பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு / சுய உதவிக் குழு / சுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல்

சுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் பணிகள்

 • சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வயதிற்கேற்ற வளர்ச்சி நிலையினை அடைந்து, சுயமாக செயல்படும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு உதவுதல் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கடமையாகும்.
 • சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பது ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பின் பொறுப்பாகும்.
 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அமைக்கப்பட்டு (6 மாதங்கள் பூர்த்தி அடையும் வரை) தர மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் வரை சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் மூலமாக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.
 • ஒவ்வொரு சமூக சுய உதவிக்குழு பயிற்றுநரும் புத்தக பராமரிப்பு மற்றும் குழுக் கூட்ட நடவடிக்கைகளுக்கு 10 முதல் 15 குழுக்களுக்கு உதவலாம்.
 • இவர்கள் துவக்க நிலையில் குழு கூட்டங்களில் பங்கேற்று குழு சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சமூக சுய உதவிக்குழு பயிற்றுநருக்கான ஆய்வுக் கூட்டத்தினை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.
 • இந்தஆய்வு கூட்டத்தில் சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், கூட்டமைப்பு மற்றும் திட்ட ஒருங்கிணைப்புஅணியினர் ஆகிய அனைவரும் இணைந்து குழுவின் வளர்ச்சி மற்றும் தேவை குறித்து ஆலோசிக்க வேண்டும்.
 • ஒவ்வொரு மாதமும் பகுதி அலுவலகத்தில் சமூக சுய உதவிக்குழு பயிற்றுநருக்கான ஆய்வு கூட்டம் நடைபெற வேண்டும்.

அறிக்கை மூலம் கண்காணித்தல்

 • ஒவ்வொரு குழுவும் தங்களின் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையினைத் தயார் செய்து குடியிருப்பு அளவிலான அமைப்பின் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
 • இவ்வாறு பெறப்படும் அறிக்கையினை ஊராட்சியில் உள்ள கணினி வழி தகவல் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.(ஊ-க்ஷடிடிம மநநயீiபே)
 • இவ்வறிக்கை கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு குழுக்களின் நிலையும், சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தங்கள் ஊராட்சிக்குட்பட்ட குழுக்களின் முன்னேற்ற அறிக்கையினைத் திட்ட ஒருங்கிணைப்பு அணிக்கு வழங்கும்.
 • இந்த அறிக்கையினை ஆய்வு செய்வதன் மூலம் குழுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.

குழுவை பராமரிப்பதற்கான நிதி

 • குழு கண்காணிப்பு செலவினம் முதல் இரண்டு வருடங்களுக்கு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் திறன் வளர்ப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
 • இரண்டாண்டுகளுக்கு பின்பு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் கூட்டமைப்புப்பின் பொதுநிதியின் மூலம் கண்காணிப்பு செலவீனம் மேற்கொள்ளப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.8
அரிகரன் May 18, 2020 11:44 AM

ஐயா வணக்கம் இப்போது மன நல குன்றியோர்க்னா தமிழ் நாடு அரசு என்ன சலுகை தெரிவித்துள்ளது ...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top