பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இஞ்சியோன் செயல்திட்டம்

இஞ்சியோன் செயல்திட்டம் பற்றி தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இஞ்சியோன் செயல்திட்டம் என்பது அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக தடையற்ற சமுதாயத்தை உருவாக்குதல், அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான ஆசிய - பசுபிக் பிராந்தியம் மற்றும் அகில உலகத்துக்கான செயல்திட்டமாகும். இந்த செயல்திட்டத்தில் மாற்றுத்திறனை உள்ளடக்கிய சில வளர்ச்சி இலக்குகள் உள்ளன. இந்த இலக்குகள் உலக வரலாற்றில் முதன்முறையாக பிராந்திய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தென் கொரியாவின் இன்சியோன் நகரில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார, சமூக ஆணையத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த செயல்திட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இஞ்சியோன் செயல்திட்டம் என்று இதற்கு பெயர் வந்ததற்கு காரணம் இந்த செயல்திட்டம் கொரிய நகரமான இன்சியோனில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மொத்தம் 65 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், உரிமைகளை முழுமையாக கிடைக்கச் செய்தல் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தை கண்காணிக்க இந்த இலக்குகள் உதவும். இந்த செயல்திட்டம் 2013 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இந்த செயல்திட்டத்தில் மொத்தம் 10 லட்சியங்கள் உள்ளன. இந்த 10 இலட்சியங்களில் 27 செயல்திட்ட இலக்குகள், முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான 62 அளவீட்டுக் காரணிகள் ஆகியவை அடங்கியுள்ளன. இன்சியோன் செயல்திட்டத்தின்படி அனைத்து அரசுகளும் அவர்களின் நாட்டில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களையும் திரட்டித்தர வேண்டும். அப்போது தான் அவர்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட முடியும் என்பதால் இந்த தகவல்கள் கோரப்படுகின்றன.

இன்சியோன் மனித செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது மாற்றுத்திறன் கொண்ட மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும்; அவர்களின் விருப்பத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும்; பாகுபாடு காட்டப்படக் கூடாது; மற்றவர்களைப் போலவே சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் ஆகியவை ஆகும்.

இஞ்சியோன் செயல்திட்டத்தின் லட்சியங்கள்

வறுமை ஒழிப்பு, பணி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல்,

  1. அரசியல் நடைமுறைகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்,
  2. இயல் சூழல், பொதுப்போக்குவரத்து, அறிவு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளை அணுகுவதற்கான சூழலை அதிகரித்தல்,
  3. சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்,
  4. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்தை முன்கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்புகளை விரிவாக்குதல்,
  5. பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்தல்,
  6. மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பேரிடர் பாதிப்பு குறைப்பு மற்றும் மேலாண்மையை உறுதி செய்தல்,
  7. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத் தன்மையை மேம்படுத்துதல்,
  8. மாற்றுத்திறன் கொண்டவர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதையும், அதனடிப்படையில் தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்படுவதையும் உறுதி செய்தல்,
  9. மண்டல, உள்மண்டலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.97368421053
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top