பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உழவர் பாதுகாப்புத்திட்டம்

உழவர் பாதுகாப்புத்திட்டம் பற்றின தகவல்களுக்கு இங்கே காணவும்

உழவர் பாதுகாப்புத்திட்டம்.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றுதான் உழவர் பாதுகாப்புத்திட்டம்.

தகுதிகள்

2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடைமையாகக் கொண்டு அந்த நிலத்தின் நேரடியாக பயிர்ச் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற் குற்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மூலம் பயனடையலாம்.

விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல் லது குத்தகைய அடிப் படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர் களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகி யோர் பயனடைவர். இதனடிப்படையில் இக்குடும்ப உறுப் பினர்கள் கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற் பதை ஊக்குவிக்கும் வகை யில் இவர்கள் வேறு எந்தக் கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றாலும் இத் திட்டத்தின்கீழ் கீழும் கல்வி உதவித் தொகை பெறுவ தற்கு வழிவகை உள்ளது.

உதவித் தொகைகள்

  1. தொழிற்பயிற்சி நிறு வனம் (அய்.டி.அய்)
  2. பல்தொழில் பயிற்சி நிறுவனம் (பாலிடெக்னிக்)
  3. மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ. 1250 முதல் ரூ. 1950 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
  4. இளங்கலை பட்டப்படிப்பு களுக்கு ரூ. 1750 முதல் ரூ.2500 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
  5. முதுகலை பட்டப்படிப்பு களுக்கு ரூ. 2250 முதல் ரூ.3750 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகை கொடுக்கப்படும்.
  6. சட்டம், பொறியியல், மருத்துவம் வேளாண்மை, கால்நடை, அறிவியல் போன்ற தொழிற்கல்வி படிப்பு களுக்கு இளங்கலையில் ரூ.2250 முதல் ரூ. 4750, முதுகலையில் ரூ. 4250 முதல் ரூ. 6750 வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

திருமண உதவிதிட்டம்

சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற தகுதி உள்ளவர்கள் அத்திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெறுவர். அவ்வாறு திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இத்திட் டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத் தின்கீழ் திருமண உதவித் தொகையாக ஆணுக்கு ரூ.8000மும், பெண்ணுக்கு ரூ.10,000மும் வழங்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம்

60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலா ளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 ஓய்வூதியமாக இத் திட்டத்தின் மூலம் பெறலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு சமுகநலத்துறை

2.97297297297
TASNA Dec 29, 2015 12:34 PM

மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அதிகாரியைத் தொடர்புக் கொண்டு பயன் பெறவும்.

கா.எழிலராஜா Dec 28, 2015 03:58 PM

எனக்கு திருமணம் நடைப்பெற்று உள்ளது நான்மாற்த்திறனாளி எனக்கு உதவித்தொகை கிடைக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top