பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அம்மா கைப்பேசி திட்டம்

அம்மா கைப்பேசி திட்டம் பற்றிய தகவல்.

மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கீடவும், அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக்குழுக்களை தமிழ்நாடு அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.

மேலும் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு துவங்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்துக் கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி, கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் வழங்கும் “அம்மா கைபேசி திட்டம்” என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

3.03703703704
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top