பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்

இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

இலவச 108 ஆம்புலன்சு

தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நடத்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்ற  கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை பெறலாம்.

இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவை மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய்சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்த தானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றாநோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.

24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவை

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்து லட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள்பணி மேம்பாடு அடையும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, சென்னை

2.984375
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
மோகன் Nov 08, 2018 08:12 PM

அடையாறு புற்றுநோய் மையம் பற்றி தகவல் தேவை அட்மிட் ஆக சரியான விளக்கம் தேவை

சத்தியசீலன் Dec 02, 2017 04:15 PM

எனக்கு 4 வருடங்கள் மூச்சு வாங்கும் பிரச்சினை உள்ளது
மருத்துவ மனை சென்றால் மாத்திரை தருகிறார் கள்
உட்கார்ந்து இருக்கும் போது கூட மூச்சு வாங்குகிறது
இதற்கு தீர்வு காண முடியுமா ?

TASNA Apr 29, 2016 11:36 AM

மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறவும்

அழகர்பாண்டி Apr 29, 2016 03:43 AM

Under stomach pain, testes pain and so I need a solution this problem, what I do?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top