பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதிய உணவுத்திட்டம் - ஒரு சமூகமாயமாக்கும் செயல்முறை

மதிய உணவுத் திட்டத்தின் தொடக்கம் மற்றும் அதன் தாக்கம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மதிய உணவுத்திட்டம் என்ற கருத்து இந்தியாவிற்கு புதிதல்ல, ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1925-ல், சுதந்திரத்திற்கு முன்பே சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டது. இதே போன்று மற்ற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.

இந்தியாவிலேயே, தமிழகம் தான் முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை ஆரம்பப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் குஜராத்தில் 1984 -ல் அறிமுகப்படுத்தப் பட்டது. நாளடைவில் இத்திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப் பட்டது. பின்னர், இத்திட்டம் தேசிய திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக, ஆகஸ்டு 15, 1995-ல் மதிய உணவு வழங்கும் பொருட்டு, இந்திய அரசு, ஆரம்ப கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை தொடங்கி வைத்தது. 2002-ல் உச்சநீதி மன்றம், மதிய உணவுகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளுக்கு அரசே வழங்க வழிவகுத்தது. இத் திட்டம் செப்டம்பர் 2004, 2006-ல் திருத்தி அமைக்கப்பட்டது.

மதிய உணவுத் திட்டத்தின் நோக்கங்கள்

உள்ளூர் குழுக்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வி உத்திரவாத திட்டங்கள், சர்வ சிக்ஷ அபியான் ஆதரவின் கீழ் உள்ள மதராச குழுக்கள் இவை அனைத்தும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துகின்றன.

ஏழை எளிய குழந்தைகளும், ஒதுக்கப்பட்ட குழந்தைகளும், பள்ளிக்கு அனுதினம் செல்ல அவர்களின் வகுப்பறை செயல்பாட்டில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துபடுகின்றன.

கோடை விடுமுறையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்படுகின்றன.

மதிய உணவு திட்டம், மாநில அரசின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்தியாவில், தமிழகம் மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தியதில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த, திரு. காமராஜர், அவர்கள் சென்னையில் இத்திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். பின்னர், இத்திட்டம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஊட்டசத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட 68 லட்சம் குழந்தைகளுக்காக 1982, ஜீலை 1 - ல், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர், திரு. M.G. ராமச்சந்திரன் அவர்கள் மேம்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றினார்.

மதிய உணவு திட்டத்தின் நன்மைகள்

  • பசி மற்றும் ஊட்டசத்து குறைவின் உடனடி தாக்கத்தால், மதிய உணவு திட்டம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது.
  • பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சேர்க்கையை மதிய உணவு திட்டம் அதிகரிக்கச் செய்கிறது, என ஆய்வுகள் கூறுகின்றன.
  • வகுப்பறை பசியை, மதிய உணவு வழங்கும் திட்டம் முடிவுக்கு கொண்டு வந்தது.
  • சமூகமயமாக்கல், சாதி, ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கம் இவற்றில் மதிய உணவு திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பொதுவாக, இத்திட்டத்தில் உணவு வகைகள், பகிரப்படுவதால் சாதிய பாராபட்சமும், வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் குறிப்பாக அகற்றப் பட்டது. பள்ளியிலிருந்து குழந்தைகளின் இடை நிற்றல் விகிதம் சரிந்தது.

பள்ளிக் கல்வியில் MDMS(Midday Meal Scheme)ன் தாக்கங்கள்

தமிழகம், மதிய உணவுதிட்டத்தை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டித்து, வழங்கியது. அதற்கு முன்பாக, இத்திட்டம் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் தனது பங்களிப்பை மதிய உணவுதிட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்தது. தமிழகம் மதிய உணவுத்திட்ட அமைப்பாளர்களுக்கு ஊதியமாக ரூ7000, சமையலாளரருக்கும், உதவியாளருக்கும் ரூ5000 வழங்குகிறது. இந்தியாவில் தமிழகம் மட்டும்தான் NMO (Non Meal Organisers) மதிய உணவு அமைப்பாளர்களை பணியமர்த்தியுள்ளது. தமிழக மக்கள் தற்போதைய மதிய உணவு திட்டத்தின் உணவு பட்டியலை விரிவாக்கம் செய்ய கோருகின்றனர், ''முட்டை, உருளை கிழங்கு” அல்லாது கம்பு போன்ற தானிய வகைகளையும், பயிர்வகைகளையும் இத்திட்டத்தில் சேர்க்க கோருகின்றனர்.

மதிய உணவு திட்டம் (MDMS) ஒரு சமூகமயமாக்கல் செயல்முறை

பள்ளிகளில் மதிய உணவை வழங்குவதற்காக, தமிழகத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், மதிய உணவு திட்டத்தை மேற்பார்வையிட பஞ்சாயத்து அளவிலான லஞ்ச ஒழிப்பு குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள் வாரத்திற்கு மூன்று முறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சோதனை செய்து வருகின்றது. உள்ளூர் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்தின் (MDMS) தாக்கம்

மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில், உண்மையில், தமிழகம் மற்ற மாநிலங்களின் எளிய செயல்பாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது. மேலும் தமிழகம், சிறப்பான சமையலறை உள்கட்டமைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாது, 92 சதவீதத்திற்கும் மேலாக, சேர்க்கை உள்ள பள்ளிகளுக்கு சமையல் எரிவாயு வசதியை வழங்கியுள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும், BDO அலுவலகங்களிலும், மாவட்ட மாநில அலுவலகங்களிலும், புகார் பெட்டிகளை பொருத்தியுள்ளது. மதிய உணவு திட்டத்தின் கீழ் உயர்நிலைப் பள்ளிகளையும் தமிழ்நாடு அரசு சேர்த்துள்ளது. ஆரம்ப, இடைநிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவுதிட்டத்தின் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், மதிய உணவு திட்டத்திற்கு தமிழகம் கூடுதல் நிதி வழங்குகிறது. இத்திட்டத்தில் தமிழகம் மாணவர்களின் சேர்க்கையை 80 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்காக, மாநில நிதிக் கருவூலம், ஏறக்குறைய ஆண்டிற்கு 1,500 கோடி ரூபாயை உயர்த்தியுள்ளது.

முடிவுரை

இந்திய குழந்தைகளின் நலன்களில், மதிய உணவுத்திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது. எனினும், இந்த மதிய உணவுத்திட்டம் முழுஆற்றலோடு செயல்படவும், பூர்த்தி செய்யப்பட வேண்டிய உடனடி தேவைகளை நிவர்த்தி செய்யவும் மேம்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

Filed under:
3.08571428571
மக்கள் தொண்டன் க.அசோக்குமார் Aug 16, 2019 12:16 PM

இத்திட்டத்தை தமிழகத்தில் முதலில் அறிமுகம் செய்த காமராஜர் அவர்கள் பெயரை தேசிய அளவில் சூட்ட மத்திய அரசு முன் வரவேண்டும். இவண் மக்கள் தொண்டன் க.அசோக்குமார்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top