অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியாவில் தயாரிப்போம் (Make In India)

இந்தியாவில் தயாரிப்போம் (Make In India)

அறிமுகம்

125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை வலுவான உற்பத்தி கேந்திரமாக மாற்றி, புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு,  தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதே இந்தியாவில் தயாரிப்போம் திட்டமாகும்.

இதற்குத் தீவிர முயற்சிகள் தேவை. வெகு ஜனங்களின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படுவதாக அரசியல் தலைமை இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கபட்டாலும், இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் பொருளாதார சாதுரியம், நிருவாகச் சீர்திருத்தம் ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து முன்னேறும் இந்தியா என்ற வெகு ஜன விழைவை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுவதாகும்.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்முறைகள் பற்றிய முழுமையான விவரங்கள் www.makeinindia.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. அடுத்த 5-6 ஆண்டுகளில் (மத்தியகாலம்) நம் நாட்டின் உற்பத்தித்துறை ஆண்டுதோறும் 12 முதல் 14 % வரை வளர்ச்சிகாண வேண்டும். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 16 சதவீதம் உள்ள உற்பத்தித்துறையின் பங்களிப்பை 2022 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். உற்பத்தித்துறையில் மட்டும் 2022 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாகப் பத்து கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.

தற்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி ஆண்டொன்றுக்கு சுமார் 3.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்தப் பின்னணியில் மேற்குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு அதிக முயற்சிகள் தேவை. எனவே கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயரும் தொழிலாளர்களுக்கு சரியான திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். மேலும், இந்திய உற்பத்தித்துறையின் சர்வதேச போட்டித்திறமையை மேம்படுத்த வேண்டும். உற்பத்தியைப் பெருக்குகிற அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு கேடுவராமல் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் உலகின் முதல் மூன்று இடங்களில் உள்ள வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும், உலக நாடுகள் விரும்புகிற உற்பத்திக்கேந்திரங்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் இந்தியா திகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளில் கூட்டமைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி பேசியபோது 2050 ஆம் ஆண்டில் தான் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியும் என்று சொல்லப்பட்டது. மக்கள்தொகை வளர்ச்சியின் பயனாகிய, உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அடுத்த 20 – 30 ஆண்டுகளில் இந்தியாவில் அனுகூலமான நிலையில் இருக்கும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் குறைவானது. மேலும் நம் நாட்டில் சிரிய நிர்வாகத் திறமையுடனும் நம்பகத்தன்மையுடனும் பல தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் உள்ளது. மேலும் மக்களிடையே நுகர்வுக்கான விருப்பம் வலுவாக இருப்பதால், உள்நாட்டுச் சந்தை விரிவடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உற்பத்தியைப் பெருக்குவதற்கு உற்றதுணையாக, முதல் தரமான அறிவியல் தொழில்நுட்ப நிலையங்களின் ஆதரவுடன் வலுவான பொறியியல் நுட்ப வசதிகள் உள்ளன. வெளிநாட்டினரும் முதலீடு செய்வதற்கு ஏற்றவாறு முறைப்படுத்தப்பட்ட நிலை மாறுபாடு அடையாத நிதிச்சந்தைகளும் இந்தியாவில் உள்ளன.

தொழில்நுட்பத்தைப் பெறவும் அபிவிருத்தி செய்யவுமான நிதியம்

உற்பத்தித்துறைக்கு வேண்டிய தொழில்நுட்பங்களை வாங்கவும், காப்புரிமைத் தொகுப்பை உருவாக்கவும், மாசுகட்டுப்பாட்டுக்கும் எரிபொருள் சிக்கனத்திற்கும் துணைபுரிகிற கருவிகளை உள்நாட்டுலேயே தயாரிக்கவும் உதவும் பொருட்டு ஓருரிமத்தை ஏற்படுத்தவும் உத்தேசிக்கப்படடுள்ளது.

இந்த நிதியமே தன்னாட்சி நிறுவனமாக காப்புரிமை தொகுப்பு மையமாகவும், உரிமம் வழங்கும் முகமையாகவும் செயல்படும். காப்புரிமை வைத்திருப்பவர்களிடம் இருந்து அறிவுசார் சொத்துரிமையை விலைக்கு வாங்கும் பணியையும் இது செய்யும்.

தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல்

திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாமல் உற்பத்தித்துறை வளர்ச்சி அடைய முடியாது. இந்த விஷயத்தில் திறன் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அரசு அளிக்கும் திறன் பயிற்சிகளால், கிராமப்புறங்களில் இருந்து பெயருவோரும், நகர்ப்புறத்து ஏழைமக்களும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குள் இணைந்து கொள்வார்கள்.

மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதலுக்கான அமைச்சகம், திறன் வளர்சசிக்கான தேசியக் கொள்கையை மறுவரையறை செய்ய உள்ளது. இதுதவிர ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் தீனதயாள் உபாத்யாய கிராமீன் கெளஷல்யா யோஜனா என்ற திறன் பயிற்சித் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

புதிய திறன் பயிற்சி திட்டங்களின் படி நாடு முழுவதும் சுமார் 1500 முதல் 2000 வரையிலான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு சுமார் ரூ.2000 கோடி வரை செலவிடப்படும். சந்தைப் பொருளாதாரத்தில் தேவையின் அடிப்படையில் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, மேற்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில், திறன் பயிற்சி பெற்ற இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.  முதல் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் மூன்று லட்சம் இளைஞர்களுக்கும் இத்திட்டங்களின் மூலம் திறன் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : http://www.pib.nic.in© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate