பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி

ஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் இணைந்த ஜாம் திட்டத்தின் பார்வை பல திட்டங்களின் அடிப்படை அஸ்திவாரமாக அமையும்.

ஒவ்வொரு ரூபாய் செலவிலும் அதிகபட்ச மதிப்பு இருக்க வேண்டும். நமது நாட்டு ஏழைகளுக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த மக்களின் மத்தியில் அதிகபட்ச தொழில்நுட்பம் ஊடுருவ வேண்டும்.”

நன்மைகள்

நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிய பிறகும், பெரும் அளவு மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்கள் கணக்கில் பணம் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான்  பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா எனப்படும் வங்கிக்கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டது

இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் சில மாதங்களிலேயே லட்சோப லட்சம் இந்திய மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஒரே ஆண்டில் 19 கோடியே 72 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 16 கோடியே 8 லட்சம் ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் 28 ஆயிரத்து 699 கோடியே 65 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 697 வங்கி தொடர்பாளர்கள் இதில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட கின்னஸ் சாதனையாகும்.

லட்சம் லட்சமாக வங்கிக் கணக்குகள் தொடங்குவது என்பது சவாலானதாகும். அதுவும் அத்தகைய கணக்குகளை தொடங்கிய மக்கள் தங்கள் அதை பயன்படுத்துவதற்கான நடைமுறையை மாற்றிக் கொள்ளுதல் என்பதும் மிகப்பெரிய சவாலாகும். பணம் இல்லாத வங்கிக் கணக்காளர்கள் எண்ணிக்கை என்பது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 76 .8 சதவீதம் என்பதில் இருந்து 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 32 .4 சதவீதமாக குறைந்துவிட்டது. இது தவிர 131 கோடி ரூபாய் மிகைப்பற்று ( ஓவர் டிராப்ட்) ஆக பெறப்பட்டுள்ளது.

மக்களை அணுகும் சக்தி, அரசு நிர்வாகத்தை மேற்கொள்ளும் திறனால் சாத்தியப்பட்டது. அரசு மற்றும் மக்களின் ஒருமித்த ஒத்துழைப்பினால் இந்த செய்வதற்கரிய செயல் சாத்தியமாயிற்று.

லட்சோப லட்சம் இந்திய மக்கள் வங்கிக்கணக்கை பெற்றதால், அதன்மூலம் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் பெரும் பங்கினை பெற்றுவிட்டார்கள். இப்போது மானியங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கும் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைகிறது. இதன் மூலம் லஞ்சம், மற்றும் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது. இப்போது சமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு வழங்கும் பாகல் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது- இந்த திட்டத்தின் கீழ் 14 கோடியே 62 லட்சம் பேர் நேரடியாக வங்கிக்கணக்கில் மானியத்தினை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 34 லட்சம் போலி அல்லது செயல்படாத வங்கிக்கணக்குகளை அடையாளம் காண உதவியது. அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடிந்தது. இப்போது அரசு 35 முதல் 40 திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு பண பரிமாற்றத்தினை செய்து வருகிறது. அதன் மூலம் 2015ம் ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கணக்கின் மூலம் பயனாளிகளுக்கு சேர்ந்துள்ளது.

பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா, திட்டம் பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்குகிறது. பிரதம மந்திரியின், ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் ஆண்டுக்கு 330 ரூபாய் செலவில் ஆயுள் காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பயனாளிகளின் பங்களிப்பு அடிப்படையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை முதுமை காலத்தில் வழங்குகிறது. 9 கோடியே 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டத்திலும், 3 கோடி பேர் பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திலும் சேர்ந்துள்ளனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் 15 லட்சத்து 85 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஆதாரம் : இந்திய அரசு

3.09259259259
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ரகுமான் May 20, 2020 11:36 PM

இந்த கணக்கு எனக்கும் உல்லது ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை

கலை ராஜா Feb 17, 2019 11:38 PM

மிக்க நன்றி

முனியராஜ் Feb 17, 2019 11:28 PM

இந்த திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதா. கடைசி தேதி இல்லையா

இரா.இராஜேஷ்கண்ணன். Jun 15, 2018 06:02 PM

நல்ல திட்டங்கள். பிரதமருக்கு நன்றி. இன்னும் பல நலம் பயக்கும் திட்டங்களை செயல் படுத்த நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

கண்ணன்மாயாண்டி Dec 13, 2016 06:20 PM

கணக்கு துவங்க ரூ 100 பணம் கமிஷனாக பெற்று கொள்கிறார்கள்

கண்ணன்மாயாண்டி Dec 13, 2016 06:11 PM

ஜன்தன் கணக்கில் வழங்கப்படும் முதியவர் பணம்,நூறுநாள் சம்பளம் போன்ற திட்டங்களுக்கு பணம் பெற வரும் மக்களிடம் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் எடுத்து கொண்டே மீதி தொகையை பயனாளிகளிடம் வழங்குகிறார்கள் வங்கி ஊழியர்கள்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top