பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதரவற்ற மற்றும் தெருவோரச் சிறார்கள்

இந்தியாவில் ஆதரவற்ற மக்களின் நிலையை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

தெருவோரச் சிறார்கள்

தெருவோரச் சிறார்கள் என்னும் சொல், ஒரு நகரத்தின் தெருவில் வசிக்கும் குழந்தைகளையோ அல்லது சிறுவர்களையோ குறிக்கிறது. குடும்பத்தின் கவனிப்பும், பாதுகாப்பும் இச்சிறார்களுக்கு மறுக்கப்படுகிறது. வீதியோரத்தில் பெரும்பாலும் 5 முதல் 17 வயது வரை உடைய சிறார்களே வசிக்கின்றனர். சாலையோரத்தில் வசிக்கும் சிறார்கள் பாழடைந்த கட்டிடங்களிலும், பெரிய அட்டைப்பெட்டிகளிலும், பூங்காக்களிலும் வசிக்கின்றனர். சில நேரங்களில் சாலையோரத்திலேயும் வசிக்கின்றனர். தெருவோரச் சிறார்களை வகைமைப்படுத்த முயல்வோர்கள் அனைவரும் முதலில் சந்திக்கும் சிக்கல் என்னவெனில் அச்சிறார்களை எத்தகைய பிரிவில் வகைமைப்படுத்துவது என்பதேயாகும். தெருவிலேயே நேரத்தைக் கழித்து விட்டு பின் ஒழுங்கீனமான பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் தூங்கும் சிறார்கள் முதல் பெரியவர்களின் கவனிப்போ, அக்கறையோ இல்லாது தெருவோரங்களிலேயே வசிக்கும் சிறார்கள் வரை தெருவோரச் சிறார்கள் என்னும் சொல்லில் அடங்குகின்றனர்.
பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, யூனிசெஃப்க்கு உடைமையாக்கப்பட்ட வரையறை, தெருவோரச் சிறார்களை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கிறது.

 • பிச்சையெடுப்பது முதல் சிறு விற்பனை செய்வது போன்ற பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்கள் ஒரு பிரிவினில் அடங்குகின்றனர். இச்சிறார்களில் பலர் அந்நாளின் முடிவில் வீட்டிற்குச் சென்று அன்றைய உழைப்பின் ஊதியத்தைக் குடும்பத்திற்குத் தருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்பவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக உணருகின்ற இவர்கள் அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நலிவின் காரணமாக சாலையோரங்களிலேயே நிரந்தரமாக வசிக்கும் நிலையைத் தேர்ந்தெடுக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
 • உண்மையிலேயே தெருக்களில் வசிப்பவர்கள் அல்லது இயல்பான குடும்பச்சூழலில் வாழ்ந்தவர்கள், இவர்களை மேலும் குடும்பப் பொறுப்புகளும் சாதாரணமாகவோ, எப்போதாவதுதான் ஏற்கப்படும்.

இந்தியாவில் ஆதரவற்ற / தெருவோரச் சிறார்களின் நிலை

 • உலகின் மிகப்பெரிய குடியரசு நாடுகளுள் ஒன்றான இந்தியாவில் ஒரு பில்லியன்-400 மில்லியன் சிறார்கள் உள்ளனர். பல்வேறு இனங்களையும், பல்வேறு மொழிகளையும், பல்வேறு மதங்களையும் இந்தியா கொண்டுள்ளது. 15 அதிகாரபூர்வமான அலுவலக மொழிகளையும் 36 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது.
 • ஏறத்தாழ 637 மில்லியன் இந்துக்களும் 95 மில்லியன் முஸ்லிம்களும் 19 மில்லியன் கிறித்துவர்களும் 16 மில்லியன் சீக்கியர்களும் 6 மில்லியன் புத்த மதத்தினரும், 3 மில்லியன் ஜெயினர்களும் இந்தியத் திருநாட்டில் வாழ்கின்றனர்.
 • இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 26% வறுமைக்கோட்டிற்குக் கீழாக வசிக்கின்றனர். 72% கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.
 • எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் 0,9% இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தென்னாப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.
 • ஆண் - பெண் சமத்துவம், வறுமை, கல்வியறிவின்மை போன்ற பல பிரச்சினைகளில் இந்தியா குறிப்பிடும்படியான முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும் அடிப்படை வசதியும், விழிப்புணர்வும் இன்மையே எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கான மருத்துவ உதவியளிக்கும் திட்டங்களுக்குத் தடையாக அமைகின்றன. எய்ட்ஸ் நோயின் பாதிப்புக்கு இந்தியா இன்னும் முழுமையாக உள்ளாகவில்லை. மேலும் எய்ட்ஸ் நோயால் அனாதைகளாக்கப்பட்டவர்களின் பட்டியல் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
 • இருப்பினும் எய்ட்ஸ் நோயினால் அநாதைகளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வெண்ணிக்கை இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது.
 • 55,764 இந்திய சிறார்களில் 2,112 சிறார்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • 4.2 மில்லியன் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளில் 14 சதவிகிதம், பதினான்கு வயதுக்கும் கீழ்ப்பட்ட வயதுள்ள குழந்தைகளேயாம்.
 • ILO நடத்திய ஆய்வின்படி எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மிக அதிகமாக வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றார்கள்;  அடிப்படை வசதிகள் கூட இன்றி 35 சதவிகிதச் சிறார்கள் துன்புறுகின்றனர்; 17 சதவிகிதச் சிறார்கள் அவர்களுடைய வருமானத்தைப் பெருக்குவதற்காகச் சிறிய வேலைகளைக் கூடச் செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர்.
 • வறுமையினை வேராகக் கொண்ட குழந்தைக் தொழிலாளர், இந்திய நாட்டின் சிக்கலான பிரச்சனையாகும்.
 • 1991 ஆம் ஆண்டின் புள்ளி விவரம் 11.28 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
 • இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களில் 85 சதவிகிதம் கிராமத்தில்தான் உள்ளனர். இச்சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.
 • ஏறத்தாழ 300,000 சிறார்கள் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக நிகழ்கால மதிப்பீடு கூறுகிறது. தேவதாசி முறையினைப் பின்பற்றுவதன் மூலம் இந்திய நாட்டின் சில சமூகங்களில் குழந்தை விபச்சாரம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ள இனங்களிலுள்ள சில இளம்பெண்கள் கடவுளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு மதரீதியான விபச்சாரிகளாக மாறுகிறார்கள். தேவதாசி முறை, அர்ப்பணிப்பு ஒழிப்புச்சட்டம் 1982 (Prohibition of Dedication Act of 1982) மூலம் தடைசெய்யப்பட்டது. ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, உத்திரபிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் தேவதாசி முறை மேலோங்கியுள்ளது.
 • தேவதாசிகளில் 50%க்கு மேல் பாலியல் தொழிலாளிகளாக மாறி விடுகின்றனர். இவர்கள் 40 சதவிகிதத்தினர் நகரங்களில் உள்ள விபசார விடுதிகளிலுள்ளனர். ஏனையோர் அவர்களுடைய கிராமங்களிலேயே விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். மகளிர் தேசியக் குழுவின் (National Commission on Women) கூற்றின்படி, 2,50,000 பெண்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லைப் பகுதியில் தேவதாசிகளாக உள்ளனர். கர்நாடகா மாநிலத்திலுள்ள தேவதாசிகளில் 9 சதவிகிதத்தினருக்கு எச்.ஐ.வி நோயுள்ளதாக 1993இல் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
 • தெருவோரக் குழந்தைகளுக்கு அவர்களுடைய வீட்டை விட தெருக்களே உண்மையான வீடாக அமைகிறது. சரியான பாதுகாப்பும், மேற்பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாது அவர்கள் வாழ்கின்றனர். மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) ஏறத்தாழ 18 மில்லியன் சிறார்கள் தெருவோரங்களில் வசிக்கின்றனர், வேலை செய்கின்றனர் என்று கணித்துக் கூறுகிறது. இச்சிறார்களில் பெரும்பான்மையோர், குற்றங்களிலும், பாலியல் தொழிலிலும், வன்முறையிலும், போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபடுகின்றனர்.


குழந்தைகள் நலம்

ஆதாரம் : சைல்டுலைன் இந்தியா பவுன்டேசன்

3.13043478261
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top