பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல்

குழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்தால் ஏற்படும் பலன்கள்

சுய உதவிக்குழுவின் வளர்ச்சிக்கு தேவையான கீழ்கண்ட உதவிகள் கிராமத்திலேயே கிடைக்கும்

 • பயிற்சி (உறுப்பினர், நிர்வாகி, கணக்காளர்)
 • புத்தகப் பராமரிப்பு
 • சமூகத் தர ஆய்வு (ழுசயனiபே)
 • ஆதார நிதி
 • தரமதிப்பீடு (ஊசநனவை சயவiபே)
 • நிதி இணைப்பு (வங்கி, அமுதசுரபி, பிற நிறுவனம்) பெற உதவி
 • கண்காணிப்பு
 • தேவையான தகவல்களை உரிய நேரத்தில் வழங்குதல்
 • தொழில் துவங்க உதவி
 • நிதி திட்டம் தயாரிக்க உதவி
 • நிதியின் சிறப்பான பயன்பாட்டிற்கு உதவி
 • தணிக்கை
 • குழுக்காப்பீடு, உடல் நல காப்பீடு, சுகாதார கண்காணிப்பு.
 • தனிநபர் அடையாள அட்டை
 • அரசின் நல திட்ட தகவல்கள்

கிராமத்தில் உள்ள அனைத்துவகை குழுக்களும் (பழைய மற்றும் புதிய மகளிர், இளைஞர், மாற்றுத்திறனாளி, பழங்குடியினர் குழுக்கள்) வறுமை ஒழிப்புச் சங்கத்தில் இணையலாம்.

இலக்கு மக்கள் அல்லாத சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதார நிதியுதவி தவிர மற்ற அனைத்து வகை உதவிகளையும் பெற முடியும்.

80% - 100% இலக்கு மக்கள் உள்ள புதிய குழுக்களுக்கு வங்கி இணைப்பு இல்லாத பழைய குழுக்களுக்கும் ஆதார நிதி வழங்கலாம்.

சுய உதவிக் குழுக்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைய பொதுவாக செய்ய வேண்டியவை

 • சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தில் இணைவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
 • குழுவில் இணைவதற்கான தீர்மான நகல், குழு பற்றிய அடிப்படைத் தகவல்கள், வங்கிப்புத்தக நகல், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைவதற்கான விண்ணப்பம் போன்றவற்றை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் அனைத்துக் குழுக்களும் இணையும் முகாம்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கமானது முதல் தவணை நிதி பெற்ற உடன், சங்கக் கூட்டத்தில் அக்கிராமத்தில் உள்ள அனைத்து குழுக்களையும் தங்களுடன் இணைக்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.
 • முகாம் நடத்துவதற்கான நாளை முடிவு செய்து அனைத்து குடியிருப்புகளிலும் தண்டோரா போட வேண்டும்.
 • அனைத்து குடியிருப்பு பிரதிநிதிகளிடமும் முகாம் நடத்தவிருக்கும் நாளுக்கு முன்பாகவே குழுக்களை இணைப்பதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுக்க வேண்டும்.
 • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முகாம் நாளன்று குழுக்கள் கொண்டு வந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் கொடுத்து தங்களை இணைத்துக் கொள்ளும்.

முகாம் நடத்துவதன் மூலம் ஏற்படும் பயன்கள்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சுய உதவிக்குழுக்களுக்கு ஆற்றும் பணிகளை அனைத்து குழுக்களும் அறிந்து கொள்ளுதல்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகளை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளுதல்
 • சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்க மற்றும் குழுவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லாத பட்சத்தில் புத்தக பராமரிப்பிற்காக அனைத்து பகுதிகளிலிருந்தும் சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் (அ) தேவைப்படின் புதியதாக தேர்வு செய்தல்
 • குழுக்களின் தேவை மற்றும் பிரச்சனைகளை கண்டறிதல்
 • ஊராட்சியின் அனைத்து குழுக்களையும் ஒரே சமயத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல்

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணையும் குழுக்கள் பின்பற்ற வேண்டியவை

 • குழு செயல்பாடுகளில் புதுவாழ்வு திட்டத்தின் உயிர் மூச்சினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
 • குழுவிற்கான விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
 • கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், கிராம சபை மற்றும் ஊர் கூட்டங்களில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணையும் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைய வேண்டும்.
 • பழைய குழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைக்கும் பணியினை சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர் மேற்கொள்வதற்கு ஒரு குழுவிற்கு ரூ.75 வரை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் வழங்கலாம்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தன்னுடன் இணைந்த குழுக்களின் விவரங்களை தீர்மானத்தில் எழுதி, குழுக்களின் விவரப் பதிவேட்டில் தொகுத்து பராமரிக்க வேண்டும்.
 • இணையும் குழுக்கள் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

2.825
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top