பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட “தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005” 15.6.2005 முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில் அன்றாடம் நடைபெறும் பணிகள் வெளிப்படையாகவும், பொறுப்புணர்வோடும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதே மேற்படி சட்டத்தின் முக்கிய நோக்கமாகும், மேலும் இச்செயல்பாடுகளை பற்றிய விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு இச்சட்டம் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்களின் தகவலுக்காகவும், அரசு ஈட்டுறுதி திட்டத்தின் நிர்வாக அமைப்பு, கடமைகள், செயல்பாடுகள் மற்றும் இத்துறையில் பேணப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்தகவல் வெளியிடப்படுகிறது,

பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் இயக்ககத்தில் இவ்வலுவலகத்தின் அனைத்து தகவல் சம்பந்தமான பொதுதகவல் அலுவலராக இயக்குநரின் நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும், மேல்முறையீட்டு அலுவலராக இயக்குநர் (தொஅஈ) நியமிக்கப்பட்டுள்ளார், இவ்வலுவலகத்தின் தொலைபேசி எண், 044 2432 7953, 044 2432 7954. இது தவிர, கீழ்க்காணும் அலுவலர்கள் அவர்களது அலுவலக எல்லைக்குட்பட்ட மண்டலங்கள்/தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளின் பொது தகவல் அலுவலராகவும் மேல்முறையீட்டு அலுவலராகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.

பொதுதகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள்

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகங்கள்

வஎண்.

மண்டலம்

பொ .த.அ.

மே.மு.அ.

எல்லை

1

சென்னை

சென்னை மண்டல மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் மூத்த குடிநிலை மருத்துவ அலுவலர்

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், சென்னை 78

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள்

2

மதுரை

மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தின் மூத்த குடிநிலை மருத்துவ அலுவலர் (சீனியர் சிவில் சர்ஜன்)

மண்டல நிர்வாக மருத்துவ, அலுவலர் மதுரை 20

மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை விருதுநகர் இராமநாதபுரம் துாத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள்.

3

கோயம்புத்துார்

கோவை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகத்தின் மூத்த குடிநிலை மருத்துவர் (சீனியர் சிவில் சர்ஜன்)

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், கோயம்புத்துார்

கோயம்புத்துார் | நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம் பகுதி,

4

சேலம்

சேலம் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகத்தின் மூத்த குடிநிலை மருத்துவர்(சீனியர் சிவில் சர்ஜன்)

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர், சேலம்

சேலம் | நாமக்கல் கிருஷ்ணகிரி திருச்சி பெரம்பலுார் கருர் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் கடலுார் விழுப்புரம் ஈரோடு புதுக்கோட்டை தர்மபுரி திருவண்ணாமலை

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள்

வ.எண்

தொ.அ.ஈ. மருத்துவமனை

பொ .த.அ.

மே.மு.அ.

எல்லை

1

அயனாவரம் சென்னை 23

நிலைய மருத்துவர்

தொ .அ.ஈ. மருத்துவமனை அயனாவரம்

மருத்துவமனை கண்காணிப்பாளர் அயனாவரம்

தொ .அ.ஈ. மருத்துவமனை அயனாவரம்

2

கோயம்புத்துார்

நிலைய மருத்துவர்

தொ.அ.ஈ. மருத்துவமனை கோயம்புத்துார்

மருத்துவமனை கண்காணிப்பாளர் கோயம்புத்துார்

தொ.அ.ஈ. மருத்துவமனை கோயம்புத்துார்

3

மதுரை

நிலைய மருத்துவர்

தொ.அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் மதுரை

தொ.அ.ஈ. மருத்துவமனை மதுரை

4

சிவகாசி

நிலைய மருத்துவர்

தொ.அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகாசி

தொ.அ.ஈ. மருத்துவமனை சிவகாசி

5

வேலுார்

நிலைய மருத்துவர்

தொ.அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் வேலுார்

தொ.அ.ஈ. மருத்துவமனை வேலுார்

6

சேலம்

நிலைய மருத்துவர்

தொ..அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் சேலம்

தொ.அ.ஈ. மருத்துவமனை சேலம்

7

ஒசூர்

நிலைய மருத்துவர்

தொ..அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஒசூர்

தொ.அ.ஈ. மருத்துவமனை ஒசூர்

8

திருச்சி

நிலைய மருத்துவர்

தொ..அ.ஈ. மருத்துவமனை மதுரை

மருத்துவமனை கண்காணிப்பாளர் திருச்சி

தொ.அ.ஈ. மருத்துவமனை திருச்சி

விண்ணப்பம் அளிக்கும் முறையும் கட்டணமும்

(அ) தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6 உட்பிரிவு (1) ன் கீழ் தகவல் பெற எழுத்து மூலமாகவோ, எலக்ட்ரானிக் முறையிலோ, நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பொது தகவல் அலுவலருக்கு ரூ,10 க்கான விண்ணப்பக் கட்டணம் பணமாகவோ/வங்கி வரைவோலையாகவோ/ நிதிமன்ற கட்டண வில்லையாகவோ செலுத்தி விண்ணப்பிக்கலாம். கருவூலம் அல்லது சம்பள கணக்கு அலுவலகத்தின் செலுத்துச்சீட்டு (செலான்) மூலம் விண்ணப்பக் கட்டணம் கட்டியிருந்தால் அதன் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

(ஆ) தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 7, உட்பிரிவு (1) ன் கீழ் தகவல் பெற விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்துடன் கீழ்க்கண்ட கட்டண தொகையினையும் செலுத்த வேண்டும்,

1, A4 அல்லது A3 அளவு காகிதத்தில் தகவல்கள் உருவாக்கம் அல்லது நகல் பெற்றிட ரு.2/-

2, பெரிய அளவு காகிதத்தின் நகல் எடுக்க ஆகும் தொகை

3, மாதிரி / மாதிரி வடிவம் பெற ஆகும் செலவுத்தொகை

4, பதிவுருக்களை ஆய்வு செய்ய முதல் ஒரு மணி நேரத்திற்கு இலவசமாகவும் அடுத்த ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரூ. 5/-

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிட கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையினைக் பெற்றிட கிராமப்பஞ்சாயத்து அல்லது நகர நிர்வாகத்தினரால் ஒப்பளிப்பு செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் தகுதியுடையோர் ஆவர். இப்பட்டியலின் நகலில் உரிய சான்றொப்பம் பெற்று இச்சலுகையை துய்க்கலாம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 4(0) (b) ன் படி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் நிர்வாக அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் கடமைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்ட நிர்வாக அமைப்பு

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட காப்பீட்டாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி கிடைத்திட செய்யும் பொறுப்பு - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (தொ.அ.ஈ.) அவர்களை சார்ந்ததாகும்.

 1. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர்
 2. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர்
 3. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (தொ.அ.ஈ.)
 4. மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (4)
 5. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கண்காணிப்பாளர் (8)
 6. தொ.அ.ஈ. மருந்தக மருத்துவர்கள்
 7. நிலைய மருத்துவர்
 8. இதரப்பணியாளர்கள்
 9. மருத்துவ நிபுணர்கள்
 10. நிர்வாக அலுவலர் மற்றும் இதரப்பணியாளர்கள்

செயல்பாடுகள்

காப்பிட்டாளர் மற்றும் அவர் தம் குடும்பத்திருக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் தரமான சிகிச்சையும் மருத்து மாத்திரைகளும் வழங்கும் பொறுப்பு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் மருத்துவப்பிரிவை சார்ந்ததாகும். அத்துடன் விபத்து மற்றும் நோயினால் காப்பீட்டாளர்கள் வேலைக்கு செல்ல இயலாத நிலையில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட மருத்துவச் சான்று அளிப்பதும் இத்துறையின் பொறுப்பாகும்.

தொ.அ.ஈ. திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிகள்

அ. மின்சக்தியை பயன்படுத்தி 10 மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலைகளும் மின்சக்தியை பயன்படுத்தாமல் 20 மற்றும் அதற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களும் தொழிற்சாலைகளும், இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

ஆ. திட்டத்தின் பயனைப் பெற்றிட தொழிலாளியின் பங்களிப்பாக அன்னாரின் மாத ஊதியத்தில் 1.75% விழுக்காடும் நிர்வாகத்தின் பங்களிப்பாக மேற்காணும் தொழிலாளியின் மாத ஊதியத்தில் 4.75% விழுக்காடும் பிரிதி மாதம் செலுத்த வேண்டும். இருப்பினும் தினசரி ஊதியம் ரு, 50/- க்கும் குறைவாக பெறும் தொழிலாளி பங்களிப்பு செலுத்த தேவையில்லை.

ஆனால் அத்தகைய தொழிலாளிக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய பங்களிப்பினை செலுத்தினால் போதும். பங்களிப்பாக செலுத்தும் தொகை மாறுபடினும், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச்சிகிச்சையில் எவ்வித வேறுபாடுமின்றி சமமாக பாவிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயன்கள்

இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டாளர்களுக்கு 5 வகை பயன்கள் வழங்கப்படுகின்றன. காப்பீட்டுத் தொழிலாளர்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் காத்திட 5 வகைப் பயனை வழங்கி அவர் தம் வாழ்வு ஒளிவீசி பிரகாசித்திட செய்வதால் தான் இத்திட்டத்தின் சின்னமாக “ஐந்துமுக விளக்கு' (Panch Deep) தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக அலுவலகங்களுக்கு (Panch Deep Bawan) பஞ்ச தீப் பவன் என பெயரிடப்பட்டுள்ளது.

5 வகை பயன்களாவன:-

1. மருத்துவ பயன் (Medical Benefit) -- மருத்துவ சிகிச்சை, மருந்து, மாத்திரை முதலியன

2. நோயக்காலப் பயன் (Sickness Benefit) -- நோய் மற்றும் விபத்தினால் பணிக்கு செல்ல இயலாத போது வருவாய் இழப்பினை ஈடு செய்ய பணமாக வழங்கப்படுகிறது,

3. பேறுகாலப் பயன் (Maternity Benefit) -- பணமாக வழங்கப்படுகிது,

4. இயலாமைக்கான பயன் (Disablement Benefit) -- பணமாக வழங்கப்படுகிறது,

5. ஈமச்சடங்கிற்கான பண உதவி மற்றும் இறந்த காப்பீட்டாளரின் குடும்பத்திற்கான ஓய்வூதியப் பயன் (Funeral benefit & pension for the family members of deceased IP) -- பணமாக வழங்கப்படுகிறது

5 வகை பயன்களில் மருத்துவப் பயன் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொ,அ,ஈ) இயக்ககத்தின் மூலமாகவும், மற்ற 4 பணப்பயன்களும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் மண்டல அலுவலகத்தாலும் வழங்கப்படுகிறது,

மருத்துவ பயன்

மருத்துவ பயன் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் மூலம் வழங்கப்படுகிறது, தொ.அ.ஈ. மருந்தகங்கள் மூலமாக புற நோயாளிச் சிகிச்சையும் தொ.அ.ஈ. மருத்துவமனைகள் மூலமாக உள் நோயாளி சிகிச்சையும் வழங்கப்படுகிறது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை அருகில் இல்லாத பகுதிகளில் அவசரச் சிகிச்சை தேவைப்படின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு அதற்கான செலவினை திரும்பப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி அதிநவீன சிகிச்கை வசதி தேவைப்படும் நிகழ்வுகளில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்கை, கான்சர் மற்றும் எலும்பு மச்சை மாற்று சிகிச்சை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது, புதுடெல்லி தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் மற்றும் தமிழக அரசால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளின் படி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது,

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 4 (1) (111)ன் கீழ் அலுவலர்களின் பதவி மற்றும் அலுவலக அஞ்சல் முகவரி

வ, எண்

அலுவலரின் பதவி

அலுவலக அஞ்சல் முகவரி

1

இயக்குநர், மத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்(தொ.அ.ஈ.) (மருத்துவர்)

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

(தொ.அ.ஈ.) இயக்கம், டி, எம்,எஸ், வளாகம்,

7 வது மாடி, சென்னை 6,

2

இணை இயக்குநர் (மருத்துவர்)

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

(தொ.அ.ஈ.) இயக்கம் டி, எம்,எஸ், வளாகம்

7 வது மாடி, சென்னை 6,

3

இயக்குநரின் நேர்முக உதவியாளர் (மருத்துவர்)

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

(தொ.அ.ஈ.) இயக்கம் டி, எம்,எஸ், வளாகம்

7 வது மாடி, சென்னை 6,

4

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ.அ.ஈ.) சென்னை

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகர் அலுவலகம் தொ, ஆ, ஈ, மருத்துவமனை வளாகம்,

கே, கே, நகர், சென்னை 78

5

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ.அ.ஈ.) மதுரை

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம், வளாகம், கே, கே,நகர், மதுரை 20,

6

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (தொ,அ,ஈ) கோயம்புத்தூர்,

மண்டல நிர்வாக மலுத்துவ அலுவலர் அலுவலகம் தொ.அ.ஈ. மருத்துவமனை வளாகம்

கோயம்புத்துார் 15

7

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம் (தொ, அ, ஈ.) சேலம்,

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அலுவலகம்,தொ.அ.ஈ. மருத்துவமனை வளாகம், சேலம்,

8

கண்காணிப்பாளர், அயனாவரம் சென்னை

தொ.அ.ஈ. மருத்துவமனை எம்.டி, எச், ரோடு அயனாவரம், சென்னை 23

9

கண்காணிப்பாளர், கோயம்புத்துார்

தொ.அ.ஈ. மருத்துவமனை, வரதராஜபுரம், கோயம்புத்துர் 45,

10

கண்காணிப்பாளர், மதுரை

தொ.அ.ஈ. மருத்துவமனை, தத்தநேரி, மதுரை 15

11

கண்காணிப்பாளர், சிவகாசி

தொ.அ.ஈ. மருத்துவமனை, சிவகாசி

12

கண்காணிப்பாளர், சேலம்

தொ.அ.ஈ. மருத்துவமனை, சேலம்

13

கண்காணிப்பாளர், வேலுார்

தொ.அ.ஈ. மருத்துவமனை அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனை எதிரில் வேலுார்

14

கண்காணிப்பாளர், ஒசூர்

தொ.அ.ஈ. மருத்துவமனை சிட்கோ வளாகம் ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

15

கண்காணிப்பாளர், திருச்சி

அரசு மருத்துவக்கல்லுாரி அருகில் பெரிய மிளகுபாறை, திருச்சி,

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தில் பணிபுரியம் அலுவலர்களின் சம்பள விபரம்

வ,எண்

அலுவலர் பதவி

காலமுறை ஊதியம் ரூ,

குறிப்பு

1

இயக்குநர்

15000 - 400-18600

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடிப்படை ஊதியத்துடன்

படி பஞ்சப்படி, வீட்டு

வாடகைப்படி நகர ஈட்டுப்படி ஆகியன வழங்கப்படும்

2

இணை இயக்குநர்

14300-400-18300

3

நேர்முக உதவியாளர்

12000-375-16500

4

மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்

12000-375-16500

5

தொ,அ, ஈ, மருத்துவமனை கண்காணிப்பாளர்

12000-375-16500

6

முத்த குடிநிலை மருத்துவர் நிபுணர்

10000-325-15200

7

குடிநிலை மருத்துவர்

10000-325-15200

8

ஊதவி மருத்துவர்

8000-275-13500

9

முதன்மை கணக்கு அலுவலர்

10000-325-15200

10

நிர்வாக அலுவலர்

8000-275-13500

11

இளநிலை நிர்வாக அலுவலகர்

6500-200-10500

12

மருத்துவ கிடங்கு அலுவலர்

5900-200-9900

13

முதன்மை மருந்தாளுநர்

5300-150-8300

14

மருந்தாளுநர்

4500-125-7000

15

செவிலிர் கண்காணிப்பாளர் நிலை 1

8000-275-13500

16

செவிலிர் கண்காணிப்பாளர் நிலை 2

6500-175-10500

17

செவிலிர் கண்காணிப்பாளர் நிலை 3

5500-175-9000

18

க்ஷசவிலியர்

5000-150-8000

19

முடநீக்கு சிகிச்சையாளர் நிலை 1

5500-175-9000

20

முடநீக்கு சிகிச்சையாளர் நிலை 2

5000 -150-8000

21

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை 1

4500-125-7000

22

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை 2

4000-100-6000

23

ஊதவி செவிலியர்

3200-85-4900

24

செவிலிய உதவியாளர்

2550-5-2660-60-3200

25

கடைநிலை ஊழியர்

2550-5-2660-60-3200

26

அலுவலக கண்காணிப்பாளர்

5700-175-9200

27

புள்ளியியல் தொகுப்பாளர்

(சிறப்பு நிலை

8000-275-13500

28

உதவியாளர்

4000-100-6000

29

இளநிலை உதவியாளர்

3200-85-4900

30

சுருக்கெழத்து தட்டச்சர்

4000-100-6000

31

தட்டச்சர்

3200-85-4900

32

முரிவறை எழுத்தர்

2610-60-3150-65-3540

33

ஊர்தி ஓட்டுநர்

3200-85-4900

ஆதாரம் : தொழிலாளர் அரசு ஈட்டுறுதி இயக்கம்

Filed under:
2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top