பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்

பிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தனிநபர், வணிக நிறுவனம், மருத்துவமனைகள், என்.ஜி.ஓ-கள், அறக்கட்டளை அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பார்மசிஸ்ட்டுகள், டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் RMPக்கள் போன்றவர்கள் ஏழைகள் பயன்பெறும் வகையில் மருந்தககள் சொந்தமாக (ஜன அவுஷதி கேந்திரம் திறங்கள்) அமைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டம் சுயவேலை வாய்ப்பு வழங்குவதோடு, வருமானம் வரும் வாய்ப்பபையும் தருகிறது.  இதற்கு 10 சதுர மீட்டர் இடம் இருந்தாலே போதும்.

பயன்கள்

 1. Rs. 2.5 லட்சம் வரை நிதி உதவி நீக்குப்போக்கான கடன் வசதிகள் கிடைக்கின்றன.
 2. மார்க்கெட் உதவியும் கிடைக்கின்றன.
 3. பொது மருந்துகளையும் சேர்த்து விற்பதற்கு வசதி தரப்பட்டுள்ளன
 4. எஸ்ஸி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் சொந்தமாக ஜன அவுஷாதி கடையை அமைப்பதற்கு துவக்க உதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.

நாடு முழுவதும் ஏற்கனவே 600-க்கும் அதிகமான ஜன அவுஷதி மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க அடிப்படை தகுதி

 1. எந்த ஒரு தனிநபரும், வணிக நிறுவனமும் விண்ணப்பிக்கலாம்.
 2. மருத்துவமனைகள்
 3. என்.ஜி.ஓ-கள்
 4. அறக்கட்டளை அமைப்புகள்
 5. சுய உதவிக்குழுக்கள்
 6. பார்மசிஸ்ட்டுகள்
 7. டாக்டர்கள் மற்றும் பதிவு பெற்ற மருத்துவப்பணியாளர்கள் (RMP)

விபரங்களுக்கு

1800-180-8080/124-4556750 (திங்கள் முதல் சனி) காலை மணி 9.30 முதல் மாலை 5.30 வரை) அல்லது லாகின் செய்யுங்கள் : janaushadhi.gov.in

ஆதாரம் :janaushadhi.gov.in/

3.225
Senthilkumar Aug 04, 2018 04:09 PM

இது தொடங்க பார்மசிஸ்ட் தவிர வேறு நபர்களுக்கு தகுதி உள்ளதா? அதாவது சாதாரன நபர்

இராம்.இராஜேஷ்கண்ணன் Jun 15, 2018 06:25 PM

நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மிகவும் உதவிகரமான திட்டம். நன்றிகள் பல.இன்னும் நிறைய ஜன் ஔசதி கடைகள் திறக்கப்படும் என நம்புகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top