பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அம்மா சிறு வணிகக் கடன் திட்டம்

அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் தெருவோர சிறுவணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன்பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகைசெய்யும் ஒரு புதியதிட்டம் - இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் - கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் - இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் - குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும்

பயன்கள்

  1. மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 5000/- வரை வட்டியில்லாக் கடன் உதவி
  2. சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11சதவீத வட்டியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
  3. பூக்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்
  4. எளிய தவணையில் வாரம் ரூ.200/- வீதம் 25 வாரங்களில் திரும்ப செலுத்தும் வசதி.
  5. குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு, 4சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.94545454545
ராஜாமுகம்மது Aug 31, 2016 12:10 PM

நான் மதுரையில் வசிக்கிறன் இதன் ஆலோசனைகளை பெறவண்டும் ரெடிமேட் வியாபறத்திற்க்கு பணம் வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top