பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மை - விவசாயிகள் பயிற்சி

வேளாண்மை - விவசாயிகள் பயிற்சி 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், தற்போது கடைபிடித்து வரும் தொழில்நுட்ப அறிவு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து பயிற்சிகள் வழங்குவது அவசியமாகிறது. மேலும், அவர்களின் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலமாக வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வழிமுறைகளை வழங்குவதற்கும் பயிர் உற்பத்தி மற்றும் பண்ணை சாகுபடிக்கான மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவான முடிவுகளை எடுக்கும் திறனையும் வலுப்பெறச் செய்கிறது.

விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த கிராம அடிப்படையிலான குறுகிய கால மற்றும் நீண்ட கால பயிற்சிகள் கிராம அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் வழங்கப்படுகின்றன. பல்வேறு பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

வேளாண் விரிவாக்கத்திற்கான துணை இயக்கம்

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் (Support to State Extension Programmes for Extension Reforms Scheme - SSEPERS)

வேளாண் விரிவாக்கத் துணை இயக்க திட்டமானது தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வனத்துறை, வேளாண் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி, செயல்விளக்கங்கள், கண்டுணர் சுற்றுலா, விருது, வேளாண் செய்திகள் பரவலாக்கம், விவசாயிகள் மற்றும் அறிவியல் வல்லுநர்கள் கலந்துரையாடல், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் கூட்டு ஆய்வு, விவசாயிகள் கூட்டம், தொழில்நுட்ப அளவீடு மற்றும் மதிப்பீடு செய்தல்,ப ண்ணைப்பள்ளிகள், புதிய செயல் வடிவங்கள் மற்றும் புதிய தொழில் நுட்ப பரவலாக்கம் ஆகிய இனங்கள் மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிமாநில அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் பயிற்சி மையங்கள்

மாநிலம் முழுவதும் 22 உழவர் பயிற்சி நிலையங்களின் மூலம் ஆண்டுதோறும் 28,820 விவசாயிகள், அமைப்பாளர்கள், மகளிர் விவசாயிகள் மற்றும் கிராமிய இளைஞர்களுக்கும் விவசாய மேலாண்மை மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது.

உழவர் பயிற்சி நிலையங்கள்

வ. எண்

மாவட்டம்

அமைவிடம்

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

2

விழுப்புரம்

விழுப்புரம்

3

வேலூர்

வேலூர்

4

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

5

சேலம்

சேலம்

6

நாமக்கல்

நாமக்கல்

7

தருமபுரி

தருமபுரி

8

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

9

ஈரோடு

ஈரோடு

10

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

11

பெரம்பலூர்

பெரம்பலூர்

12

கரூர்

கரூர்

13

புதுக்கோட்டை

குடுமியான்மலை

14

தஞ்சாவூர்

சாக்கோட்டை

15

தேனி

தேனி

16

திண்டுக்கல்

திண்டுக்கல்

17

இராமநாதபுரம்

பரமக்குடி

18

சிவகங்கை

சிவகங்கை

19

விருதுநகர்

விருதுநகர்

20

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

21

தூத்துக்குடி

தூத்துக்குடி

22

கன்னியாகுமரி

நாகர்கோவில்

பிரதான பயிற்சி நிலையமாக, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் செயல்பட்டு வரும் மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையம் மூலமாக விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 1,100 விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

2012-13ஆம் ஆண்டில் மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையவளாகத்தில் தொடங்கப்பட்ட மாநில வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையமானது வேளாண் சார்ந்த திட்டமிடல், திட்ட வடிவங்கள் தயாரித்தல் மற்றும் திட்ட ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.

மதுரை மாவட்டம் விநாயகபுரத்தில் 1985ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அரசு நீர் மேலாண்மை பயிற்சி மையத்தின் மூலமாக ஆண்டுதோறும் 900 விவசாயிகள் மற்றும் 180 விரிவாக்க அலுவலர்களுக்கு நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்ப்பாசன திறன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமுறை

தமிழ்நாடு அரசு வேளாண் விரிவாக்க அமைப்பினை பலப்படுத்தி, சீரமைத்து விவசாயிகள் குழு சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறையினை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. விரிவாக்க அலுவலர்கள் நேரடியாக விவசாயிகள், விவசாயக் குழுக்கள் மற்றும் விளைபொருள் குழுக்களோடு தொடர்புகொண்டு வயல்மட்ட அளவில் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து உரிய தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. 385 வட்டாரங்களில் உள்ள 12,620 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள 1,918 உதவி வேளாண்மை அலுவலர்களைக் கொண்டு நிரந்தர பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலரும் நிர்ணயிக்கப்பட்ட 8 தொகுதிகளிலுள்ள தொடர்பு மையங்களுக்கு இரு வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று களப்பணி செய்வதை வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள். வேளாண்மை உதவி இயக்குநர் வாரத்திற்கு மூன்று முறையும், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் வாரத்திற்கு இருமுறையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் மண் பரிசோதனை நிலையங்கள்

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தன்மையை ஆய்வு செய்து அவற்றின் தரத்தை அறியும் பொருட்டு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மாநில அளவில் செயல்படுகின்றன.

தமிழ்நாட்டில் 31 மண் பரிசோதனை நிலையங்கள், 16 நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள், 14 உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், 15 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள் (3 பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீடு மையங்கள் உட்பட), ஒரு உயிர் உர தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், ஒரு மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் 2 அங்கக உரகட்டுப்பாட்டு ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. ஆய்வின் தரத்தை மேலும் அதிகரிக்கவும் தரக்கட்டுப்பாட்டினை வலுப்படுத்தவும், ஆய்வகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு அத்தியாவசியப் பொருள் சட்டம் 1955-இன் கீழ் இயற்றப்பட்ட உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971 ஆகியவற்றுக்கு உட்பட்டு, அவற்றில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை தீவிரமாக தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உர ஆய்வாளர்களால் சேகரிக்கப்படும் உரமாதிரிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, 4 உரக்கட்டுபாட்டு ஆய்வகங்கள் இயங்கிவருகின்றன.

மாநிலத்தில் இயங்கி வரும் 14 உரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களின் விபரம் பின்வருமாறு :

அட்டவணை 1: உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள்

வ.எண்

மாவட்டம்

அமைவிடம்

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

2

விழுப்புரம்

விழுப்புரம்

3

சேலம்

சேலம்

4

தருமபுரி

தருமபுரி

5

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

6

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

7

தஞ்சாவூர்

கும்பகோணம்

8

திருவாரூர்

திருவாரூர்

9

மதுரை

மதுரை

10

திண்டுக்கல்

திண்டுக்கல்

11

இராமநாதபுரம்

பரமக்குடி

12

தூத்துக்குடி

கோவில்பட்டி

13

கன்னியாகுமரி

நாகர்கோவில்

14

நீலகிரி

ஊட்டி

அங்ககப்பண்ணையத்தில் விவசாயிகளின் ஈடுபாட்டை நிலைநிறுத்தவும், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அங்கக உரங்களான மண்புழு உரம், நகர்ப்புற மக்கிய உரம்(City Compost) மற்றும் எண்ணெய் நீக்கப்பட்ட புண்ணாக்குகளை ஆய்வு செய்ய, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் இரண்டு அங்கக உர ஆய்வகங்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில், 1,273 அங்கக உர மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் தரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய, அறிவிக்கை செய்யப்பட்ட 15 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள் (3 பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீடு மையங்கள் உட்பட) செயல்படுகின்றன. பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் 1971 ஆகியவற்றுக்கு உட்பட்டு, பூச்சிகொல்லி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் விற்பனை மையங்களிலிருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மாதிரிகளின் தரத்தை, இந்த ஆய்வகங்கள் ஆய்வு செய்கின்றன.

மேலும் காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இயங்கி வரும் 2 பூச்சிக் கொல்லி ஆய்வகங்களுக்கு, ஆய்வு மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான அங்கீகாரம் வழங்கும் தேசிய நிறுவனத்தின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) தரநிர்ணயச் சான்றினை பெற, அரசு சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் உள்ள பூச்சிக்கொல்லி ஆய்வகங்களில் மூன்று அடுக்கு குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, கடலூர், ஈரோடு மற்றும் தேனி பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள், பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீடு மையங்களாக (Pesticide Testing Laboratory cum Coding Centre) தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள்

வ. எண்

மாவட்டம்

அமைவிடம்.

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

2

வேலூர்

வேலூர்

3

சேலம்

சேலம்

4

தருமபுரி

தருமபுரி

5

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

6

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

7

தஞ்சாவூர்

ஆடுதுறை

8

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

9

மதுரை

மதுரை

10

சிவகங்கை

சிவகங்கை

11

திருநெல்வேலி

திருநெல்வேலி

12

தூத்துக்குடி

கோவில்பட்டி

பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீடு மையங்கள்

13

கடலூர்

கடலூர்

14

ஈரோடு

ஈரோடு

15

தேனி

வைகை அணை

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகம், வேளாண்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு ஆய்வகங்களின் தரத்தை மேம்படுத்தவும், அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஆய்வக உபகரணங்களின் செயல்பாடுகளையும், ஆய்வு முடிவுகளின் துல்லியத்தையும் உறுதி செய்வதற்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. மேலும் மண் ஆய்வு அடிப்படையில் உரங்களை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உதவுகிறது.

மாநிலத்தில் இயங்கி வரும் 31 மண் பரிசோதனை நிலையங்கள் மற்றும் 16 நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் மூலம் பண்ணை மற்றும் பயிருக்கேற்ற ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவித்து, ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பரிசோதனை நிலையங்கள் மூலம் ஆண்டு தோறும் 11.46 இலட்சம் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களை ஆய்வு செய்ய, அனைத்து மண் பரிசோதனை நிலையங்களுக்கும் அணுக்கதிர் ஈர்ப்பு ஒளி அலைக்கற்றைமானிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் இயங்கி வரும் மண் பரிசோதனை நிலையங்கள் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் விவரம் பின்வருமாறு.

மண்பரிசோதனை நிலையங்கள் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள்

வ எண்

மாவட்டம்

மண்பரிசோதனை நிலையங்கள்

நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள்

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

 

2

திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர்

3

கடலூர்

கடலூர்

 

4

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்

5

வேலூர்

மேலாலத்தூர்

 

6

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

7

சேலம்

சேலம்

 

8

நாமக்கல்

நாமக்கல்

திருச்செங்கோடு

9

தருமபுரி

தருமபுரி

 

10

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

11

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

 

12

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர்

13

ஈரோடு

ஈரோடு

ஈரோடு

14

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

 

15

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர்

16

அரியலூர்

அரியலூர்

 

17

கரூர்

கரூர்

கரூர்

18

புதுக்கோட்டை

குடுமியான்மலை

 

19

தஞ்சாவூர்

ஆடுதுறை

 

20

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

21

திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர்

22

மதுரை

மதுரை

மதுரை

23

தேனி

தேனி

 

24

திண்டுக்கல்

திண்டுக்கல்

 

25

இராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி

26

சிவகங்கை

சிவகங்கை

 

27

விருதுநகர்

விருதுநகர்

அருப்புக்கோட்டை

28

திருநெல்வேலி

திருநெல்வேலி

 

29

தூத்துக்குடி

கோவில்பட்டி

கோவில்பட்டி

30

கன்னியாகுமரி

நாகர்கோவில்

நாகர்கோவில்

31

நீலகிரி

ஊட்டி

 

உட்கட்டமைப்பு

வேளாண்மைத் துறையில் மண்பரிசோதனை நிலையங்கள், உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், பூச்சிகொல்லி ஆய்வகங்கள், விதை பரிசோதனை நிலையங்கள், விதை சுத்திகரிப்பு நிலையங்கள், விதை சேமிப்பு கிடங்குகள், அரசு விதைப் பண்ணைகள், உயிர் உரத் தயாரிப்பு மையங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையங்கள், ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையங்கள், அங்கக உர ஆய்வகங்கள், உழவர் மையங்கள், உழவர் பயிற்சி நிலையங்கள், நீர் மேலாண்மை பயிற்சி மையம், மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையம், வேளாண் விரிவாக்க மையங்கள் போன்ற வேளாண் விரிவாக்க சேவை மற்றும் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.

இம்மையங்கள் வேளாண் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதோடு தகவல் பரிமாற்ற மையங்களாகவும் செயல்படுகின்றன. நவீன வேளாண் தொழில் நுட்பங்களை உடனுக்குடன் விளம்பரப்படுத்தி அவைகளை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் செயல்பாட்டில் ஈடுபடுவதோடு, வேளாண் தொடர்பான இடர்பாடுகளுக்கு தீர்வுகளையும் அளிக்கின்றன.

இவற்றோடு, வேளாண்மைக்கு ஆதாரமான அத்தியாவசிய இடுபொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்து இடுபொருள் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்கச்செய்து, சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு துணைபுரிகின்றன.

வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி நிலையங்கள் / மையங்கள்

தமிழ்நாடு வேளாண்துறையின் கீழ் "தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை" செயல்பட்டு வருகிறது. இம்முகமை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் நோக்கத்தோடு, விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான திட்டமிடலை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. தரமான சான்று விதைகள், தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் விநியோகம், விதை உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், விதை தொடர்பான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்தல் மற்றும் மாநிலம் முழுமைக்கும் ஒரே விலையில் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்யப்படுவது போன்றவை கண்காணிக்கப்படுகின்றன.

மாநில அரசு விதைப்பண்ணைகள் மற்றும் தென்னை நாற்றுப்பண்ணைகள்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நாற்பது மாநில அரசு விதைப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விதைப்பண்ணைகள், உயர்விளைச்சல் இரக விதைகள் மற்றும் நடவுப் பொருட்களை உற்பத்தி செய்து உரிய நேரத்தில் தேவையான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதோடு நவீன தொழில்நுட்பங்களை செயல்விளக்கங்கள் மூலம் விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்யும் மாதிரி பண்ணைகளாகவும் விளங்குகின்றன.

விதை உற்பத்தி மையங்கள்

மாநில அரசு விதைப்பண்ணைகள்

வ எண்

மாவட்டம்

அரசு விதைப்பண்ணை

மொத்த பரப்பளவு ஏக்கர்)

1

காஞ்சிபுரம்

பஞ்சுபேட்டை

58.76

2

திருவள்ளூர்

கொளந்தலூர்

50.72

3

கடலூர்

மிராலூர்

46.98

4

வண்டுராயன்பட்டு

50.99

5

விழுப்புரம்

காகுப்பம்

31.60

6

இருவேல்பட்டு

50.72

7

வடக்கனேந்தல்

47.06

8

வானூர்

60.36

9

திருவண்ணாமலை

அத்தியேந்தல்

14.11

10

வாழவச்சனூர்

36.00

11

சேலம்

டேனிஷ்பேட்

96.40

12

மேட்டூர்

57.90

13

ஈரோடு

பவானி

73.61

14

 

சத்தியமங்கலம்

41.89

15

தருமபுரி

பாப்பாரப்பட்டி

14.80

16

திருப்பூர்

பாப்பான்குளம்

26.88

17

புதுக்கோட்டை

அண்ணாபண்ணை

601.95

18

திருச்சிராப்பள்ளி

புதூர்பாளையம்

75.97

19

 

நெய்குப்பைப்புதூர்

38.57

20

கரூர்

இனுங்கூர்

205.44

21

தஞ்சாவூர்

சாக்கோட்டை

72.18

22

நாகப்பட்டினம்

நாகமங்கலம்

63.91

23

திருக்கடையூர்

45.74

24

திருவாரூர்

கீரந்தி

55.70

25

காஞ்சிகுடிகாடு

53.02

26

திருவாரூர்

தேவாம்பாள்பட்டினம்

92.72

27

நெடும்பலம்

63.73

28

மூங்கில்குடி

47.63

29

மதுரை

விநாயகபுரம்

45.52

30

தேனி

கீழக்கூடலூர்

47.86

31

விருதுநகர்

தேவதானம்

52.07

32

திருநெல்வேலி

கரையிருப்பு

83.59

33

கன்னியாகுமரி

திருப்பதிசாரம்

37.20

 

மொத்தம்

2,441.58

மாநில எண்ணெய்வித்து விதைப் பண்ணைகள்

வ. எண்

மாவட்டம்

அரசு விதைப்பண்ணை விவரம்

மொத்த பரப்பளவு (ஏக்கர்)

34

காஞ்சிபுரம்

முசரவாக்கம்

154.95

35

கிருஷ்ணகிரி

அகசிபள்ளி

16.69

36

புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதி

657.35

37

வேலூர்

நவ்லாக்

66.16

38

ஈரோடு

பவானிசாகர்

28.39

39

கடலூர்

நெய்வேலி(டான்காப்)

301.01

 

மொத்தம்

1,224.55

மாநில பயறு வகை விதைப் பெருக்கு பண்ணை

வ. எண்

மாவட்டம்

அரசுவிதைப் பண்ணைவிவரம்

மொத்த பரப்பளவு (ஏக்கர்)

40

புதுக்கோட்டை

வம்பன்

475.00

 

மொத்த பரப்பளவு (40மா.வி.ப)

4,141.13

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் 23 தென்னை நாற்றுப் பண்ணைகள் மற்றும் 16 தென்னை ஒட்டுசேர்ப்பு மையங்கள் மூலம் தரமான நெட்டை, குட்டை மற்றும் கலப்பின தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பட்டுவருகின்றன. அவற்றுள் 2017-18ஆம் ஆண்டில் 6 தென்னை நாற்றுப் பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.1.80 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தென்னை நாற்றுப்பண்ணைகள் மற்றும் தென்னை ஒட்டு மையங்கள்

வ.எண்

மாவட்டம்

தென்னை நாற்றுப் பண்ணைகள்

தென்னை ஒட்டு மையங்கள்

1

காஞ்சிபுரம்

பிச்சிவாக்கம்

 

2

திருவள்ளூர்

மாதவரம்

மாதவரம்

3

கடலூர்

நெய்வேலி

 

4

விழுப்புரம்

 

மரக்காணம்

5

வேலூர்

நவ்லாக்

நவ்லாக்

6

திருவண்ணாமலை

வாழவச்சனூர்

 

7

சேலம்

டேனிஷ்பேட்டை

சுக்கம்பட்டி

8

கிருஷ்ண கிரி

பி.ஜி.புதூர்

காவேரிபட்டினம்

9

கோயம்பத்தூர்

ஆழியார் நகர்

எஸ்ஜிபாளையம்

10

ஈரோடு

பவானிசாகர்

அய்யம்பாளையம்

11

திருச்சிராப்பள்ளி

திருவரங்கம்

திருவரங்கம்

12

புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதி

 

13

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை

14

நாகப்பட்டினம்

மல்லியம்

 

15

தேனி

வைகை அணை

போடிநாயக்கனூர்

16

இராமநாதபுரம்

உச்சிப்புளி

உச்சிப்புளி

தேவிபட்டினம்

 

17

சிவகங்கை

சதுர்வேதிமங்கலம்

லாடநேந்தல்

18

விருதுநகர்

தேவதானம்

தேவதானம்

19

திருநெல்வேலி

செங்கோட்டை

வடகரை

வடகரை

 

20

தூத்துக்குடி

கிள்ளிகுளம்

உடன்குடி

21

கன்னியாகுமரி

புத்தளம்

அகஸ்தீஸ்வரம்

22

திருவாரூர்

வடுவூர்

 

விதைசுத்திகரிப்பு நிலையங்கள்

அரசின் கட்டுப்பாட்டில், 55 பெரிய விதை சுத்திகரிப்பு நிலையங்களும் (ஆண்டுக்கு 1,000 மெட்ரிக் டன் திறன்), 7 மத்திய திறன் கொண்ட விதை சுத்திகரிப்பு நிலையங்களும் (ஆண்டுக்கு 500 மெட்ரிக் டன்) மற்றும் 64 சிறிய விதை சுத்திகரிப்பு நிலையங்களும் (ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன்) செயல்பட்டு வருகின்றன. இந்நிலையங்களின் மொத்த சுத்திகரிப்புத் திறன் 71,300 மெட்ரிக் டன் ஆகும். இந்த விதை சுத்திகரிப்பு நிலையங்களில் அரசு விதைப் பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்படும் விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன.

விதை சுத்திகரிப்பு நிலையங்கள்

வ எண்

மாவட்டம்

நிலையங்களின் எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

பெரியது

நடுத்தரம்

சிறியது

1

காஞ்சிபுரம்

2

 

4

6

2

திருவள்ளூர்

3

 

4

7

3

கடலூர்

-

 

3

3

4

விழுப்புரம்

5

1

3

9

5

வேலூர்

1

 

3

4

6

திருவண்ணாமலை

3

1

6

9

7

சேலம்

2

 

 

3

8

நாமக்கல்

1

 

2

3

9

தருமபுரி

1

 

2

3

10

கிருஷ்ண கிரி

1

 

2

3

11

கோயம்புத்தூர்

1

 

1

2

12

திருப்பூர்

1

 

2

3

13

ஈரோடு

2

 

2

4

14

திருச்சிராப்பள்ளி

2

 

3

5

15

பெரம்பலூர்

 

 

1

1

16

அரியலூர்

2

 

1

3

17

கரூர்

2

 

 

2

18

புதுக்கோட்டை

2

 

3

5

19

தஞ்சாவூர்

6

 

1

7

20

நாகப்பட்டினம்

2

 

5

7

21

திருவாரூர்

3

2

2

7

22

மதுரை

4

2

 

6

23

தேனி

 

 

2

2

24

திண்டுக்கல்

1

 

 

1

25

இராமநாதபுரம்

2

1

 

3

26

சிவகங்கை

1

 

2

3

27

விருதுநகர்

1

 

4

5

28

திருநெல்வேலி

1

 

4

5

29

தூத்துக்குடி

2

 

1

3

30

கன்னியாகுமரி

21

 

1

2

மொத்தம்

55

7

64

126

நுண்ணூட்ட உரக்கலவை உற்பத்தி மையங்கள்

நுண்ணூட்ட உரங்கள், பயிர்களுக்கு மிக குறைந்த அளவில் தேவைப்பட்டாலும், பயிர்களின் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விளைபொருட்களின் தரத்தை அதிகரிக்க வல்லவை. எனவே, அரசு நுண்ணூட்ட உரங்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் செயல்படும் அரசு நுண்ணூட்ட உரக்கலவை உற்பத்தி மையம் மூலம், 14 வகையான அறிவிக்கை செய்யப்பட்ட நுண்ணூட்ட உரக் கலவைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

உயிர் உரங்கள் உற்பத்தி மையங்கள்

அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்களை பயன்படுத்துவதால், மண்ணில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவை ஈடுசெய்ய, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா போன்ற மூன்று வகையான உயிர் உரங்கள், வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 உயிர்உர உற்பத்தி மையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3,000 மெட்ரிக் டன் உற்பத்தித்திறன் கொண்ட இம்மையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் திட உயிர் உரங்கள், 200 கிராம் உயிர்உர பொட்டலங்களாக விநியோகிக்கப்படுகின்றன. மேலும், 12 முதல் 24மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தக்கூடிய திரவ உயிர் உரங்கள் 12 திரவ உயிர் உர உற்பத்தி மையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திட மற்றும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யும் மையங்களின் விவரம் பின்வருமாறு:

உயிர் உர மற்றும் திரவ உயிர் உரஉற்பத்தி மையங்கள்

வ. எண்

மாவட்டம்

உயிர் உர உற்பத்தி மையங்கள்

திரவஉயிர்உர உற்பத்தி மையங்கள்

1

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

 

2

கடலூர்

கடலூர்

கடலூர்

3

திருவண்ணாமலை

போளூர்

 

4

சேலம் .

சேலம் .

சேலம் .

5

தருமபுரி

பாலக்கோடு

 

6

திருப்பூர்

அவினாசி

 

7

ஈரோடு

பவானி

 

8

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

 

9

புதுக்கோட்டை

குடுமியான்மலை

குடுமியான்மலை

10

தஞ்சாவூர்

சாக்கோட்டை

சாக்கோட்டை

11

திருவாரூர்

நீடாமங்கலம்

 

12

தேனி

உத்தம பாளையம்

 

13

இராமநாதபுரம்

இராமநாதபுரம்

இராமநாதபுரம்

14

திருநெல்வேலி

தென்காசி

 

15

தூத்துக்குடி

தூத்துக்குடி

 

16

திருவள்ளூர்

 

புழல்

17

விழுப்புரம்

 

முகையூர்

18

வேலூர்

 

குடியாத்தம்

19

அரியலூர்

 

ஜெயங்கொண்டம்

20

மதுரை

 

திருமங்கலம்

21

திண்டுக்கல்

 

பழனி

22

சிவகங்கை

 

மானாமதுரை

உயிரி கட்டுப்பாட்டு ஆய்வகங்கள்

இயற்கையான முறையில் பயிர் பாதுகாப்பு மேலாண்மையை அரசு சீரிய முறையில் ஊக்குவித்து வருகிறது. இதன் அங்கமாக உயிரி கட்டுப்பாட்டு காரணிகளையும், ஒட்டுண்ணிகளையும் பயன்படுத்தி பூச்சி, நோய் மேலாண்மைக்காக 10 உயிரி கட்டுப்பாட்டு ஆய்வகங்களும், 2 ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையங்களும் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன.

2017-18ஆம் ஆண்டில் டிரைக்கோடெர்மா விரிடி 103 மெட்ரிக் டன், சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் 45 மெட்ரிக் டன், நியுக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ் கரைசல் 2,800 லிட்டர் மற்றும் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 2,300 சிசி ஆகியவை வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கிவரும் உயிரி கட்டுப்பாட்டு ஆய்வகங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளன.

2018-19ஆம் ஆண்டிலும் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யப்பட்டு தொடர்ந்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

உயிரிகட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை மையங்கள்

வ.எண்

மாவட்டம்

உயிரிகட்டுப்பாட்டு ஆய்வகம்

ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை மையம்

1

காஞ்சிபுரம்

 

பஞ்சுப்பேட்டை

2

விழுப்புரம்

விழுப்புரம்

 

3

சேலம்

சீலநாயக்கன்பட்டி

 

4

நாமக்கல்

நாமக்கல்

 

5

தருமபுரி

பாப்பாரப்பட்டி

 

6

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

 

7

ஈரோடு

பவானி

 

8

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

 

9

தஞ்சாவூர்

காட்டுத்தோட்டம்

 

10

மதுரை

விநாயகபுரம்

விநாயகபுரம்

11

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

 

மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கீழ்கண்ட உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகின்றன.

உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள்

உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள்

கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள் மற்றும் நோய்கள்

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணி)

கரும்பு இடைக்கணுபுழு

பெத்திலிட்,பிரக்கோனிட் (புழு ஒட்டுண்ணிகள்), யூலோபிட் (கூட்டுப்புழு ஒட்டுண்ணி)

தென்னை கருந்தலைப்புழு

பச்சை நிற மஸ்கார்டின் பூஞ்சாணம் (மெட்டாரைசியம்)

தென்னை காண்டாமிருக வண்டு

என்.பி.வி. (நியூக்ளியர் பாலி ஹெட்ரோசிஸ் வைரஸ்)

நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு, புரோடினியா மற்றும் பருத்தி காய்ப்புழு

உயிரி பூஞ்சாணக்கொல்லிகள் சூடோமோனாஸ் புளோரஸன்ஸ் ட்ரைகோடெர்மா விரிடி

பருத்தி, பயறுவகைகள் மற்றும், (நெற்பயிரில்ஏற்படும் நோய்கள்

அம்மா சேவை மையங்கள்

மாநிலத்தில் வட்டார அளவில் 383 முதன்மை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 497 துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் ஆக மொத்தம் 880 அம்மா சேவை மையங்களை அமைத்து வேளாண் விரிவாக்க அமைப்பினை முறைப்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. அம்மா சேவை மையங்கள் விவசாயிகளுக்குத் தேவையானதரமான இடுபொருட்களை வழங்குகின்றன. வேளாண் சார்ந்த அனைத்துத் தொழில்நுட்பங்களையும், வேளாண் இயந்திரங்களையும், பயிர் பாதுகாப்புக்கருவிகளையும், ஒரே இடத்தில் வழங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அம்மா சேவை மையங்கள், விவசாயிகளையும் விவசாய உற்பத்தி நிறுவனங்களையும் சந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தரும் மையங்களாகவும் செயல்படுகின்றன. தற்போதுள்ள 880 அம்மா சேவை மையங்களுள் 160 முதன்மை வேளாண்மை விரிவாக்க மையங்கள் (150 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 10 உழவர் மையங்கள்) வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களுடன், கூட்ட அரங்கு, கணினி மையம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் சென்றடையும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறாக வேளாண்மை விரிவாக்க நடவடிக்கைகளில் உருவாக்கப்படும் வசதிகள் வேளாண் சேவைகளை எளிதாக்குவதோடு விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்துகிறது.

அம்மா சேவை மையங்கள்

மாவட்டம்

 

முதன்மை மையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்

துணைமையம் துணை வேளாண்மை விரிவாக்க மையம்

மொத்தம்

காஞ்சிபுரம்

13

16

29

திருவள்ளூர்

14

21

35

கடலூர்

13

17

30

விழுப்புரம்

21

27

48

வேலூர்

20

23

43

திருவண்ணாமலை

17

24

41

சேலம்

20

11

31

நாமக்கல்

15

17

32

தருமபுரி

8

8

16

கிருஷ்ணகிரி

10

7

17

கோயம்புத்தூர்

12

14

26

திருப்பூர்

13

13

26

ஈரோடு

14

21

35

திருச்சிராப்பள்ளி

14

10

24

பெரம்பலூர்

4

3

7

அரியலூர்

6

3

9

கரூர்

8

4

12

புதுக்கோட்டை

13

20

33

தஞ்சாவூர்

14

47

61

நாகப்பட்டினம்

11

33

44

திருவாரூர்

10

32

42

மதுரை

13

19

32

தேனி

8

13

21

திண்டுக்கல்

13

15

28

இராமநாதபுரம்

11

6

17

சிவகங்கை

12

9

21

விருதுநகர்

11

5

16

திருநெல்வேலி

19

31

50

தூத்துக்குடி

12

16

28

கன்னியாகுமரி

10

11

21

நீலகிரி

4

1

5

மொத்தம்

383

497

880

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்- II

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் – II உலக வங்கி நிதியுதவியுடன் ஏழு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி, 66 துணையாற்றுப் படுகைகளில் நீர்பாசன மேலாண்மை, காலநிலை மாற்றத்திற்கு உகந்த பாசனப்பயிர் மேலாண்மை மூலம் பயிர் உற்பத்தித்திறனைப் பெருக்குதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக 2017-18ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்திட வேளாண்மைத்துறைக்கு ரூ.84 கோடி நிதி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 18 துணையாற்று படுகைகள் தேர்வு செய்யப்பட்டு பின்வரும் திட்டக்கூறுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

பயிர் செயல் விளக்கங்கள்

முப்பயிர் தொடர்ச்சியில் பசுந்தாள் உரப்பயிர் - திருந்திய நெல் சாகுபடி நெல் தரிசில் பயறுவகை; சிறு தானியங்கள், பயறுவகைகள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களில் தொகுப்பு செயல்விளக்கத்திடல் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

பயிர் சார்ந்த இதர திட்டக்கூறுகள்

பண்ணைப் பள்ளிகள் வாயிலாக பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், சுற்றுப்புற சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை மாதிரி கிராமங்கள் வாயிலாக பண்ணை அளவில் உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்தல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மூலம் மண் வளத்தைப் மேம்படுத்தும் வகையில் சில்பாலின் கொண்டு மண்புழு உரத்தயாரிப்பு செயல்விளக்கங்கள்; துணையாற்றுப்படுகை விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் மூலம் பயறு வகைகள்; நிலக்கடலை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களில் விதை கிராமங்கள் அமைத்தல், அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகள் மற்றும் சிறந்த களப் பணியாளர்களுக்கான விருதுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண் கருவிகள் விநியோகம்

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்காக விசைக்களை எடுக்கும் கருவிகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாடு

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வாயிலாக இத்திட்டம் பற்றி விவசாயப் பெருமக்களிடம் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி மற்றும் சிறப்பு விருது

பயிர் விளைச்சல்போட்டி (Crop Yield Competion)

பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, அரசு பல்வேறு நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை பண்ணையளவில் விவசாயிகள் மேற்கொள்வதனையும் உறுதி செய்கிறது. சிறந்த வேளாண் சாகுபடி முறைகளை விவசாயிகள் முழு ஈடுபாட்டுடன் கடைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காக பயிர்விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் மக்காச்சோளம், சோளம் (இறவை), கம்பு (இறவை), நிலக்கடலை (இறவை), துவரை, உளுந்து (இறவை), பச்சைப்பயறு (இறவை), பருத்தி மற்றும் கரும்பு பயிர்களில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு 9 பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று மாவட்ட அளவில் நெல், நிலக்கடலை (இறவை), நிலக்கடலை (மானாவாரி), சோளம் (இறவை), கம்பு (இறவை), மக்காச்சோளம், உளுந்து (இறவை), பச்சைப்பயறு (இறவை), துவரை, கரும்பு மற்றும் பருத்தி பயிர்களில் பயிர்விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு 88 பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற ரூ.100/-ம் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ரூ.50/-ம் பதிவுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கு பெற்று அதிக பயிர் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு கீழ்க்கண்டவாறு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மாநில மற்றும் மாவட்ட அளவில் ரொக்கப்பரிசு (ரூபாயில்)

பயிர்கள்

மாநில அளவில்

பயிர்கள்

மாவட்ட அளவில்

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

முதல் பரிசு

இரண்டாம் பரிசு

நிலக்கடலை, கரும்பு மற்றும் பருத்தி

25,000

15,000

 

நெல், நிலக்கடலை, கரும்பு மற்றும் பருத்தி

15,000

10,000

சோளம், கம்பு, மக்காச் சோளம், உளுந்து,பச்சைப்பயறு, துவரை.

15,000

10,000

 

சோளம், கம்பு, மக்காச் சோளம், உளுந்து,பச்சைப்பயறு, துவரை.

 

10,000

5,000

சிறப்பு விருது - திருந்திய நெல் சாகுபடி (SRI- SpecialAward)

நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தித்திறன் பெறும் ஒரு விவசாயிக்கு குடியரசு தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறப்பு பரிசுத் தொகை ரூ.5 இலட்சம் மற்றும் ரூ.3,500/- மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படுகிறது.

2016-17ஆம் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினைக் கடைபிடித்து எக்டருக்கு 18,184 கிலோ மகசூல் பெற்ற தருமபுரி மாவட்டம், விருப்பாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.ரா.முனுசாமி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.1.2018 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வேளாண் தகவல் தொழில்நுட்ப சேவைகள் (Agricultural Services through Information Technology)

அகில இந்திய அளவில் விவசாயிகளுக்கான வேளாண் தகவல்களை உடனுக்குடன் வழங்கி மின்னணு வேளாண்மையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையினால் 2010-11ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்குவதற்காக www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் முதன் முறையாக 70 இலட்சம் விவசாயிகளின் அடிப்படை தகவல்கள், பண்ணை மற்றும் மண் வளம் சார்ந்த தகவல்கள் வலைத் தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இத்துறையினால் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மின் ஆளுமை திட்டம் – வேளாண்மை (National e governance Plan- Agriculture)

தகவல் தொழில்நுட்பம் மூலம் வேளாண் தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசு பொது சேவை மூலம் உர விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கும் மென்பொருள், முக்கிய நீர் தேக்கங்களில் உள்ள நீர் நிலை, தினசரி மழை அளவு மற்றும் அரசினால் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான பயிர் காப்பீட்டுத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் மற்றும் கூட்டுப் பண்ணையம் ஆகிய திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க வேளாண்மை தகவல் முறை" எனும் ஆன்ட்ராய்டு கைபேசி செயலி ஆகியவற்றை வேளாண்மைத்துறை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு உகந்த "உழவன்" என்ற கைபேசி செயலி (Farmer Friendly - UZHAVAN" Android Mobile Application)

விவசாயிகளுக்கென்று பிரத்தியேகமாக, முக்கிய விவசாய சேவைகளை உள்ளடக்கிய "உழவன்" என்ற கைப்பேசி செயலி இருமொழிகளில் (ஆங்கிலம் மற்றும் தமிழில்) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.04.2018 அன்று துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்கைப்பேசி செயலியின் வழியாக, விவசாயிகள் அரசின் அனைத்து வேளாண்மைத் திட்ட இனங்களுக்கான மானியத் திட்ட விபரங்கள், தங்களுக்கு தேவையான இடுபொருள்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள பயனாளி முன் பதிவு , பயிர் காப்பீடு குறித்த அனைத்து விபரங்கள், அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு விண்ணப்பத்தின் நிலை மற்றும் இழப்பீடு பெறும் வரை அதன் நிலை அறிந்து கொள்ளும் வசதி, அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உரம், விதை இருப்பு விபரங்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய விபரங்கள், தமிழ்நாட்டிலுள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலவும் விளை பொருட்களின் சந்தை விலை நிலவரங்கள், மாவட்ட வாரியான வானிலை விபரங்கள் மற்றும் சாகுபடி அறிவுரைகள், வேளாண் விரிவாக்க அலுவலர்களின் கிராம் வருகை உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் பெற இயலும்.

மேலும், விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த தகவல்கள் உடனுக்குடன் சென்றடைவதால் வேளாண் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த இயலும். இதன் மூலம் வேளாண்பணிகளில் ஏற்படும் வானிலை, இடுபொருள், இயந்திர தேவைகள், பருவகால மாறுதல்கள், இயற்கை சீற்றங்கள், சந்தை விலை நிலவரங்கள், மானியம் பெறுதல் மற்றும் வேளாண் காப்பீடு போன்றவற்றில் ஏற்படும் இடர்பாடுகள் தவிர்க்கப்படும். இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் உழவன் செயலியினை தரவிறக்கம் செய்துள்ளனர், மேலும் 10,000 விவசாயிகளுக்கும் மேல் அரசின் நலத்திட்டங்களுக்காக முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்துள்ளனர்.

வேளாண்மைத்துறையில் மனித வளம் (Human Resource)

வேளாண்மைத்துறை மொத்தம் 9,834 பணியாளர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இதில் 4,835 தொழில்நுட்ப அலுவலர்கள் 4,999 அமைச்சு மற்றும் இதர பணியாளர்களும் அடங்குவர்.

தொழில்நுட்ப நிர்வாகம் (வேளாண்மைத்துறை மட்டும்)

பதவி

ஓப்பளிக்கப்பட்ட பணியிடங்கள்

வேளாண்மை கூடுதல் இயக்குநர்

5

வேளாண்மை இணை இயக்குநர்

31

வேளாண்மை துணை இயக்குநர்

125

வேளாண்மை உதவி இயக்குநர்

420

வேளாண்மை அலுவலர்

1,088

தொழில்நுட்ப அலுவலர் மொத்தம்

2,006

உதவி விதை அலுவலர்

509

உதவி வேளாண்மை அலுவலர்

2,320

களப்பணியாளர்கள் மொத்தம்

2,829

மொத்தம் தொழில்நுட்ப பணியாளர்கள்

4,835

தொழில்நுட்பமல்லாத இதர பணியாளர்கள் நிர்வாகம் (வேளாண்மைத்துறைமட்டும்)

பதவி

ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள்

துணை இயக்குநர் (நிர்வாகம்)

2

ஆட்சி அலுவலர்

33

கண்காணிப்பாளர்

183

உதவியாளர்

644

இளநிலை உதவியாளர்

387

தட்டச்சர்

360

கிடங்கு மேலாளர் (தரம் 1)

141

கிடங்கு மேலாளர் (தரம் 2)

249

கிடங்கு மேலாளர் (தரம் 3)

567

சுருக்குத் தட்டச்சர் (தரம் 1)

1

சுருக்குத் தட்டச்சர் (தரம் 2)

37

சுருக்குத் தட்டச்சர் (தரம் 3)

89

ஓட்டுநர்

289

ஆய்வக உதவியாளர்

135

பதிவறை எழுத்தர்

159

அலுவலக உதவியாளர்

588

காவலாள்

1,133

தொலைபேசி இயக்குபவர்

2

மொத்தம் தொழில்நுட்பமல்லாத இதர பணியாளர்கள்

4,999

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.02173913043
நாயகன் Aug 04, 2020 06:37 PM

மக்களுக்கு இவ்வாறு இருப்பது தெரிவது இல்லை இதனால் படிப்பறிவு+ஏழை மக்கள் இதன் பயன்பாடுகள் பெறுவத்தில்லை இப்படிக்கு உங்கள் விவசாயி 73*****00

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top