சாலை வசதியில்லாத 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தத்தக்க வகையில் தேவையான சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நிதி ஒதுக்கீடு :
இத்திட்டம் 100 விழுக்காடு மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய ஊரக சாலை மேம்பாட்டு முகமையின் வழிகாட்டுநெறிமுறைகளின்படி இத்திட்டத்தின் கீழ் 500க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களில் உள்ள சாலைகள் தேர்வு செய்யப்படும். மேலும், தேசிய ஊரக சாலை மேம்பாட்டு முகமையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சாலைத் தொகுப்பில் உள்ள மிகவும் பழுதடைந்த சாலைகளும் தேர்வு செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் சாலைகள் அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலை துறையின் சாலைகள் சம்மந்தப்பட்ட தோட்டப் பொறியாளர் (தே.நெ) மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் இணைப்பு சாலை வசதியில்லாத குக்கிராமங்கள் சாலை வழி பெறும். இதன் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரம் மேம்படும்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.