பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தனிநபர் கடன் திட்டம்

தனிநபர் கடன் திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இத்திட்டம் பிற்படுத்தப்படடோர், மிகப்பிற்படுத்தப்படடோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மக்களுக்கான உருவாக்கப்பட்ட திட்டமாகும். இவற்றை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ. 55000/- மிகாமல் இருக்கலாம்.

மற்ற விவரங்கள்

 1. சிறுபான்மையினர் இனத்தவராக (முஸ்லீம்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவாகள், பார்சீக்கள்) இருக்க வேண்டும்.
 2. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40,000/- க்கும் நகர்புறங்களில் ரூ.55,000/-க்கும் மிகாது இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

 1. சாதி, ஆண்டு வருமானம் சான்றிதழ்.
 2. உணவு பங்கீடு அட்டை அல்லது
 3. இருப்பிட சான்றிதழ் மற்றும்
 4. வங்கிகள் கோரும் ஆவணங்கள்

எப்படி பெறுவது

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது மாடி, சென்னை-2. அல்லது மாவட்ட பிற்படுத்தபட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுலர்கள் அல்லது மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது நன்றாக இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி

விரிவாக்கம்

 • தனி நபர் கடன் தனி நபருக்கு ரூ.1 இலட்சம் வரை 6 வட்டியில் கடனுதவி கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
 • ரூ.5 இலட்சம் வரை தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் அனுமதியோடு கடன் வழங்கப்படும்.
 • கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு பயனடைவோரின் பங்குத்தொகை 5 சதம் டாம்கோ பங்குத்தொகை 10 சதம் தேசிய கழகத்தின் பங்குத்தொகை 85சதம் கடன் தொகையை 60 மாத தவணையில் திரும்ப செலுத்த வேண்டும்.
 • இக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது நன்றாக இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக வழங்கப்படுகிறது.

ஆதாரம் : பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு

3.15238095238
s.James Alex Raj Feb 22, 2018 01:15 PM

நான் அரியலூா் மாவட்டத்தை சாா்ந்தவன். தனிநபா் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?

அருள் பாண்டி Jan 23, 2018 10:50 AM

ஐயா, நான் குறைந்த முதலீட்டில் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். எனக்கு தனி நபர் கடன் எவ்வாறு பெறுவது... நன்றி

சதிஷ் Oct 25, 2017 09:28 PM

ஐயா நான் ஹோலோ பிளாக் தொழில் செய்து வருகி றேன் எனக்கு கடன் உதவி தேவைபடுகிறது என்ன செய்ய வேண்டும்

அருண்குமார் May 28, 2017 09:22 PM

ஐயா

நான் திருச்சிராப்பள்ளி மாவட்டைத்தை சேர்ந்தவர் நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். நான் தொழில் மேலாண்மை கல்வி படித்துள்ளேன்.தனியார் துறையில் பணிபுரிக்கின்றேன்.எனக்கு தனிநபர் கடனுதவி வேண்டும்.அதை நான் எப்படி பெறுவது என விரிவாக தெரிவிக்க வேண்டும்

நன்றி அன்புடன்

அருண்குமார் 97*****13

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top