பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (National Mission for Sustainable Agriculture (NMSA))

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம், அந்தந்தப் பகுதிகளின் பருவ நிலைக்கு உகந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைபிடித்து, வேளாண்மையை நீடித்த நிலையான மற்றும் இலாபகரமான தொழிலாக மாற்றும் உன்னதக் குறிக்கோளை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய உப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மானாவாரி பகுதி மேம்பாடு (Rainfed Area Development- RAD)

மானாவாரி பகுதி மேம்பாட்டின் முக்கியமான நோக்கமே, ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளான பலஅடுக்கு சாகுபடி, பயிர் சுழற்சி, ஊடுபயிர், கலப்பு பயிர் போன்ற சாகுபடி முறைகளை கடைப்பிடிப்பதுடன் இதர செயல்பாடுகளான தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, வேளாண் காடுகள், தேனீ வளர்ப்பு, மரமல்லாத வனப்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மற்றும் நிலையான வருமானம் பெறுவதுடன் வறட்சி, வெள்ளம் மற்றும் இதர பேரிடர்களிலிருந்து பாதுகாக்கவும் வழி வகுக்கிறது. இத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் (60:40 என்ற விகிதத்தில்) செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

கடந்த 2014-15 முதல் 2017-18ஆம் ஆண்டு வரை ரூ.50.16 கோடி நிதியில், 15,085 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை சார்ந்த பண்ணையம், 835 எண்கள் மண்புழு உரஅலகு 2,232 எண்கள் மண்புழு படுக்கை மற்றும் 59.77 எக்டர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட சூழல் சாகுபடி, 96 செயல்விளக்கங்கள், 345 பயிற்சிகள் மற்றும் 4 அறுவடை பின்செய் சேமிப்பு கிடங்குகள் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில், ரூ.21.24 கோடி நிதி ஒதுக்கீட்டில், தோட்டக்கலை சார்ந்த பண்ணையம், பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடி, மண்புழு உர உற்பத்தி, கிராம அளவில் சேமிப்பு / சிப்பம் இடுதல் / பதம் செய்யும் கூடங்கள், பயிற்சி மற்றும் செயல்விளக்கம் ஆகிய திட்டங்கள் 28 மாவட்டங்களில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை , இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

(Paramparagat Krishi Vikas Yojana (PKVY)

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து எளிய சான்றளிப்பு முறையான விவசாயக்குழுக்களில் பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் (Participatory Guarantee System) எனப்படும் சான்றுடன் அங்கக விளைப்பொருட்களை உள்ளூர் சந்தைகளில் சந்தைப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும், மாநில அரசின் பங்காக 40 சதவீத நிதியுடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூன்றாண்டு தொடர் திட்டமாகும்.

இத்திட்டம் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல் (கொடைக்கானல் உட்பட) ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ண கிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் 2015-16ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில், சான்றளிப்புடன் கூடிய இயற்கை வேளாண்மை சாகுபடியை 2550 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ள தொடங்கப்பட்டது. முதலாம் ஆண்டில் (2015-16) 26 மாவட்டங்களில் 51 குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.3.60 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டது.

2016-17ல், இதே குழுக்களில் இரண்டாம் ஆண்டு திட்டம் ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டன.

மூன்றாம் ஆண்டான 2017-18ல் ரூ. 0.74 கோடி நிதியில், இத்திட்டத்தின்கீழ் நச்சுப்பொருட்கள் பகுப்பாய்வு, பயிர் சாகுபடி, நிலத்தினை இயற்கை வேளாண்மைக்கு மாற்றுதல், தழைச்சத்தினை மண்ணில் நிலைப்படுத்தக்கூடிய செடிகளை வளர்த்தல் வேளாண் இயந்திரங்கள் வாடகை செலவினம், இயற்கை விளைபொருட்களை சிப்பமிடுதல், பெயரிடுதல் மற்றும் வர்த்தக குறியீடு ஆகியவற்றிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு செயல்படுத்தப்படுவதோடு ரூ.39 இலட்சம் நிதியில் மேலும் 11 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு, 550 ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மை மற்றும் பங்கேற்பு சான்றிதழ் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

(Integrated Horticulture Development SchemeIHDS)

தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வீரிய ரக காய்கறி விதைகள் மற்றும் தரமான நடவுச் செடிகள் 40 முதல் 50 சதவீதம் மானியத்தில், காய்கறிப் பயிர்களுக்கு அதிகபட்சமாக 2 எக்டருக்கும், பழவகைப் பயிர்களுக்கு அதிகபட்சமாக 4 எக்டருக்கும் ஒரு பயனாளிக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டமானது தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்படாத ஒன்பது மாவட்டங்களான கரூர், காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ஆம் ஆண்டு வரை தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம் 78,323 எக்டர் பரப்பில் ரூ.27.47 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ.4.12 கோடியில் 4,581 எக்டர் பரப்பில் 2017-18ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டமானது ரூ.4.98 கோடி நிதியில் 4,861 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையில் 2018-19ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவப் பயிர்கள்

(National Ayush Mission - Medicinal Plants - NAM-MP)

காடுகளில் வளர்ந்து வரும் மருத்துவப்பயிர்களை விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி மேற்கொண்டு நீண்ட காலம் நிலைத்திருக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே 60:40 என்ற பங்களிப்பு விகிதத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மருந்துக் கூர்க்கன், கண்வலிக்கிழங்கு, நெல்லி, திப்பிலி, மணத்தக்காளி மற்றும் வசம்பு ஆகிய பயிர்களுக்கு சாகுபடி செலவில் 30% அல்லது 50% சாகுபடி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 2016-17ஆம் ஆண்டில் மருந்துக் கூர்க்கன், கண்வலிக்கிழங்கு, நெல்லி போன்ற பயிர்களுக்கு 960 எக்டர் பரப்பளவில் ரூ2.53 கோடி நிதிச் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் 2017-18ல், ரூ 2.28 கோடி நிதியில் 748 எக்டர் பரப்பளவில் மருந்துக்கூர்க்கன், கண்வலிக்கிழங்கு, திப்பிலி, கோக்கம், மணத்தக்காளி மற்றும் நெல்லி இரண்டாம் ஆண்டு பராமரிப்பிற்காக கடலூர், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடந்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீன் மயமாக்கல் திட்டம் (தோட்டக்கலை)TNIAMP

தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் ஓர் பல்நோக்குத் திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட உபநீர் வடிநில பகுதிகளில் அதிக நீர்த் தேவைப்படும் பயிர்களில் இருந்து குறைந்த நீர்த் தேவைப்படும் அதிக வருவாய் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை உயர் தொழில் நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தீவிரப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நீர்வள நிலவளத்திட்டம் பகுதி 1ல் தோட்டக்கலை இனத்தின் கீழ் 2007-08 முதல் 2014-15 வரையிலான காலத்தில் 61 உபநதி படுகைகளில் ரூ. 77.47 கோடி நிதியுடன் 49,850 எக்டர் பரப்பளவில் உயர் மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. 2018-19 முதல் 2023-24ஆம் ஆண்டு வரை 41,916 எக்டர் பரப்பளவில் பழங்கள், வீரிய ஒட்டு ரக காய்கறிகள், நறுமணப்பயிர்கள் மற்றும் பூக்கள் ரூ. 210 கோடி நிதியில் 66 உபவடிநீர் பகுதியில் 30 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டில் (2018-19) 2,600 எக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி ரூ.17.91 கோடி நிதியில் 18 உபவடிநீர்ப் பகுதிகளில் 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டமிடப் பட்டுள்ளது. பயிர் செயல் விளக்கங்கள், நஞ்சற்ற காய்கறி சாகுபடி, நுண்ணீர் பாசனத்தை ஊக்குவித்தல், பருவ நிலை மாற்றத்திற்குகந்த பாதுகாக்கப்பட்ட சூழல் சாகுபடி மற்றும் நிலப்போர்வை ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் (Supply Chain Management-SCM)

எளிதில் அழுகும் தன்மையுடைய காய்கறிகள் மற்றும் பழங்களுக்காக விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் ரூ.398.754 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ண கிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பண்ணை நிலையிலிருந்து நுகர்வோருக்கு சென்றடையும் நிலை வரை பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற விரைவில் அழுகும் பொருட்களுக்கான விநியோகத் தொடர் உட்கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைந்த முறையில் இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தினை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளால் இணைந்து செயல்படுத்தப் படுகிறது.

இப்பகுதிகளில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறையின் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் சுவைதானிதப் பயிர்களில் பரப்பு விரிவாக்கம், நுண்ணீ ர்பாசனம், உயர் தொழில் நுட்ப சாகுபடி ஆகிய இனங்கள் பல்வேறு தோட்டக்கலைத் திட்டங்களை இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்

(Pradhan Mantri Fasal Bima YojanaPMFBY)

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் விலக்கி கொள்ளப்பட்டு 2016 காரீப் பருவம் முதல் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, மஞ்சள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமம் அளவில் காப்பீடு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், 2016-17ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்த 18,704 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.52.858 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2017-18ஆம் ஆண்டில் (கரீப் மற்றும் ரபி பருவம்) 62,720 விவசாயிகள் 93949.8 ஏக்கர் பரப்பிற்கு அறிவிப்பு செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

நடப்பு 2018-19ஆம் ஆண்டில் (கரீப் மற்றும் ரபி பருவத்தில்) 50% பரப்பு அதாவது 2,98,900 ஏக்கர் பரப்பிற்கு தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களில் கூட்டுப் பண்ணையம்

(Collective Farming)

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த கடன் வசதி பெறுதல், சிறந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல், முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை ஏற்படுத்துதல் முதலியவற்றை மேற்கொள்வதற்கான உன்னத திட்டத்தினை தமிழக அரசு 2017-18ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது.

2017-18ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் 2000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் மூலம் 505உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ரூ.24.70 கோடி சுழல் நிதியைப் பயன்படுத்தி, 494உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

நடப்பு 2018-19ஆம் ஆண்டிலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகளின் கீழ் 2000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் தோட்டக்கலைத் துறையின் கீழ் மட்டும் 505 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு சிறப்பு வாழ்வாதார தொகுப்புத் திட்டம்

29.11.2017 மற்றும் 30.11.2017 ஆகிய தினங்களில் வீசிய ஓகி புயலினால் தோட்டக்கலைப் பயிர்கள் 6077.56 எக்டர் பரப்பில் 28,073 விவசாயிகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளானது. தோட்டக்கலைப் பயிர்களான வாழை, இரப்பர் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் 5467.52 எக்டர் பரப்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 121.01 எக்டர் பரப்பில் திருநெல்வேலி மாவட்டத்திலும் மற்றும் 488.94 எக்டர் பரப்பில் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஓகி புயலினால் பாதிப்புக்குள்ளானது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை புனரமைக்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.854 கோடிக்கான சிறப்பு வாழ்வாதார தொகுப்புத் திட்டத்தை 11.12.2017 அன்று வாழை, இரப்பர் மற்றும் கிராம்பு பயிர்களுக்கு அறிவித்தார்கள். ஒரு எக்டருக்கு பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கு ரூ.48,500/முதல் ரூ.63,500/- வரையிலும், இரப்பருக்கு ரூ.1,00,000/-ம் வரையிலும் மற்றும் கிராம்பு பயிருக்கு ரூ.28,500/வரையிலும் சிறப்பு வாழ்வாதார தொகுப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டு மாநில பேரிடர் நிவாரண நிதி, மாநில நிதி மற்றும் இதர திட்டங்களான தேசிய தோட்டக்கலை இயக்கம், நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை ரூ.9.40 கோடி இடுபொருள் நிவாரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில நிதியிலிருந்து ரூ.3.562 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரப்பர் (ரூ.25,000/ எக்டர்) மற்றும் கிராம்பு (ரூ.10,000/ எக்டர்) மறு சாகுபடிக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களிலிருந்து முறையே ரூ.8.98 கோடி மற்றும் ரூ.1.71 கோடி மாற்று ஒதுக்கீடு செய்யப்பட்டு 3054.71 எக்டர் பரப்பில் எக்டருக்கு ரூ.35,000/- என்ற அடிப்படையில் வாழை மறுசாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து ரூ.6.42 கோடி இரப்பர் மறுசாகுபடிக்கும், தேசிய தோட்டக்கலை இயக்கத்திலிருந்து 20 எண்கள் தேனீக்களுடன் கூடிய தேனீ பெட்டிகள் அமைப்பதற்கு எக்டருக்கு ரூ.32,000 என்ற அடிப்படையில் ரூ.8.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, வாழை மறுசாகுபடி 1,251.78 எக்டர் பரப்பில் ரூ.328.59 இலட்சம் நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம்பு மறு சாகுபடி ரூ.4.22 இலட்சம் நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இரப்பர் மறுசாகுபடி 342.36 எக்டர் பரப்பில் ரூ.85.01 இலட்சம் நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்

இனத்தூய்மையான மற்றும் தரமான நடவு செடிகளை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விநியோகம் செய்வதே அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் நோக்கமாகும். மேலும் இப்பண்ணையானது சமீபத்திய தொழில்நுட்பங்கள், பண்ணை இயந்திரமாக்கல், நவீன நீர்பாசன தொழில்நுட்பங்களை கொண்டு "மாதிரி செயல்விளக்க பண்ணையாக" விவசாயிகளுக்கு திகழ்கிறது, மேலும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றது. தமிழ்நாட்டில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், 29 மாவட்டங்களில் 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. புதிய முன்முயற்சியாக 10 வகையான உயர் விளைச்சல் காய்கறி விதைகள் 17 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை வாரியம், தரமான நடவுப்பொருள் உற்பத்தி செய்வதற்காக 35 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு தர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாநிலத்தின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நடவு பொருட்கள் கிடைக்கப் பெறுவதற்காக தூத்துகுடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களில் புதிய பண்ணைகள் ஏற்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழவியல் நிலையம் குன்னூர், 1949ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு வகையான மலைப்பாங்கான பகுதிக்கு உகந்த இனத்தூய்மையான பழபயிர்களைப் பற்றி பயிலும் மையமாக திகழ்கிறது. இப்பழவியல் நிலையத்தை சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க ரூபாய்.1.164கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2017-18ஆம் ஆண்டில் 9.26 கோடி நடவு பொருட்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதில் 8.00 கோடி குழித்தட்டு காய்கறி மற்றும் மலர் நாற்றுகள் மற்றும் 11.25 லட்சம் மருத்துவப்பயிர் நாற்றுக்கள் அடங்கும்.

2018-19ஆம் ஆண்டு 11.47 கோடி நடவுப்பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் விபரம்

வ. எண்

மாவட்டம்

இடம்

நிறுவப் பட்ட ஆண்டு

பரப்பு(எக்டர்)

1

அரியலூர்

கீழப்பழுவூர்

2018

7.58

2

கோயம்புத்தூர்

ஆனைக்கட்டி

1986

12.00

3

கண்ணம்பாளையம்

2001

11.20

4

கடலூர்

 

நெய்வேலி

1985

39.53

5

விருதாச்சலம்

1975

10:43

6

தருமபுரி

போளயம்பள்ளி

2013

2.73

7

திண்டுக்கல்

 

சந்தையூர்

2013

15.20

8

கொடைக்கானல்

1961

1.73

9

தாண்டிக்குடி

1985

5.45

10

சிறுமலை

1980

200.04

11

ஈரோடு

பகுதம்பாளையம்

2018

10.00

12

காஞ்சிபுரம்

 

ஆத்தூர்

1961

12.24

13

விச்சந்தாங்கல்

1982

23.25

14

மேல்கதிர்பூர்

1982

42.63

15

மேலொட்டிவாக்கம்

1982

20.60

16

பிச்சிவாக்கம்

1982

34.00

17

கன்னியாகுமாரி

 

கன்னியாகுமாரி

1922

12.64

18

பேச்சிப்பாறை

1967

6.00

19

கரூர்

முதலைப்பட்டி

1978

23.96

20

கிருஷ்ணகிரி

திம்மாபுரம்

1952

9.51

21

ஜீனூர்

1980

121.96

22

மதுரை

பூஞ்சுத்தி

2012

5.76

23

நாகப்பட்டினம்

வண்டுவாஞ்சேரி

2018

6.54

24

நாமக்கல்

செம்மேடு

1974

11.60

25

படசோலை

1989

22.67

26

பெரம்பலூர்

வெங்கலம்

2018

4.72

27

புதுக்கோட்டை

 

குடுமியான்மலை

1974

118.68

28

வல்லத்திராக் கோட்டை

1977

521.20

29

நாட்டுமங்கலம்

1985

53.02

30

சேலம்

 

மாபெரும் பழப்பண்ணை கருமந்துறை

1981

419.77

31

மணியார்குன்றம்

1982

100.00

32

கருமந்துறை

1981

39.35

33

முள்ளுவாடி

1985

48.40

34

சிறுமலை

1987

8.00

35

சிவகங்கை

 

தேவக்கோட்டை

1985

81.19

36

நேமம்

1979

38.77

37

தஞ்சாவூர்

ஆடுதுறை

1988

8.90

38

மருங்குளம்

1966

10.70

39

நீலகிரி

பர்லியார்

1871

6.25

40

கல்லார்

1900

8.92

41

பழ பதனிடும் நிலையம் குன்னூர்

1965

4.05

42

பழவியல் நிலையம்குன்னூர்

1948

10.46

43

காட்டேரி

1974

16.96

44

தொட்டபெட்டா .

1969

2.52

45

தும்மனட்டி

1956

9.80

46

நஞ்சநாடு

1917

64.00

47

தேவாலா

1978

80.00

48

கோல்கிரைன்

1989

20.40

49

திருவாரூர்

மூவாநல்லூர்

2018

8.87

50

திருப்பூர்

சங்கராமநல்லூர்

2018

10.12

51

தேனி

பெரியகுளம்

1950

9.32

52

சென்னை

மாதவரம்

1980

4.38

53

திருச்சிராப்பள்ளி

தொரக்குடி

2013

4.05

54

திருநெல்வேலி

வன்னிக்கோனேந்தல்

2018

10.86

55

வேலூர்

 

தகரக்குப்பம்

1985

34.40

56

கூடப்பட்டு

1961

10.08

57

நவ்லாக்

1981

84.42

58

விழுப்புரம்

ஏ.சாத்தனூர்

2018

10.00

59

விருதுநகர்

 

பூவானி

1967

9.46

60

ஸ்ரீவில்லிபுத்தூர்

1982

46.27

61

இராமநாதபுரம்

ஓரியூர்

2013

14.77

 

 

மொத்தம்

 

2602.31

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

தோட்டக்கலைத்துறை, மாநிலத்தில் 7 மாவட்டங்களில் 18 பூங்காக்களைப் பராமரித்து வருகிறது. இவை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு மையங்களாகத் திகழ்கின்றன. மேலும் இவை தாவரவியல் மாணவர்களுக்கு பயிலும் களமாகவும் விளங்குகின்றது.

1961ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரயண்ட் பூங்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் 5.5 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். மேலும் இப்பூங்காவிற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.6.8 கோடி செலவில் இப்பூங்காவினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல 2017-18ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு கொய்மலர் செயல்விளக்க மையம் அமைக்கும் பொருட்டு கொடைக்கானலில் ரோஜா பூங்கா மற்றும் கொய்மலர் செயல்விளக்க மையம் அமைக்க ரூபாய்.11.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில், 15 ஏக்கர் பரப்பளவில், ரூ.4 கோடி செலவினத்தில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுற்றுசூழல் பூங்கா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 05.04.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்களின் விவரம்

வ. எண்

பூங்காக்கள் மற்றும் தோட்டங்களின் பெயர்கள்

மாவட்டம்

பரப்பளவு (எக்டர்)

நிறுவப் பட்ட ஆண்டு

1

அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி

நீலகிரி

22.00

1848

2

அரசு ரோஜா பூங்கா, ஊட்டி

14.40

1995

3

சிம்ஸ் பூங்கா, குன்னூர்

12.14

1969

4

காட்டேரி பூங்கா (அரசு தோட்டக்கலை பண்ணை , காட்டேரி)

2.00

2011

5

தேயிலை பூங்கா, தொட்டப்பெட்டா வண்ணத்துப்பூச்சி பூங்கா, தேவாலா

17

2015

6

பிரையண்ட் பூங்கா, அண்ணா பூங்கா

கொடைக்கானல்

 

7.93

1908 - 2010

7

செட்டியார் பூங்கா

2.02

1980

8

ரோஜா பூங்கா மற்றும் கொய்மலர் செயல் விளக்கத் தோட்டம்

4.00

2018

9

அண்ணா பூங்கா

சேலம்

 

1.87

1999

10

ஏரிபூங்கா

1.27

1999

11

ரோஜா தோட்டம்

15:14

1975

12

ஐந்திணை மரபணு பூங்கா, ஏற்காடு

10.00

2012

13

அரசு தாவரவியல் பூங்கா , ஏற்காடு-1

8.10

2010

14

அரசு தாவரவியல் பூங்கா , ஏற்காடு-2

8.10

2010

15

செம்மொழி பூங்கா

சென்னை

3.17

2010

16

சுற்றுசூழல் பூங்கா, குற்றாலம்

திருநெல்வேலி

14.89

2012

17

ஐந்திணை மரபணு பூங்கா, அச்சடிபிரம்பு

இராமநாதபுரம்

4.00

2015

18

சுற்றுச்சூழல் பூங்கா

கன்னியாகுமரி

6.00

2018

 

மொத்தம்

 

138.73

 

முன்னேற்றத்தில் உள்ள பணிகள்

1) சென்னை மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில், தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக 20.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.73 கோடி செலவினத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு அலங்கார செயல்விளக்க பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

2) தரமான நடவு செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய காலத்திற்குள் வழங்கச் செய்ய திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் முறையே ரூ. 1 கோடி மற்றும் ரூ.2 கோடி நிதியில் புதிய தோட்டக்கலைப் பண்ணைகள் ஆரம்பித்து செயல்படுத்தப்பட உள்ளது.

3) உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திட ஏதுவாக கண்ணாடி கூடம், பெரணி கூடம், மலர் மாடங்கள் மற்றும் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி ரூ.8.492 கோடி நிதி செலவினத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

4) காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்கதிர்பூர், கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், திண்டுக்கல் மாவட்டத்தில் சந்தையூர், நாமக்கல் மாவட்டத்தில் படசோலை, கரூர் மாவட்டத்தில் முதலைப்பட்டி, வேலூர் மாவட்டத்தில் நவ்லாக் ஆகிய 6 அரசு தோட்டக்கலை பண்ணைகளை ரூ.5.83 கோடி செலவினத்தில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5) அரசு தோட்டக்கலை பண்ணைகளான பூவானி (விருதுநகர் மாவட்டம்), முதலைப்பட்டி (கரூர் மாவட்டம்), வல்லத்திராக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) மற்றும் ஜீனூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் பயன்படுத்தப் படாமலிருக்கும் இடத்தினை பயன்படுத்தும் பொருட்டு ரூ. 2.67 கோடி செலவினத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6) நபார்டு: ஊரக வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் 10 மாவட்டங்களில் உள்ள 19 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ரூ.20.76 கோடி நிதியில் கூடுதல் உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலர் மற்றும் பழக் கண்காட்சிகள்

ஆண்டுதோறும், வசந்த காலம் மற்றும் கோடைகாலப் பருவங்களில் பூங்காக்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக பழம் மற்றும் மலர் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக திகழ்கிறது, இதில் மலர் கண்காட்சி, காய்கறி மற்றும் நறுமண பயிர்கள் கண்காட்சி, கலாச்சார நிகழ்வுகள் பார்வையாளர்களை கவரும் விதமாக அமைகின்றன. மலர் கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 வகையான பல்வேறு மலர்களைக் கொண்டு அரசு தாவரவியல் பூங்காவில் காட்சிப் படுத்தப்பட்டு பல்வேறு பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

அரசு ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி இத்துறையால் நடத்தப்படும் முக்கியமான நிகழ்வாகும். இக்கண்காட்சியில் பிரபலமான மற்றும் வசிகரமான ரோஜா மலர் கட்டமைப்புகள் விதவிதமான ரோஜா மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது. சிம்ஸ் பூங்கா, குன்னூரில் (நீலகிரி) பழக் கண்காட்சியும், மாம்பழக் கண்காட்சி கிருஷ்ணகிரியிலும், காய்கறி கண்காட்சி கோத்தகிரியிலும் நீலகிரி), வாசனை பொருட்கள் கண்காட்சி கூடலூரிலும், சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.

ஏற்காடு மற்றும் கொடைக்கானலில் உள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்களிலும் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சியில் பூக்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு உருவம் அமைத்தல், பூக்கோலம் மற்றும் போன்சாய் காட்சி கூடம் போன்றவை பிரபலமானவை. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் சாரல் விழா நடத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை பயிற்சி மையங்கள் (Horticulture Training Centres)

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் செயல்பட்டு வரும் நான்கு தோட்டக்கலைப் பயிற்சி மையங்களின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி குறித்த உயர்தொழில் நுட்ப பயிற்சி அளிப்பதே ஆகும். மேலும் தோட்டக்கலைத் துறையில் பணியாற்றும் களப் பணியாளர்களுக்கு தோட்டக்கலை அறிவியலில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011-12 முதல் 2017-18ஆம் ஆண்டு வரை 26,800 விவசாயிகளுக்கு ரூ.63.60 இலட்சம் நிதியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டு 4,000 விவசாயிகளுக்கு ரூ.32 இலட்சம் நிதியில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிற்சி தவிர 2 ஆண்டு கால தோட்டக்கலைப் பட்டய படிப்பு ஆண்டுதோறும் 40 மாணவர்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை மையம், மாதவரம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2018-19ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலையில் ஈராண்டு பட்டயப்படிப்பு தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டத்திலும் முறையே 100 மாணவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று ஆண்டுதோறும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா)

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் ஒரு “சிறப்பு நோக்க அமைப்பாக” 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் காடுகள் மற்றும் மூங்கில் இயக்கம்), பிரதம் மந்திரியின் விவசாயத்திற்கான நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் துளி நீர் அதிக பயிர் என்னும் உட்பிரிவில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய ஆயுஷ் இயக்கம் - மருத்துவப் பயிர்கள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் தமிழ்நாடு நீர்வள நில வளத்திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் டான்ஹோடா மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

வேளாண்மை, தோட்டக்கலைத் துறை திட்டங்களுக்கான தரமான இடுபொருட்கள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் கொள்முதல் செய்து, விநியோகம் செய்ய சிறப்பு நோக்க அமைப்பாகவும் டான்ஹோடா செயல்படுகிறது. டான்ஹோடாவின் ஆளுமைக் குழு இந்த சிறப்பு நோக்க அமைப்பிற்கு அதிகாரக் குழுவாக செயல்படுகிறது. நீரில் கரையும் உரங்கள் மற்றும் விதைகள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய தருணத்தில் வழங்க ரூபாய் ஐம்பது கோடி சுழல் நிதியாக பயன்படுத்தப்படுகிறது.

பணியாளர்கள் விபரம்

தோட்டக்கலை தொழில்நுட்பங்களையும், அரசின் திட்டங்களையும் விவசாயிகளுக்கு வழங்கவும், துறை செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், தோட்டக்கலைத் துறையின் கீழ் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

ஒப்பளிக்கப்பட்ட பணியிடம்

வ. எண்

பதவி விபரம்

மொத்த பணியிடம்

1

தொழில் நுட்ப அலுவலர்கள்

2,610

2

இதர அலுவலர்கள்

1,223

 

மொத்தம்

3,833

அலுவலர்கள் விபரம்

வ. எண்

அலுவலர்கள் விவரம்

மொத்தபணியிடம்

1

கூடுதல் தோட்டக்கலை இயக்குநர்

2

2

தோட்டக்கலை இணை இயக்குநர்

6

3

தோட்டக்கலை துணை இயக்குநர்

39

4

தோட்டக்கலை உதவி இயக்குநர்

2

5

தோட்டக்கலை அலுவலர்

404

6

தோட்டக்கலை துணை அலுவலர்

123

7

உதவி தோட்டக்கலை அலுவலர்

1,633

8

உதவி விதை அலுவலர்

5

9

இதர அலுவலர் பணியிடங்கள்: (துணை இயக்குநர் (நிர்வாகம்), முதன்மை கணக்கு அலுவலர், ஆட்சி அலுவலர், கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் இதர அனைத்து பதவிகள்)

1,223

 

மொத்தம்

3,833

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.15384615385
ராஜசேகர் Apr 26, 2020 07:03 PM

தக்காளி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் எச்சூர் கிராமத்தில் பயிரிடலாமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top