையிருப்பாக வைத்திருக்கக்கூடாது. ஏனெனில், பயன்படுத்தாத நிதி வருமானம் ஈட்டாது.

3. கூட்டமைப்பில் வசூலாகும் தொகையினை அன்றைய தினமே வங்கியில் செலுத்தப்பட கையிருப்பு ரூ. 500/வேண்டும் - க்கு மேல் இருக்கக்கூடாது.

4. தேதி தவறாமல் தவணை தொகையை வசூல் செய்ய வேண்டும்.

கூட்டமைப்பினை தரமதிப்பீடு செய்தல்

கூட்டமைப்பின் வளர்ச்சி நிலைகளை மதிப்பீடு செய்வது தரமதிப்பீடு எனப்படும்.

அ. தரமதிப்பீட்டின் அவசியம்

 • கூட்டமைப்பு அதன் வயதிற்கேற்ப வளர்ச்சி நிலையை அடைந்துள்ளதா? என்பதை அறிவது.
 • கூட்டமைப்பிற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் அவற்றிற்கு தேவையான உதவிகள் புரிவது.
 • வெளி நிதி நிறுவனங்களுக்கு கூட்டமைப்பின் பேரில் நம்பிக்கை ஏற்பட செய்தல்.

ஆ. கூட்டமைப்பு தர மதிப்பீட்டு அணி

இந்த தரமதிப்பீட்டு அணியில் 3 உறுப்பினர்கள் இருப்பர்.

 • சிறப்பாக செயல்படும் மக்கள் அமைப்பில் இருந்து (சுய உதவிக்குழு, கூட்டமைப்பு, கிராம ஒழிப்பு வறுமை சங்கம்) இருவர். ( மணிமேகலை விருது பெற்ற கூட்டமைப்பு (அ) சுய உதவிக் குழுவில் முன்னுரிமை அளிக்கலாம்.)
 • அக்கூட்டமைப்பிற்குரிய வங்கி பிரதிநிதி.
 • உதவி திட்ட மேலாளர் (வா.கா) அல்லது உதவி திட்ட அலுவலர் (மதி) ஆகியவர்கள் இந்த சமூக தரமதிப்பீட்டில் இருப்பர்.

இ. தரமதிப்பீட்டு காலம்

 • மறுசீரமைக்கப்பட்ட 6 மாத கால முடிவில் முதல் கட்ட தரமதிப்பீடு செய்யப்படும்.
 • முதல் வங்கி கடன் இணைப்பு பெற்ற 6 மாத முடிவில் இரண்டாம் கட்ட தரமதிப்பீடு செய்யப்படும்.

ஈ. தரமதிப்பீட்டின் நிலை

 • தரமதிப்பீட்டில் ஹ மற்றும் க்ஷ நிலை பெற்றவை “தேர்ச்சி பெற்றவை” ஆகும்.
 • ஊ நிலை பெற்ற கூட்டமைப்புகள் 3 மாதத்திற்கு பிறகு மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

PLF ஊக்க நிதி

 • 6 மாதம் முடிவடைந்து தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெறும் கூட்டமைப்புகளின் சிறப்பான செயல்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அரசு ரூ.1. 00 இலட்சம் ரூபாயை ஊக்க நிதியாக வழங்குகிறது.
 • இந்நிதியை குழுக்களுக்கு கடன் வழங்க கூட்டமைப்புகள் பயன்படுத்தலாம்.
 • அதன் மூலம் ஈட்டும் வட்டி வருமானத்தினை கூட்டமைப்பின் நிர்வாகச் செலவினத்திற்கு கூட்டமைப்பு பயன்படுத்தலாம்.

வங்கிகடன்

 • கூட்டமைப்பு வங்கியிடமிருந்து மொத்த கடன் பெற்றும் உறுப்பினர் குழுக்களின் கடன் தேவையை பூர்த்தி செய்யலாம்.
 • அமுத சுரபியை திறம்பட உபயோகிக்கும் மற்றும் தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றுள்ள கூட்டமைப்புகள் தேவைப்படின் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூட்டமைப்பின் அறிக்கைகள்

 • கூட்டமைப்பு தன் மாதாந்திர செயல்பாடு மற்றும் நிதி பயன்பாட்டு முன்னேற்ற அறிக்கைகளை பிரதி மாதம் குறிப்பிட்ட படிவத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 • அவ்வறிக்கைகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆய்வு செய்து கூட்டமைப்பின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்கும்.
 • கூட்டமைப்பு தனது மாதாந்திர முன்னேற்ற அறிக்கைகளை அறிவுப்புப் பலகை வெளிப்படுத்துதல் வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.88
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top