பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டமைப்பு விளக்கம் - கூட்டங்கள்

கூட்டம் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் அமைப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அ. கூட்டம் - விளக்கம்

“ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஒட்டு மொத்த மேம்பாட்டிற்காக பயன்தரக் கூடிய தகவல்களைப் பரிமாறி ஒரு முடிவிற்கு வரும் செயல்பாடே கூட்டமாகும்”.

ஆ.கூட்டங்கள்

கூட்டமைப்பின் நிறுவன அமைப்பின்படி கீழ்கண்ட அனைத்து கூட்டங்களும் முறையாக நடத்தப்பட வேண்டும்.

1. பொதுக்குழு கூட்டம்

2. செயற்குழு கூட்டம்

3. குடியிருப்பு அமைப்பு கூட்டம்

4. துணைக்குழுக்கள் கூட்டம்

5. சுயஉதவிக்குழு கூட்டம்

6. சமூக தணிக்கைகுழு கூட்டம்

இ. கூட்டம் நடத்துவதின் அவசியம்

 • உறுப்பினர்களுடன் நல்லுணர்வு மற்றும் ஒற்றுமையை உருவாக்குதல்.
 • உறுப்பினர்கள் தங்களுடைய கருத்தை கூற வாய்ப்பளித்தல்.
 • வெளிப்படை தன்மையை உறுதி செய்தல்.
 • உறுப்பினர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருதல்.
 • உறுப்பினர் குழுக்களை சுயச்சார்புத் தன்மையைப் பெறச் செய்தல்.
 • சமுதாய விழிப்புணர்வை அடையச் செய்தல்.
 • உரிய நபர்கள் உரிய பயன்களை அடைவதை உறுதி செய்ய...

ஈ. குடியிருப்பு அளவிலான அமைப்பு - (HLF) கூட்டம்

 • குடியிருப்பு அமைப்பு சுயஉதவி குழுக்களுக்கும், கூட்டமைப்பிற்கும் இணைப்பு பாலமாக செயல்படும்.
 • கூட்டத்தேதி, இடம், ஆகியவற்றை அனைத்து சுய உதவிக் குழுவினருக்கும் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்.
 • குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்திட வேண்டும்.
 • குறைந்த பட்சம் 50ரூ உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.
 • கூட்டத்தில் 50ரூ சதவிகித உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், மறு கூட்டத் தேதியினை முடிவு செய்து கூட்டம் நடத்தப்பட வேண்டும்

உ. கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்

 • செயற்குழு கூட்டம் குறைந்த பட்சம் மாதம் ஒரு முறை கூட்டமைப்பு தலைவரின் தலைமையில் நடைபெற வேண்டும்.
 • கூட்டம் நடைபெறுவதற்கு 3 தினங்களுக்கு முன்பே நிகழ்ச்சி நிரலினை தகவல் பலகையில் தெரிவித்தல் வேண்டும்.
 • குறைந்த பட்சம் 20ரூ உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் 50 ரூ வருகை இல்லாத நிலையில் மறு கூட்ட தேதியினை ஏழு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு செய்து கூட்டம் நடத்த வேண்டும்.
 • தேவைப்பட்டால் சிறப்புக் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.

செயற்குழுவின் மாதிரி கூட்ட நடைமுறை

 • தமிழ்த்தாய் வாழ்த்து
 • உறுதிமொழி வாசித்தல்
 • வரவேற்புரை
 • முன்கூட்டத் தீர்மானங்களை வாசித்து ஆய்வு செய்தல்
 • விவாதிக்கப்பட வேண்டிய பொருள்களை இறுதிப்படுத்துதல்
 • குடியிருப்பு அளவிலான அமைப்பின் மாதாந்திர அறிக்கையினை சரிபார்த்தல் மற்றும் தேவையான நடவடிக்கை எடுத்தல்
 • குடியிருப்பு அளவிலான அமைப்பு மற்றும் சுய உதவிக் குழு செயல்பாடுகள் குறித்து விவாதித்தல்.
 • குழுக்களுக்கு கடன் வழங்குதல் குறித்து தீர்மானித்தல்.
 • குழுக்கள் பெற்ற கடன்கள் உரிய காரணத்திற்காக பயன்படுத்தப்பட்டு தவணைப்படி திரும்பச் செலுத்துவதை ஆய்வு செய்தல்.
 • இயற்றப்பட்ட தீர்மானங்களை கூட்டத்தில் வாசித்து கையொப்பம் பெறுதல்.
 • முடிவுகளை 3 தினங்களுக்குள் தகவல் பலகையில் வெளியிடுதல்

ஊ. கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்

 • பொதுக்குழுக் கூட்டம் ஆண்டிற்கு 4 முறை (ஜனவரி-26, மே-1, ஆகஸ்ட் -15, அக்டோபர்-2 ) நடத்தப்பட வேண்டும்.
 • பொதுக்குழு கூட்ட அறிவிப்பினை அனைத்து தகவல் பலகையிலும் 21 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
 • கூட்டமைப்பின் “தலைவர்” தலைமையேற்று நடத்துவார். அவர் கலந்து கொள்ளாத பட்சத்தில், உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவராக தேர்வு செய்து கூட்டம் நடத்த வேண்டும்.
 • குறைந்த பட்சம் 20ரூ உறுப்பினர்களின் பங்கேற்பு மற்றும் குறைந்த பட்சம் 50ரூ குழுக்களின் பங்கேற்பும் கூட்டத்திற்கு மிக அவசியம்.
 • அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மையோரின் ஒப்புதலோடு எடுக்கப்பட வேண்டும்.
 • கூட்டமைப்பின் சட்ட திட்டங்களை மாற்றியமைத்தல் மற்றும் “கூட்டமைப்பினை கலைத்தல்” போன்ற முக்கிய முடிவுகளுக்கு 2/3 -பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலோடு எடுக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top