பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம்

அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS – National Pension System) பற்றிய குறிப்புகள்

நோக்கம்

இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System)  எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதாரப் பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் .

பொதுத் துறை வங்கிகள்

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான்’ (PRAN- Permanent Retirement Account Number) எண் தரப்படும்.

தகுதிகள்

  • இது வாழ்நாளுக்கான எண். 18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
  • மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழைஎளியோர் என்று அனைவரும் பயன்பெறலாம்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் (N.R.I.)மற்றும் பப்ளிக் பிராவிட ண்ட் ஃபண்ட் (P.P.F) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடை முறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் செலுத்தும் முறை

  • இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும்.
  • பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் 100 ரூபாய் செலுத்தினால், உங்கள் கணக்கில் ஆண்டுக்கு 100ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்).
  • அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய்வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000ரூபாய் கிடைக்கும். அதற்குமேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை.
  • சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம்.
  • மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8%  முதல் 12% கூட்டுவட்டியுடன் .

மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேரவேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் முகவர்களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

ஆதாரம் : ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

2.86734693878
sathyakumar Jun 10, 2020 07:10 PM

kindly sir
please full details
send my address

Jeni May 13, 2020 07:41 PM

எந்த வங்கியில் கணக்கீடு ஆரம்பிக்க வேண்டும்

RAJESH Feb 04, 2020 12:14 PM

இந்த திட்டத்தில் முகவராக பணிபுரிய என்ன தகுதிகள் வேண்டும் எப்படி முகவராக அனுமதி பெற வேண்டும்

Anonymous Sep 04, 2018 04:46 PM

இத்திட்டத்திற்கு முகவராக விரும்புகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அனுராதா Aug 02, 2018 11:51 AM

இத்திட்டத்திற்கு முகவராக விரும்புகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

Anonymous Feb 05, 2016 06:01 PM

பணப்பயணை மாணவர்கள்எப்படிவருமானமாகபெறமுடியும்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top