பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / இதர பொதுவான திட்டங்கள் / பதிவு தபால்கள், விரைவு தபால்களை வீடுகளில் இருந்தே அனுப்ப புதிய திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பதிவு தபால்கள், விரைவு தபால்களை வீடுகளில் இருந்தே அனுப்ப புதிய திட்டம்

பதிவு தபால்கள், விரைவு தபால்களை வீடுகளில் இருந்தே அனுப்பும் புதிய திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

பதிவு தபால்கள், விரைவு தபால்களை வீடுகளில் இருந்தே அனுப்ப புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தபால் துறை புதிய சேவை

  • பொதுமக்கள் குறிப்பிட்ட முகவரிக்கு பதிவு தபால் மற்றும் பார்சல்கள் போன்றவற்றை அனுப்புவதாக இருந்தால் அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் அனுப்ப முடியும். சில நேரங்களில் ஒரே ஒரு பதிவு தபால் அனுப்புவதாக இருந்தாலும் மணிக்கணக்கில் தபால் அலுவலகங்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.
  • வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறானாளிகள் போன்றவர்களுக்கு இதுபோன்று காத்துக்கிடப்பதால் சிரமம் ஏற்படுகிறது. இதன் மூலம் வீடுகளுக்கு வரும் தபால்காரர்களிடம் பொதுமக்கள் விரைவு தபால்கள், பதிவு தபால்களை அளிக்கலாம். அவர் அந்த தபால்களை தபால் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்து முறையாக அனுப்ப வேண்டிய முகவரிக்கு அனுப்புவார்.
  • இதற்கான ரசீதை மறுநாள் தபால் பட்டுவாடா செய்ய செல்லும் போது பொதுமக்களிடம் அளிப்பார். இதற்கு தேவையான தபால்களையும் பொதுமக்கள் தபால்காரரிடம் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நன்மைகள்

  1. சென்னை வட்டத்திற்கு உட்பட்ட புதுச்சேரி மற்றும் வடதமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களுடைய விரைவு தபால் மற்றும் பதிவு தபால்களை தபால் அலுவலகத்துக்கு வந்து தான் அனுப்ப வேண்டும்.
  2. பொதுமக்கள் பயனளிக்கும் வகையில் வீடுகளில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் பதிவு மற்றும் விரைவு தபால்களை அளித்தால், அவரே தபால் அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அதற்கான ரசீதை மறுநாள் அளிப்பார்கள். இதற்கு தேவையான தபால்தலைகளை தபால்காரரிடமே பெற்றுக்கொள்ளலாம்.

ஆதாரம் : இந்திய தபால் துறை

2.84931506849
மணி. வீ Jun 08, 2018 10:23 AM

மேற்கண்ட விஷயம் நல்ல விஷயம்தான். எங்கள் தெருவிற்கு போஸ்ட்மேன் எப்போது வருவார் என்று நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியிருக்கும். ஆதலால் எங்கள் வீட்டில் ஒரு பதிவுத்தபால் இருக்கிறது என்பதை போஸ்டாபீசுக்கு தெரிவிக்கும் வசதியிருந்தால் தபால்காரர் எங்கள் வீட்டுக்கு வந்து கேட்பதற்கும் வசதியாக இருக்குமே

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top