பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்துதல்

சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்துதல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குழுக்களுக்கான பயிற்சி

பயிற்சி என்பது தெரியாத விவரங்களை தெரிந்துக்கொள்வது ஆகும். சுய உதவிக்குழுவினருக்கு தொடர்ந்து தேவைப்படும் பயிற்சிகளை அளிப்பதன் மூலம் குழுவையும், குழுவிலுள்ள உறுப்பினர்களையும் ஆற்றல் மிக்கவராக மாற்ற இயலும். சுய உதவிக் குழுவிற்கு தேவைப்படும் பலவிதமான பயிற்சிகளை வழங்க வறுமை ஒழிப்பு சங்கம் ஏற்பாடு செய்யும்.

(1) பயிற்சிக்கு திட்டமிடுதல்

குழுக்களின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்பு. அதாவது

 • இடம், பொருள், நாள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தல்
 • பயிற்சியாளரை ஏற்பாடு செய்தல்
 • பயிற்சி எடுத்து கொள்பவர்களின் வரவை உறுதி செய்தல்
 • பயிற்சிக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்தல்
 • பயிற்சி இடத்திற்கான வாடகை (தேவைப்படின்)
 • பயிற்சி பொருட்கள் (சார்ட், பேனா, பேப்பர், நோட்டு)
 • பயிற்சி பெறுபவர்களின் உணவு மற்றும் டீ செலவினங்கள்
 • பயிற்சியின் தரத்தினை மதிப்பீடு செய்தல்.
 • பயிற்றுநர்களுக்கான ஊக்கத் தொகை (ஒவ்வொரு கட்ட பயிற்சியும் தரமாக முடிவடைந்தபின்)
 • பயிற்றுநருக்கான நிதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் திறன் வளர்ப்பு நிதியிலிருந்து பயன்படுத்த வேண்டும்.

ஆகியவற்றை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான வழிகாட்டுதலை திட்ட ஒருங்கிணைப்பு அணியிடம் பெற்றுக் கொள்ளலாம்.

2) பயிற்சி வகைகள்

அ) உறுப்பினர்கள் பயிற்சி

பயிற்சி

பயிற்சி நாட்கள் மற்றும் காலம் (குழு துவங்கிய நாளிலிருந்து)

விவரம்

முதற்கட்டம்

3 நாட்கள் வகுப்பறை பயிற்சி ( ஒரு மாதத்திற்குள் )

குழுவின் அவசியம்

குழுவின் விளக்கம்

குழுவின் பொறுப்புகளும் கடமைகளும்

குழுக்களை திட்டத்தில் இணைத்தல்

 

இரண்டாம் கட்டம்

3 நாட்கள் வகுப்பறை பயிற்சி ( 4 மாதத்திற்குள் )

நல்ல குழுவிற்கான குண நலன்கள்

சுய உதவி குழுக்களின் நிதி மேலாண்மை

விதி முறைகள்

மூன்றாம் கட்டம்

3 நாட்கள் வகுப்பறை பயிற்சி ( 6-9 மாதத்திற்குள் )

தொலை நோக்கு

திட்டமிடல்

தணிக்கை

பொறுப்புணர்வு

காப்பீடு

நான்காம் கட்டம்

3 நாட்கள் வகுப்பறை பயிற்சி ( 12 -15 மாதத்திற்குள் )

சுய சார்பு

நீடித்த நிலைத்த தன்மையை உறுதி செய்தல்

சமூக முன்னேற்றத்தில் பங்கேற்பு

 

 • அனைத்து உறுப்பினர்களும் பயிற்சி பெறுதல் அவசியம்
 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் இப்பயிற்சியினை அளிக்கலாம்.
 • உறுப்பினர்கள் பயிற்சி கையேடு, திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

நிர்வாகிகள் பயிற்சி

பிரதிநிதி 1, பிரதிநிதி 2 ஆகியோர்கள் நிர்வாகிகள் பயிற்சி பெறுவர்.

பயிற்சி

எப்போது (குழு துவங்கிய நாளிலிருந்து)

விவரம்

முதற்கட்டம்

3 மாதங்களுக்குள் - 1 நாள் வகுப்பறை பயிற்சி

• பொறுப்புணர்வு

• நிர்வாகிகளுக்கு தேவையான திறன்கள்

• பொறுப்புகளும் கடமைகளும்

இரண்டாம் கட்டம்

6 மாதங்களுக்குள் - 2 நாட்கள் வகுப்பறை பயிற்சி

• கடன் மனு ஆய்வு

• வங்கி இணைப்பு

• தலைமைத்துவம் மற்றும்

• மாதாந்திர அறிக்கை

மூன்றாம் கட்டம்

12 மாதங்களுக்குள் - 2 நாட்கள் வகுப்பறை பயிற்சி

• தணிக்கை அறிக்கை

• அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்களுடன்

சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் இத்தகைய பயிற்சிகளை அளிக்கலாம்.

புத்தக பராமரிப்பு பயிற்சி

கணக்காளர்/ஊக்குனர் மற்றும் நன்கு எழுதப்படிக்க தெரிந்த ஒரு உறுப்பினருக்கு புத்தக பராமரிப்பு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி

நாட்கள் மற்றும் காலம் (குழு துவங்கிய நாளிலிருந்து)

விவரம்

முதற்கட்டம்

முதல் மாதத்திற்கு (3 நாட்கள் வகுப்பறை பயிற்சி)

புத்தகம் பராமரித்தலின் அவசியம்

பராமரிக்கும் முறைகள்

இரண்டாம் கட்டம்

6-12 மாதங்களுக்குள் (3 நாட்கள் வகுப்பறை பயிற்சி)

நிதி நிலை அறிக்கை

கடன் கண்காணிப்பு பதிவேடு பராமரித்தல்

தணிக்கைக்கு தயார்படுத்துதல்

மாவட்ட அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் பயிற்சி அளிப்பர்.

1 ) பழைய குழுக்களுக்ளு பயிற்சி

பயிற்சி

பயிற்சி நாட்கள்

பாடத்தலைப்பு

முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் இணைந்தது

2 நாட்கள்

திட்ட அறிமுகம், நல்ல குழுவிற்கான குணநலன்கள், பொறுப்புகள், விதிமுறைகள், நிதி மேலாண்மை

மூன்றாம் கட்டம் பயிற்சி

3 நாட்கள்

திட்டமிடுதல், தணிக்கை, காப்பீடு, சுய சார்பு, சமூக முன்னேற்றத்தில் பங்கேற்பு

நான்காம் கட்டம் பயிற்சி

3 நாட்கள்

சுய சார்பு, நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்தல், சமூக முன்னேற்றத்தில் பங்கேற்பு

2 ) புத்தக பராமரிப்பு பயிற்சி

கணக்காளர்/ஊக்குனர் மற்றும் நன்கு எழுதிப்படிக்க தெரிந்த ஒரு உறுப்பினருக்கு புத்தக பராமரிப்பு அளிக்கப்படும்

களப்பயணம்

 • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை நன்கு செயல்படும் பிற குழுக்களுக்கு/ கூட்டமைப்பிற்கு களப்பயணம் மேற்கொள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஏற்பாடு செய்யலாம்.
 • களப்பயணம் மேற்கொள்வதற்கான இடங்கள் குறித்த விவரங்களை திட்ட ஒருங்கிணைப்பு அணியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

(3) பயிற்சி அளிக்கும் முறை

 • திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து குழுக்களுக்கும் பயிற்சி அளிக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டமிட வேண்டும்.
 • புதிய குழுக்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகளையும், பழைய குழுக்களுக்கு தேவையின் அடிப்படையிலும் பயிற்சி அளிக்கலாம்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், இப் பயிற்சி திட்டத்தினை சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து தயாரிக்கலாம். இதற்கு திட்ட ஒருங்கிணைப்பு அணியினரின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்
 • ஒரு பயிற்சியில் குறைந்த பட்சம் 25 முதல் 35 நபர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • பயிற்சி நடைபெறுவதை கூட்டமைப்பின் குழுக்களை வலுப்படுத்துதல் துணைக்குழு பார்வையிட்டு, கூட்டமைப்பின் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.
 • அனைத்து வகுப்பறை பயிற்சிகளின் முடிவில் பயிற்சியாளர் அல்லாத திட்ட பணியாளர் மூலம் தர ஆய்வு செய்யப்படும்.
 • தர ஆய்வின்படி (முடிவில்) பயிற்சி மறுபடி கொடுக்கப்பட வேண்டுமெனில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(4) பயிற்சியாளர்கள்

 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர்கள்
 • மாவட்ட அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள்
 • திட்டப் பணியாளர்கள்
 • அனைத்து பயிற்சி வகுப்புகளையும் குறைந்தது 2 பயிற்சியாளர்களைக் கொண்ட அணி கையாள வேண்டும்
 • புதிய சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர்கள் அனைத்து பயிற்சிகளின் முதல் பயிற்சி வகுப்புகளிலும் துணை பயிற்சியாளராக இருந்து பயிற்சி பெறுவர். அதன் பிறகு அடுத்த பயிற்சி வகுப்பிலிருந்து தனி பயிற்சியாளராக செயல்படுவர். திட்ட பணியாளர் ஒருவர் பயிற்சியினை கண்காணிப்பதோடு பயிற்சியின் தரத்தையும் மதிப்பீடு செய்து மதிப்பீட்டறிக்கை சமர்ப்பிப்பார்.

(5) பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கட்டணம் / ஊக்கத் தொகை

 • மாவட்ட அலுவலகத்தால் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தினால் முடிவு செய்யப்பட்ட தொகைக்கு மிகாமல் பயிற்சி கட்டணம் அளிக்கலாம்.
 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர்கள் துணை பயிற்றுநர்களாக இருக்கும் போது ஊக்கத் தொகை கிடையாது.
 • பயிற்றுநர்களாக இருக்கும் போது ஒரு முழு பயிற்சி நாளுக்கு அதிகபட்சமாக ரூ.150/- வழங்கலாம்.
 • இது தவிர சாப்பாடு மற்றும் பயணச் செலவினத்தை கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் ஏற்கும்.
 • பயிற்சியின் நிறைவில், பயிற்சி தர ஆய்வு அறிக்கையில் ‘திருப்திகரம்’ என குறிப்பிடப்பட்டால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.

6) குழுக்களுக்கு தொடர்ந்து உதவுதல்

 • குழு கூட்டம் நடத்துதல், கணக்கு புத்தகம் பராமரித்தல், வங்கிக் கணக்கு செயல்படுத்துதல், அறிக்கை தயாரித்தல், தர மதிப்பீடு, வங்கி இணைப்பு போன்றவற்றிற்கு உதவுதல்.
 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் குழு கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு (குறைந்த பட்சம் இரு ஆண்டுகள்) இவ்வுதவிகளை வழங்கலாம்.
 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் புத்தக பராமரிப்பு குறித்த உதவிகளை கணக்காளருக்கு வழங்கலாம்.
 • இவ்வாறு சுய உதவிக்குழுக்களுக்கு உதவும் சமூக சுய உதவிக்குழு பயிற்றுநருக்கு பராமரிப்பு தொகையாக குழுவிற்கு ரூ.50/ முதல் ரூ.100/- வரை கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன் வளர்ப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்.
 • மேலும் சுய உதவிக் குழு பயிற்றுனர்கள் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் சான்றாக கீழே குறிப்பிட்ட ஆவணங்களை பெற்று கீழ் குறிப்பிட்டபடி மதிப்பூதியம் வழங்கப்படும்.

CST - களுக்கான ஊக்கத்தொகை

CST பணிகளை சிறப்பாக செய்திட ஒவ்வொரு பணிக்கும் கீழ்க்கண்டவாறு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வ. எண்

சேவை விவரம்

ஊக்கத்தொகை

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

1

குழு அமைத்தல்

ரூ.350/- (குழு ஒன்றுக்கு)

தீர்மான நகல்

வங்கி பாஸ்புத்தக நகல்

உறுப்பினர்கள் அடிப்படை விவரம்

 

2

செயல்படாத குழுக்களை செயல்பட வைத்தல்

ரூ.350/- (குழு ஒன்றுக்கு)

தீர்மான நகல்

வங்கி பாஸ்புத்தக நகல்

உறுப்பினர்கள் அடிப்படை விவரம்

மாதாந்திர அறிக்கை

3

சுய உதவிக்குழுக்களை இணைத்தல்

25 முதல் 75 வரை(குழு ஒன்றுக்கு)

தீர்மான நகல்

வங்கி பாஸ்புத்தக நகல்

உறுப்பினர்கள் அடிப்படை விவரம்

மாதாந்திர அறிக்கை

4

பயிற்சி அளித்தல்

அதே ஊராட்சி ரூ.125/- வெளி ஊராட்சி ரூ.150/- (போக்குவரத்து, உணவு கட்டணம் தனியாக வழங்கப்படும்)

பயிற்சி அறிக்கை

5

கண்காணித்தல்

ரூ.50/-ரூ.100/

(குழு ஒன்றுக்கு)

மாதாந்திர அறிக்கை

6

நிதியிணைப்பு

ரூ.100/-ரூ.200/

(குழு ஒன்றுக்கு)

வங்கி பாஸ்புத்தக நகல்

7

நுண்நிதி கடன்தேவை திட்டம்

குழு ஒன்றுக்கு ரூ.150/- முதல் முறை மட்டும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து வழங்கபடும்

நிதி திட்ட தொகுப்பு அறிக்கை

8

தணிக்கை

குழு ஒன்றுக்கு ரூ.125/- முதல் முறை மட்டும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து வழங்கபடும்

தணிக்கை அறிக்கை

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top