பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான முதல் திட்டம்)

தகுதி:

வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.

பிரிமியம்(கட்டணம்):

ஓர் ஆண்டுக்கு ரூ.12/-.

கட்டணம் செலுத்தும் முறை:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.

காப்பீட்டுத்தொகை:

விபத்தினால் இறப்பு ஏற்பட்டாலும் முழுமையாக ஊனமைடைந்தாலும் இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.  பகுதி இயலாமையாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும்.

தகுதி :

ஆதார் எண்ணை இணைத்த வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் இத்திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

காப்பீட்டுத்தொகைக்கான விதிமுறைகள்:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிமியக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

யார் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது?

அனைத்து பொதுத்துறை பொது காப்பீடு நிறுவனங்களும், இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும்.

அரசின் பங்களிப்பு:

  • பல்வேறு அமைச்சகங்களும், மக்களுக்குத் தமது நிதியில் இருந்து அல்லது, கோரப்படாமல் இருக்கும் பணத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நல நிதியத்தில் இருந்து பிரிமியக் கட்டணத்தைச் செலுத்தலாம்.   ஒவ்வொரு ஆண்டும் இதற்கான வழி தீர்மானிக்கப்படும்.
  • இந்தத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவினை மத்திய அரசு ஏற்கும்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்)

தகுதி:

வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இதிட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு.

பிரிமியம்(கட்டணம்):

ஓர் ஆண்டுக்கு ரூ.330/- வங்கக் கணக்கில் இருந்து ஒரே தவணையில் எடுத்துக் கொள்ளப்படும்.

கட்டணம் செலுத்தும் முறை:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.

காப்பீட்டுத்தொகை:

எந்தக் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டாலும இரண்டுலட்ச ரூபாய் வழங்கப்படும்.

காப்பீட்டுத்தொகைக்கான விதிமுறைகள்:

பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டும். பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிமியக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.

யார் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது?

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும், இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிற மற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளுடன் இணைந்து இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும்.

அரசின் பங்களிப்பு:

  • பல்வேறு அமைச்சகங்களும், மக்களுக்குத் தமது நிதியில் இருந்து அல்லது, கோரப்படாமல் இருக்கும் பணத்தின்மூலம் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நல நிதியத்தில் இருந்து பிரிமியக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் இதற்கான வழி தீர்மானிக்கப்படும்.
  • இந்தத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவினை மத்திய அரசு ஏற்கும்.

ஆதாரம் : PIB

3.13414634146
Anonymous May 11, 2020 04:30 PM

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு ஜூன் மாதம் முதல் தேதி புதுப்பித்தல் செய்ய வேண்டி உள்ளது. உங்கள் வங்கி கணக்கில் ப்ரீமிய தொகைக்காக மே 25ம் தேதி முதல் ரூபாய் 330 இருப்பில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்

கனகராஜ் Apr 30, 2020 09:53 PM

2016 விருந்து பலமுறை இழப்பீடு பெற கனரா வங்கி கிளையில் எழுதி குடுத்துவிட்டோம் வங்கி மேலாளரும் அனுப்பிவிட்டேன் என்று சொல்கிறார்கள் ஆனால் இதுவரை வரவில்லை.ஆனாலும் வங்கி மேலாளர்கள் மாறிக்கொண்டே தான் இருக்கின்றனர் . ஒவ்வொரு மேலாளரிடமும் கோரிக்கை வைத்துக்கொண்டுதான் உள்ளோம்.அதேநேரத்தில் மே - ஜூன் மாதத்தில் 330ரூபாய் மற்றும் 12 ரூபாய் க்கான கட்டணம் போய்க்கொண்டு தான் உள்ளது.இறப்பிற்கு பிறகு கணக்கை முடிக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டனர்.

கனகராஜ் Jun 27, 2019 04:14 PM

ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் இழப்பீடு பெற வாரிசுதாரர் மைனராக இருந்தால் இழப்பீடு எவ்வளவு ஆண்டுக்குள் கோரவேண்டும். கோரமுடியும்.

சதீஸ் Dec 24, 2018 09:25 PM

ஜீவன் பாலிசியை இறந்ததில் இருந்து எத்தனை மாதத்திற்குள் பெற வேண்டும்

rajesh May 13, 2018 12:51 PM

எத்தனை வயது வரை பயன் பெறலாம்

ஆலயம் எஸ் ராஜா Jun 17, 2017 09:31 AM

வணக்கம்,
விபத்துக்காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறுவது எப்படி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top