மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியினை நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் தேவைக்கேற்ப நிலையான சமுதாயச் சொத்துக்கள் மற்றும் சமுதாயக் கட்டமைப்பு பணிகளை தேர்வு செய்து நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம் 1993-ம் ஆண்டு மத்திய அரசால் துவக்கப்பட்டது.
ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.5.00 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.
அ) மக்களவை உறுப்பினர்
மக்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவரவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆ) மாநிலங்களவை உறுப்பினர்
மாநிலங்களவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவரவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் பணிகளைப் பரிந்துரைக்கலாம்.
இ) நியமன உறுப்பினர்
நியமன உறுப்பினர்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பணிகளைச் செயல்படுத்தப் பரிந்துரைக்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர், தனக்குத் தேவையான ஒருங்கிணைப்பு மாவட்டத்தினை (சூடினயட னுளைவசiஉவ) தேர்வு செய்து, புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்துக்கு தெரிவிக்கலாம்.
மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஒரு மாவட்டத்திற்கும் மேல் இருப்பின், மக்களவை உறுப்பினர் ஏதேனும் ஒரு மாவட்டத்தினை ஒருங்கிணைப்பு மாவட்டமாக தேர்வு செய்யலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிக்குட்பட்ட பகுதியில், நிலையான சொத்துக்களை உருவாக்கிடக் கீழ்கண்ட பணிகளை பரிந்துரைக்கலாம்.
•குடிநீர் பணிகள்
•கல்வி
•மக்கள் நலவாழ்வு
•சுகாதாரம்
•சாலைப் பணிகள்
•நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் 15 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினர் வசிக்கும் பகுதிகளுக்கும், 7.5 விழுக்காடு பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
•நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், பழங்குடியினர் வாழும் பகுதி இல்லையெனில், வரையறுக்கப்பட்ட நிதியினைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதிகளுக்கு பயன்படுத்தலாம்.
•அதேபோல், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதி இல்லையெனில் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யலாம்.
•வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பணிகளை பரிந்துரை செய்யலாம்.
•பேரிடர் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக, இத்திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பரிந்துரை செய்யலாம்.
•பேரிடரின் விளைவு கடுமையாக இருப்பின், பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை பணிகளுக்காக பரிந்துரை செய்யலாம்.
•இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்கள் விருப்பத்திற்கிணங்க, வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்கள் தொகுதிகளுக்கு செய்ய வேண்டிய பணிகளை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
•மாவட்ட ஆட்சியர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்படும்.
•நிர்வாக அனுமதி வழங்கிய பின் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் இப்பணிகளை தொடர்புடைய துறையினர் செயல்படுத்துவார்கள்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
தொகுதி அளவில் : நாடாளுமன்ற / மக்களவை உறுப்பினர்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.