பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழுவின் நிதி செயல்பாடுகள்

குழுவின் நிதி செயல்பாடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அ) சந்தா

 • உறுப்பினர்கள் குழுவில் சேர்வதை உறுதி செய்ய செலுத்தப்படும் தொகை.
 • குழு உறுப்பினர்கள் சந்தா தொகையினையும், கால இடைவெளியையும் (மாத / வருட சந்தா) முடிவு செய்யலாம்.
 • இதனை குழுவின் நிர்வாக செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆ) சேமிப்பு

 • அனைத்து உறுப்பினர்களும் குறைந்த பட்ச தொகையை கட்டாயமாக சேமிக்க வேண்டும்.
 • உறுப்பினர்கள் அவரவர் விருப்பம் மற்றும் தகுதிக் கேற்ப குறைந்தபட்ச சேமிப்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
 • சேமிப்பினை விருப்ப சேமிப்பாகவும், கட்டாய சேமிப்பாகவும், சிறப்பு சேமிப்பாகவும் குழுவின் முடிவின் படி சேமிக்கலாம்.
 • இது தவிர தனி நபர் பண்டிகை கால சேமிப்பு மற்றும் கல்வி தேவைக்கான சேமிப்பு போன்றவைகளுக்காகவும் சேமிப்பு செய்யலாம். இச்சேமிப்பை குழுவின் விதிமுறைக்கு உட்பட்டு உறுப்பினர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
 • குழு ஆண்டு தோறும் சேமிப்பு மீதான வட்டியை கணக்கிட வேண்டும். வட்டி சதவீதத்தை குழுவின் வருமானத்திற்கு உட்பட்டு நிர்ணயித்து கொள்ளலாம்.

சேமிப்பிற்கான வட்டி கணக்கிடுதல்

சேமிப்பிற்கான வட்டி விகிதம் சராசரி சேமிப்புத் தொகையின் மீது கணக்கிடப்பட வேண்டும். சராசரி சேமிப்பை கணக்கிடும் பொழுது ஆரம்ப சேமிப்பு மற்றும் இறுதி சேமிப்பு இரண்டையும் கூட்டி 2ஆல் வகுக்க வேண்டும்.

சேமிப்பு மீதான வட்டி - சராசரி சேமிப்பு * ஆண்டு வட்டி வீதம்

சராசரி சேமிப்பு - (ஆரம்ப சேமிப்பு + இறுதி சேமிப்பு ) / 2

இ) கடன்

 • உறுப்பினர்களின் தேவை மற்றும் குழுவின் நிதி நிலைக்கேற்ப உள்கடன் அல்லது வெளிக்கடன் வழங்கலாம்.
 • கடன் தேவைக்கான காரணத்தையும் உறுப்பினர்களின் பொருளாதார நிலையையும் அடிப்படையாக கொண்டு கடன் வழங்குவதை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
 • உறுப்பினர் வருகை, தவணை தவறாத சேமிப்பு, கடன் திரும்ப செலுத்தும் முறை, இதுவரை பெற்றுள்ள கடன் எண்ணிக்கை, திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
 • கடன் வழங்குவது குறித்து தீர்மானம் மேற்கொண்ட பின்னரே வங்கியிலிருந்து தொகை எடுக்க வேண்டும்.
 • கூட்டத்தில் பணம் பட்டுவாடா செய்தவுடன் பணம் பெற்றவரின் கையொப்பத்தினை தீர்மானப் புத்தகத்தில் பெறுதல் அவசியம்.
 • கடன் தொகையினை (சுழல்நிதி, வங்கிகடன், பொருளாதார கடன், அமுதசுரபி) குழு உறுப்பினர்கள் சமமாக பிரித்துக் கொள்ள கூடாது. குழுவின் நிதித் திட்டத்தின் அடிப்படையிலேயே உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படவேண்டும்.
 • கடன் பெற்ற நோக்கத்தை விட்டு வேறு விஷயங்களுக்கு பணத்தை உபயோகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் தவணை தவறும் உறுப்பினர்கள் மீது குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்
 • கடன் தொகை ரூ.5000/- மற்றும் ரூ.5000/- க்கு அதிகமாக இருந்தால் உறுப்பினரிடமிருந்து ‘பிராமிசரி நோட்’-ஐ குழு பெற வேண்டும்.
 • ஒரு உறுப்பினருக்கு ஒரு உள்கடன் நிலுவையில் இருக்கும் போது மற்றொரு உள்கடன் வழங்கக் கூடாது. அவசர தேவைக்கு மட்டும், குழுவே முடிவு செய்யலாம்.
 • உறுப்பினர்களுக்கு வழங்கும் கடனிற்கான வட்டி அதிகபட்சமாக ஆண்டிற்கு 15 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். கடனுக்கான வட்டி கணக்கிடும் முறை பின்வருமாறு:

கடனுக்கான வட்டி கணக்கிடுதல் மற்றும் வசூலித்தல்

1. பொதுவாக கடன் நிலுவைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். தனிநபர் பேரேட்டிலுள்ள கடன் நிலுவைத் தொகைக்கு வட்டி கணக்கிட வேண்டும்.

 • கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 12% முதல் 15% வரை என வைத்துக் கொள்ளலாம். (எ.கா) ஒரு உறுப்பினரின் கடன் நிலுவை ரூ.1200/- வட்டி 12% என்றால் அந்த மாதத்திற்கான வட்டி ரூ.1/- (ரூ.1200 * 1 / 100) = ரூ.12

2. கடன் வாங்கியவர் குறிப்பிட்ட தேதியில் வட்டி செலுத்தவில்லையெனில், அவர் கடைசியாக எந்த தேதியில் வட்டி செலுத்தினாரோ அதிலிருந்து வட்டித் தொகையை கணக்கிடலாம்.

கீழ்கண்ட உதாரணம் மூலம் வட்டி வசூலிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்

 • கடன் பெற்றவர் பெயர் - மஞ்சு
 • கடன்நிலுவை - ரூ.4500/-
 • மாத தவணை - ரூ.500/-
 • வட்டி விகிதம் மாதம் 1% - வருடம் - 12ரூ
 • தவணை தேதி - ஒவ்வொரு மாதமும் 15ந் தேதி

ஆனால் மஞ்சு அந்த மாதத்தில் 29ம் தேதி பணம் செலுத்துகிறார். மாதத்திற்கான வட்டி கணக்கீடு (44 நாட்களுக்கு வட்டி கணக்கீடு செய்ய வேண்டும்).

12 * 44 * 4500 / (100 * 365) = 65 = ரூ.65/-

வட்டி கணக்கிடும் பொழுது ரூ.12.30 என வட்டி இருந்தால் (1-49 பைசா) ரூ.12/- எனவும் ரூ.12.82 என வட்டி இருந்தால் (50 - 99 பைசா) ரூ.13/- எனவும் கணக்கிட வேண்டும்.

பயிற்சி

 • குழுவின் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் அனைத்து பயிற்சிகளிலும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

ஈ) பதிவேடுகள்

 • சுய உதவிக்குழு கீழ்கண்ட பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
 1. வருகை மற்றும் தீர்மானப் புத்தகம்
 2. ரொக்கம் மற்றும் பொதுப்பேரேடு
 3. சேமிப்பு மற்றும் கடன் பேரேடு
 • கூட்டம் முடிந்தவுடனேயே பதிவேடுகள் எழுதப்பட வேண்டும்.
 • உறுப்பினர் வாரியாக பாஸ் புத்தகம் பராமரிக்கப்பட்டு உடனடியாக எழுதப்பட்டு உறுப்பினர்களிடம் வழங்கப்பட வேண்டும்.
 • குழு முதல் நிதி இணைப்பு பெற்ற உடன் கடன் கண்காணிப்பு பட்டியலை பராமரிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் ‘வராக் கடனாக’ ஆகிவிடாமல் இடர்பாட்டில் இருக்கும் போதே கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க இது பயன்படும்.
 • குழுவின் செயல்பாட்டு தரத்தினை நிர்ணயிக்கவும் குழு மீதான நம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.
 • குழு பதிவேடுகளை கண்காணிக்கும் நபர் மற்றும் பார்வையிடும் நபர்கள் பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுவின் அடிப்படை விவரங்களையும், குழு சமூக தரஆய்வு மற்றும் வங்கி தரமதிப்பீடு செய்யப்பட்ட விவரங்களையும், மாதாந்திர முன்னேற்ற அறிக்கைகளையும் குழு வாரியாக தனித்தனி கோப்புக்களில் பராமரித்து, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு தர மதிப்பீடு செய்யப்பட்டவுடன் (6 மாதங்களுக்கு பிறகு) குழுக்களின் முன்னேற்றத்தை, சிறப்பாக கண்காணித்து அறிவுரை வழங்கும் பொருட்டு, அதனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

உ) திட்டமிடுதல்

 • குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறவும் சமூக ரீதியான வளர்ச்சி பெறவும் திட்டமிடுதல் மிகவும் அவசியமாகும்.
 • எனவே ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் குழு தனது உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக முறையாக நிதித் திட்டமிடுதல் வேண்டும்.
 • உறுப்பினர் வாரியாக நிதித் திட்டம் தீட்டப்பட்டு குழு அளவில் நிதி தேவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • குழு உறுப்பினர்கள் வாரியாக தற்போதைய சமூக பொருளாதார நிலையினை கண்டறிந்து அறிக்கை தயார்செய்து பராமரிக்க வேண்டும்.
 • மேலும் ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சமூக பொருளாதார நிலையினை கண்டறிந்து அறிக்கை தயார்செய்து முந்தைய அறிக்கையுடன் ஒப்பிட்டு உறுப்பினர் வளர்ச்சி நிலை அறிந்து திட்டமிடலாம்.
 • சுய உதவிக்குழு யாரையும் சார்ந்து இல்லாமல், தன்னைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் அமைப்பாக எடுத்துக் கொள்ளும் முயற்சியே வலுப்படுத்துதல் ஆகும்.
 • வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்காணும் உதவிகளை சுய உதவிக்குழுவிற்கு அளிப்பதன் மூலம் குழுக்களை நல்ல முறையில் செயல்படச் செய்ய முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

3.12820512821
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top