பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முழு சுகாதார இயக்கம் / நிர்மல் பாரத் அபியான்

முழு சுகாதார இயக்கம் / நிர்மல் பாரத் அபியான் பற்றிய தகவல்

திட்ட துவக்கம்

•மத்திய அரசின் ராஜுவ்காந்தி தேசிய குடிநீர் இயக்கத்தினால் “முழு சுகாதார இயக்கம்” என்ற திட்டம் 1999ஆம் ஆண்டில் முதலாவதாக கடலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

•இத்திட்டம் தற்போது மத்திய அரசால் ‘நிர்மல் பாரத் அபியான்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திட்ட நோக்கம்

•2022 -க்குள் ஊரகப் பகுதிகளில் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி செய்தல்.

•முழுமை நோக்கில் அனைத்து கிராம ஊராட்சிகளையும் சுகாதாரமான கிராம ஊராட்சிகளாக மாற்றுதல்.

•தேவையின் அடிப்படையில், மக்களை மையப்படுத்தி தகுதியுள்ள ஊரக குடும்பங்களை மானியத்துடன் கூடிய கழிப்பிடங்கள் கட்ட ஊக்கப்படுத்துதல்.

•செம்மையான சுகாதாரக் கல்வி அளிப்பதன் மூலம் ஊரக மக்களின் சுகாதார செயல்பாடுகளில் மாற்றத்தினைக் கொண்டுவருதல்.

திட்ட செயலாக்கம்

தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள்

தனிநபர் கழிப்பிட அலகு தொகை ரூ.6600/-

• மத்திய அரசு நிதி - ரூ.3,200/-

• மாநில அரசு நிதி - ரூ.2,500/- *

• பயனாளிகளின் பங்குத் தொகை - ரூ. 900/-

இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை / உதவித் தொகை பெற தகுதியான ஊரகக் குடும்பங்கள்.

1.வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.

2.வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், வீடு உள்ள நிலமற்ற உழைப்பாளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமையில் செயல்படும் குடும்பங்கள். இவ்வகைக் குடும்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடர்புடைய கிராம ஊராட்சித்தலைவரைக் கொண்ட குழுவால் கண்டறியப்பட்டு, தயாரிக்கப்படும் பட்டியல் கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

பள்ளி சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வி

அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டுதல்

• மொத்த அலகுத் தொகை - ரூ.35,000

• மத்திய அரசு நிதி - ரூ.24,500 (70 ரூ)

• மாநில அரசு நிதி - ரூ.10,500 (30 ரூ)

அங்கன்வாடிக் கழிப்பிடங்கள்

• மொத்த அலகுத் தொகை - ரூ. 8,000

• மத்திய அரசு நிதி - ரூ. 5,600 (70 ரூ)

• மாநில அரசு நிதி - ரூ. 2,400 (30 ரூ)

சுகாதார வளாகங்கள்

• மொத்த அலகுத் தொகை - ரூ.2,00,000

• மத்திய அரசு நிதி - ரூ.1,20,000 (60 ரூ)

• மாநில அரசு நிதி - ரூ.60,000 (30 ரூ)

• பயனாளிகளின் பங்குத் தொகை - ரூ.20,000 (10 ரூ)

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை

கிராம ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டபடி (மத்திய அரசு : மாநில அரசு) 70 : 30 என்ற விகிதத்தில் அலகுத்தொகை நிர்ணயிக்கப்படும்.

1 - 150 வீடுகளுக்குள் - ரூ. 7 இலட்சம்

150 - 300 வீடுகளுக்குள் - ரூ.12 இலட்சம்

300 - 500 வீடுகளுக்குள் - ரூ.15 இலட்சம்

500 வீடுகளுக்கு மேல் - ரூ. 20 இலட்சம்

ஏற்கெனவே நிர்மல் கிராமத்திற்கான தகுதிகளை அடைந்த அல்லது நிர்மல் கிராமத்திற்கான தகுதிகளை அடையவுள்ள கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், எருக்குழிகள், மண்வாறுகால், உறிஞ்சு குழிகள், மறுசுழற்சிக் குழிகள் மற்றும் பார்த்தீனீயம் களை நீக்கம் உள்ளிட்ட முட்புதர்களை அகற்றுதல் போன்ற திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைப்பணிகள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துடன் இணைத்து மேற்கொள்ளப்படும்.

நிர்மல் கிராம் புரஸ்கார் விருது

•சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக ஜுலை 2003 ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “தூய்மையான கிராம இயக்கம்” என்ற விருதினை, சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனை முன்மாதிரியாகக் கொண்டு, மத்திய அரசு, முழு சுகாதார இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதினை 2005 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

நோக்கம்

•ஊரகப் பகுதிகளில் சுகாதார வசதியினை மேம்படுத்தி வளர்ச்சி பெறச் செய்தல்.

•திறந்தவெளியில் மலம் கழித்தலைத் தடுத்தலும் தூய்மையான கிராமத்தை உருவாக்குதலும்.

•முழுசுகாதார இயக்கத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்த ஊராட்சி அமைப்புகளை ஊக்குவித்தல்.

•முழு சுகாதாரத்தை எய்தப் பாடுபடும் அமைப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.

•ஊராட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி, தகவல், கல்வி மற்றும் தொடர்பு திறன் மூலம் கழிப்பிடங்களின் தேவையை கண்டறிந்து தனிநபர் கழிப்பறை / ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டுதல் மற்றும் பயன்படுத்துதல்.

ஊக்கத் தொகை

• கிராம ஊராட்சி - ரூ.50,000/- முதல் ரூ.5 லட்சம் வரை

(மக்கள் தொகையின் அடிப்படையில்)

• வட்டார ஊராட்சி - ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை

(மக்கள் தொகையின் அடிப்படையில்)

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.025
MANIKANDAN Sep 08, 2016 03:29 PM

அருமையாக உள்ளது நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top