பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

பிரதமரின் தேசிய நிவாரண நிதி பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

நோக்கம்

பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக, 1948ம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவினால், பிரதமர் தேசிய நிவாரண நிதி (பி.எம்.என்.ஆர்.எப்.) உருவாக்கப்பட்டு, இந்நிதிக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது இந்த பி.எம்.என்.ஆர்.எப். நிதி ஆதாரமானது, இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி உதவி அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

பயன்கள்

  • பெரிய விபத்துகள், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
  • பி.எம்.என்.ஆர்.எப். உதவி மூலம், இதய அறுவை சிகிச்சை,
  • சிறுநீரக மாற்று சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பகுதியளவு வழங்கப்படுகிறது.
  • நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது.
  • இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிதித் தொகுப்பு, வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்து வைக்கப்படுகிறது.
  • நிதி வழங்கல், பிரதமரின் ஒப்புதலின்பேரில் மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.என்.ஆர்.எப். நாடாளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. இது வருமான வரிச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியமாக பிரதமர் அல்லது பல்வேறு பிரதிநிதிகளால் தேசிய நலனுக்காக நிர்வகிக்கப்படுகிறது.
  • பி.எம்.என்.ஆர்.எப். நிதியானது, பிரதமரின் அலுவலகம், சவுத் பிளாக், புதுடெல்லி – 110011 என்ற முகவரியில் இருந்து செயல்படுகிறது. இதற்காக எவ்வித லைசென்ஸ் கட்டணமும் செலுத்தப்படுவதில்லை. வருமான வரிச்சட்டம் 1961ன் பிரிவு 10 மற்றும் 139ன் கீழ் வரி விலக்கு பெற்றுள்ளது இந்த நிதி. பி.எம்.என்.ஆர்.எப்.-ன் தலைவராகப் பிரதமரும் அவருக்கு உதவியாக அதிகாரிகள்/அலுவலகர்களும் கவுரவ அடிப்படையில் இருப்பார்கள். ‘பி.எம்.என்.ஆர்.எப்’-க்கான நிரந்தர கணக்கு எண்: AACTP4637Q ஆகும்.

பி.எம்.என்.ஆர்.எப் . நிதிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நன்கொடை வகைகள்

தனிநபர் மற்றும் நிறுவனங்களால் தாமாக முன்வந்து அளிக்கப்படும் நிதியை மட்டுமே பி.எம்.என்.ஆர்.எப். ஏற்றுக் கொள்கிறது. அரசின் பட்ஜெட் நிதியில் இருந்தோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் நிதிநிலையில் இருந்தோ பங்களிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மிகப்பெரிய அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகள் ஏற்படும்போது, இந்த நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பார்.

ஆதாரம் : இந்திய அரசு

2.97727272727
அண்ணாதுரை Oct 24, 2016 10:43 AM

அரசின் நல்ல திட்டங்ஙள் அடித்தட்டு மக்களை சென்றடைவதில் உள்ள முட்டுக்கட்டைகள் இன்னும் முழுமையாக நீஙகவில்லை இதில் அரசு கவனம் கொடுக்க வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top