கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெறப்படும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்களான கேளிக்கைவரி, முத்திரைத்தாள் கட்டணம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் மாநில அளவில் ஒருங்கிணைத்து, பின்னர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதனால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப் பட்ட வருவாயினை சமச்சீரான முறையிலும், விரைவாகவும், எளிதாகவும், பகிர்ந்தளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டமைப்புக்கு தேவையான சாலைகள், பாலங்கள், குடிநீர் வசதி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி மன்றக் கட்டடங்கள் போன்ற பணிகளை தேர்வு செய்யலாம்.
மாவட்ட அளவில் பணியை தேர்வு செய்து அதன் விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் முன்மொழிவு பெறப்பட்டு முதன்மைச் செயலர் தலைமையில் செயல்படும் மாநில குழு ஒப்புதலுக்கு வைக்கப்படும். குழு ஒப்புதல் பெறப்பட்டவுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்களால் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு செயல்முறை ஆணை வழங்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் இப்பணியை மேற்கொள்ள, மாவட்ட ஊரக வளச்சி முகமை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளில் பொருத்தமான அமைப்பு மூலம் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்குவார்.
மாவட்ட அளவிலோ அல்லது வட்டார அளவிலோ ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படும்
இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைகள், பாலங்கள் வடிகால் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமைக்கப்படுவதன் மூலம் விவசாய பொருட்கள் கொண்டு செல்லவும், மருத்துவ வசதி பெறவும், மாணவர்கள் கல்வி மேம்படவும் இந்த திட்டம் ஏதுவாக இருக்கும்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்