பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல்

கிராம அளவில் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்கள்

(1) தகுதி

 • ™™ தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற இரண்டு வருடமான குழுவின் உறுப்பினர்.
 • ™™ குழுவின் அவசியத்தை நன்கு உணர்ந்து அதன் மூலம் வளர்ச்சி அடைந்தவர்.
 • ™™ சுய உதவிக்குழுவில் இணைந்து சிறந்த செயல்பாட்டின் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டவராக இருந்தால் நல்லது.
 • ™™ இலக்கு மக்களாக இருத்தல் நல்லது. பகுதி அளவில் குறைந்தது 70 சதவீதம் பயிற்றுநர்கள் இலக்கு மக்களாய் இருத்தல் அவசியம்.
 • ™™ கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு, அதனை விளக்கிக் கூறும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
 • ™™ குழுவின் வளர்ச்சிக்கு போதுமான நேரம் ஒதுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
 • ™™ அனைத்து தரப்பு மக்களிடமும், சரிசமமாக பழகுபவராக இருக்க வேண்டும்.
 • ™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் திட்ட வேலைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளதால் அத்தகையோர் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக இல்லாதிருத்தல் நல்லது.

(2) தேர்ந்தெடுக்கும் முறை

 • ™™ இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனைத்து குழுக்களுக்கும் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர் தேர்வு குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் (குடியிருப்புக் கூட்டம், கூட்டமைப்புக் கூட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் குழுக்கள் இணையும் முகாம்)
 • ™™ குடியிருப்பு வாரியாக குழுக்களின் எண்ணிக்கையை (10-15 பழைய மற்றும் புதிய குழுக்கள்) பொறுத்தும், சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் செயல்படக்கூடிய எல்லையைப் பொறுத்தும் வரைபடம் (CST Mapping) தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப எண்ணிக்கையில் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • ™™ குழுவின் மூலமாக விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு முதற்கட்ட தேர்வு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தில் திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியோடு நடத்தப்பட வேண்டும்.
 • ™™ தேர்வு பெற்றவர்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பு அணி பயிற்சியினை வழங்கும். பயிற்சியின் இறுதியில் தேர்வு பெற்றவர்கள் விவரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவிக்கப்படும்.
 • ™™ தேர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

(3) சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்

 • ™™ வகுப்பறை பயிற்சி
 • ™™ செயல்முறை விளக்கம்
 • ™™ களப் பயணம்

(4) செய்ய வேண்டிய வேலைகள்

 • ™™ விடுபட்ட இலக்கு மக்களின் உண்மை நிலையை நேரடியாக சென்று தெரிந்து கொள்ளுதல்.
 • ™™ விடுபட்ட இலக்கு மக்களை குழுக்களாக அமைத்தல்.
 • ™™ குழுக்களுக்கு பயிற்சி அளித்தல்.
 • ™™ குழு கூட்டங்களில் கலந்து கொண்டு உதவி செய்தல் மற்றும் குழு கூட்டங்கள் முறையாக செயல்பட வழிகாட்டுதல்.
 • ™™ பதிவேடுகள் பராமரித்தலில் உதவுதல்
 • ™™ தர மதிப்பீடு மற்றும் தணிக்கை செய்வதை உறுதி செய்தல்.
 • ™™ குழு உறுப்பினர்களுக்கு காப்பீடு உதவுதல்.
 • ™™ குழுவின் வளர்ச்சிக்கு தேவையான நிதியிணைப்பு பெற உதவுதல்.
 • ™™ புதிய சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களை உருவாக்க உதவி செய்தல்.
 • ™™ குழு உறுப்பினர்கள் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய உறுதுணையாக இருத்தல்.
 • ™™ நிதியினை முறையாக பயன்படுத்த உதவி செய்தல்
 • ™™ வங்கிக் கடன் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை முறைப்படி திரும்ப செலுத்த வழிவகை செய்தல்.

உறைவிட வகுப்பறை பயிற்சி

 • ™™ சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி (4 கட்டம்) - ஒவ்வொரு கட்டத்திலும் 3 நாட்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
 • ™™ சுய உதவிக் குழு நிர்வாகிகள் பயிற்சி - ( 3 கட்டம் - ஒவ்வொரு கட்டத்திலும் 1 நாள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
 • ™™ சுய உதவிக்குழு கணக்காளர் பயிற்சி (2 கட்டம்) - ஒவ்வொரு கட்டத்திலும் 3 நாட்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

செயல்முறை விளக்கம்

 • ™™ வகுப்பறை பயிற்சியின் ஒவ்வொரு நாள் முடிவிலும் குழுக்களுக்கு நேரடி பயிற்சி அளித்து தயார் செய்யப்படுவர்.
 • ™™ உறுப்பினர் பயிற்சி, நிர்வாகிகள் பயிற்சி மற்றும் கணக்காளர் பயிற்சியில் துணை பயிற்சியாளராக கலந்து கொண்டு பயிற்சி பெறுவர்.

களப்பயணம்

 • ™™ சமூக பயிற்சியாளர்களால் நல்லமுறையில் பயிற்சி கொடுக்கப்பட்டு,
 • கண்காணிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ள குழுக்களை/தொழில் குழுக்களை / கூட்டமைப்பினை நேரில் சென்று பார்வையிடலாம்.

சமூக சுய உதவிக் குழு தணிக்கையாளர்கள்

(1) தகுதி

 • ™™ குறைந்தது 3 ஆண்டுகளுக்கு சுய உதவிக் குழு புத்தகப் பதிவேடுகளைப் பராமரித்த அனுபவம் இருக்க வேண்டும்.
 • ™™ இலக்கு மக்களாக இருந்தால் நல்லது.

(2) தேர்ந்தெடுக்கும் முறை

 • ™™ குறைந்த பட்சம் 30 குழுவிற்கு ஒரு சமூக தணிக்கையாளரை தேர்வு செய்ய வேண்டும்.
 • ™™ தணிக்கையாளரை தேர்வு செய்ய 3 வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து சுய உதவிக் குழுக்களின் கணக்காளர் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். (தகவல் பலகை, சுய உதவிக் குழு கூட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் குழு இணையும் முகாம், குடியிருப்பு அளவிலான அமைப்பு (ழடுகு) கூட்டம்)
 • ™™ விருப்பம் தெரிவித்தவர்களில் சரியான நபரை கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தேர்வு செய்யும் (திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியோடு).
 • ™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தேர்வு பெற்றவருக்கு பயிற்சி அளிக்க திட்ட ஒருங்கிணைப்பு அணிக்கு பரிந்துரை செய்யும்.
 • ™™ முதற்கட்ட பயிற்சிக்கு பின் சரியான நபரை பயிற்சியாளர் தேர்வு செய்து கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவிப்பார்.
 • ™™ இவர்கள் பெயர் அடுத்து வரும் கிராம சபையில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

(3) அளிக்கப்படும் பயிற்சிகள்

1. பயிற்சி முடிந்தபின் குழுவில் செயல் விளக்கம் செய்து காண்பிக்க வேண்டும்.

2. நன்கு அனுபவமுள்ள தணிக்கையாளரைப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்.

3. மேலும் சமூக தணிக்கையாளர்கள் நன்கு தயாராகும் வரை திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் உடனிருந்து வழிகாட்டுதல் அவசியம்.

(4) செய்யக்கூடிய வேலைகள்

வ.எண்

பயிற்சி

காலம்

1.

குழு புத்தகம் பராமரிப்பு, உறுப்பினர் கடன் உறுதி அறிக்கை தயாரித்தல் ,தணிக்கை

முறை, தணிக்கை அறிக்கை தயாரித்தல்

3 நாட்கள்

 

 • ™™ குழுக்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உள்தணிக்கை செய்தல்
 • ™™ வெளித் தணிக்கை செய்தல் (ம) வெளித் தணிக்கைக்கு தயார் செய்தல்.
 • ™™ தணிக்கை அறிக்கை தமிழில் தயார் செய்து குழுவிற்கும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கும் அளித்தல்.
 • ™™ குழுக்களுக்கு புத்தக பராமரிப்பு குறித்த வழி காட்டுதல்.

சமூகத் தர ஆய்வு அணி

(1) தகுதி

 • ™™ கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் இருவரும் 2ம் கட்ட தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
 • ™™ இலக்கு மக்களாக இருத்தல் நல்லது.
 • ™™ அனைத்து பயிற்சிகளையும் முடித்தவராக இருக்க வேண்டும்.

(2) தேர்ந்தெடுக்கும் முறை

 • ™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுக்கும்.
 • ™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு குறைந்தபட்சம் 7 நாட்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
 • ™™ அடுத்து வரும் கிராம சபையினில் தெரிவிக்கப்பட வேண்டும்.
 • ™™ மாவட்ட புதுவாடிநவு திட்டத்தால் குழுக்களை தர ஆய்வு செய்ய ஒதுக்கப்படும் சமூக வல்லுநர் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் சுய உதவிக் குழு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.

(3) செய்ய வேண்டிய வேலைகள்

 • ™™ குழுக்களை தரம் பிரித்தல் செய்தல்.
 • ™™ அறிக்கையினை கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு சமர்ப்பித்தல்.
 • ™™ குழுவின் வளர்ச்சிக்கு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவித்தல்.

(4) பயிற்சி

 • ™™ ஊராட்சி அளவிலான சமூகத் தர ஆய்வு அணிக்கு ஒருநாள் செயல் விளக்க பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பு அணியினரால் நடத்தப்படும்
 • ™™ மேலும் உறுப்பினர் நன்கு தயாராகும் வரை திட்ட ஒருங்கிணைப்பு அணி உடனிருந்து வழிகாட்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top