பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திரதனுஷ் திட்டம்

தமிழ்நாடு அரசால் வழங்குப்படும் திட்டமாகும் இந்திரதனுஷ் திட்டத்தை பற்றி இங்கு காணலாம்

இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.

இந்திரதனுஷ்

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களில் தடுப்பு மருந்துகள் வழங்காமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விடுபட்ட தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் இந்தத் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மருந்துகள் வழங்கப்படும்.

இயங்கும் நாள் நேரங்கள்

மாவட்டங்களில் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் 3,260 தடுப்பு மருந்து மையங்கள் நிறுவப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாள்களில் தொடர்ந்து மருந்து கொடுக்கப்படும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி, தடுப்பு மருந்து வழங்கப்படும்.

116 நடமாடும் குழுக்களின் மூலமாக தொலைதூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை

2.96808510638
karthi Sep 11, 2016 09:41 AM

சேவைத்துறை சிறப்பு வாய்ந்தது மிக்க நன்றி அரசுக்கு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top