பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆசிரியர் தேர்வு வாரியம் - 2018 - 2019

ஆசிரியர் தேர்வு வாரியம் - 2018 - 2019 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஆசிரியர் தேர்வு வாரியம் 1987 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர், சட்டக் கல்வி கல்லூரி இயக்குநர் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் சில பணியிடங்களுக்கும் பணிநாடுநர்களை தாமதமின்றி தெரிவுசெய்து அளிக்கும்பொருட்டு நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கண்ட பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்யும் பணியினை மேற்கொண்டது. இதுவரை 1,59,451 பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை (TNTET) நடத்தும் மாநில இணைப்பு முகமையாகவும் (Nodal Agency) ஆசிரியர் தேர்வு வாரியமானது செயல்பட்டு வருகிறது. பல்வேறு இனங்களுக்கென பணிநாடுநர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை மற்றும் வழிமுறைகள் பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலக இணையதள முகவரியில் http://ibnic.in போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடிய தேர்வர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நோக்கங்கள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதன்மை நோக்கம் பணிநாடுநர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர் பணிநாடுநர்களின் பணியிடங்களின் தகுதிக்கேற்ப வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிவதும் ஆகும். மேலும் நேர்மையான தெரிவு முறையை உறுதி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் கீழ்க்கண்ட நடைமுறைத் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்கிறது:

*அனைத்துப் பணித்தேர்வு நடைமுறைகளையும் மின்மியமாக்குதல்

*அனைத்திற்கும் மின் ஆளுமை வளங்களைப் பயன்படுத்துதல்

*ஒளியியல் குறியீடுவாசிப்பான் (Optical MarkReader - OMR) வழியாக தேர்வர்களின் விடைத்தாட்களை மதிப்பீடு செய்தல்

நியமனப் பணிகளை குறைகள் இல்லாத நடைமுறைகளாக மாற்றும் பணிகள்

தேர்வு நடைமுறைகளில் முறைகேடான செயல்களைத் தடுப்பதற்கு கடுமையான வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான முறையில் தேர்வுகள் நடத்திட நிலையான செயல் வழிமுறைகளை மாற்றி வகுத்தல் இன்றியமையாததாகும். பிரச்சனைக்குரிய சில முக்கியமான பகுதிகள் வரையறுக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு ஏற்பாடுகள் மூலம் கட்டுப்படுத்தப்படும். இப்பகுதியில் வினாத்தாள் பாதுகாக்கப்படும் இடம், தேர்வு மையம், முக்கிய ஆவணங்கள் எடுத்துச்செல்லுதல், ஒளியியல் குறியீடு வாசிப்பான் (OMR) விடைத்தாட்கள் பாதுகாப்பு மற்றும் உள்ளீடு (Starring) பணிகள் மேற்கொள்ள அதிகமான கவனம் செலுத்தப்படும். வருடந்தோறும் தெரிவுப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தெரிவுப்பணிக்கென தேவைப்படும் கருவிகள் உள்ளீடு செய்யும் இயந்திரம் (Scarming Machines) உட்பட கொள்முதல் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் ஒளியியல் குறியீடு வாசிப்பான் (OMR) விடைத்தாட்கள் அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்படும். பட்டைக்குறியீடு (Bar Code) ஆசிரியர் தேர்வு வாரிய பணியாளரால் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரம் உரிய அலுவலரால் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய பணியாளர்கள் உள்பட பயோ-மெட்ரிக் முறையிலான நுழைவு முறையை பயன்படுத்தியே இப்பகுதியில் நுழைவதற்கு அனுமதி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் மையச் செயல்பாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் முழுமையான வசதிகளுடன் தகவல் மையப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இத்தகவல் மையத்தில் பணிநாடுநர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை வழங்கிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியமனங்கள்

2017-2018 ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 2357 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், 195 பட்டதாரி ஆசிரியர்களும் மற்றும் 59 பட்டதாரி ஆசிரியர்களும் (IEDSS) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II இல் தகுதி பெற்ற தேர்வர்களிலிருந்து, சமூக பாதுகாப்புத் துறைக்கு 1 பட்டதாரி ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2011-12 ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரையிலான சாதனைகள்

ஆசிரியர் தேர்வு வாரியமானது மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் பல்வேறு வகைகளின்கீழ் 45,832 ஆசிரியர்களை பின்வருமாறு தெரிவுசெய்துள்ளது,

• பள்ளிக் கல்வித்துறை-43,044

• பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை -1,260

• உயர்கல்வித்துறை- 1,528

நேரடி நியமனத்திற்கான ஆண்டுத் திட்டம்

ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு வகையான போட்டி எழுத்துத் தேர்வுகளை நடத்துகிறது, ஆண்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட போட்டி எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கூடிய தேர்வர்கள் தங்களை முன்கூட்டியே முழுமையாகத் தயார் செய்துகொண்டு சிறப்பாக தேர்வினை எதிர்கொள்ள ஏதுவாக முறையாக வெளியிடப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

ஆசிரியர்களை தெரிவு செய்யும் அரசின் முகவாண்மை நிறுவனமாக இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களுக்குரிய பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை ஒளிவுமறைவு இன்றி சீரிய முறையில் தெரிவுசெய்து வருகிறது. 2018 - 19 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு 4.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை

3.07317073171
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top