பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடன் வழங்கும் திட்டம்

பல்வேறு தொழில்களுக்காக கடன் வழங்குதல் குறித்த திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வியாபாரம்/தொழில் செய்திட கூட்டுறவு வங்கிகள் மூலம் தனி நபர் கடன் வழங்குதல்

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் மற்றும் தொழில் செய்து தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் அச்சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) ஜனவரி 2000 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் எவற்றிற்கு வழங்கப்படுகின்றது ?

அ) சில்லரை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி
ஆ) கைவினை மற்றும் மரபு வழி (traditional) சார்ந்த தொழில்கள் அபிவிருத்தி
இ) தொழில் மற்றும் தொழில் சேவை (service) நிலையங்கள்
ஈ) விவசாயம் தொடர்பான சிறு தொழில்கள்
உ) போக்குவரத்து இத்திட்டத்தின் கீழ் புதிதாக வியாபாரம் மற்றும் சிறு தொழில் துவங்கிடவும், ஏற்கனவே செய்யும் வியாபாரம் மற்றும் சிறு தொழிலை அபிவிருத்தி செய்யவும் தனி நபர்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் (நடபைiடிடைவைல) என்ன ?

அ)இசுலாமியர்/கிறித்துவர்/சீக்கியா/பௌத்தர்/ பாரசீகியராக இருக்க வேண்டும்.
ஆ)கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் எனில் ஆண்டு வருமானம் ரூ.39,500/-க்கு மேற்படாமலும, நகர்புறத்தைச் சேர்ந்தவரெனில் ஆண்டு வருமானம் ரூ.54,500/-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையின் அளவு எவ்வளவு ?

கடன் கோரும் திட்டத்திற்கு ஏற்படும் செலவினம் ரூ.1 இலட்சம் வரை இருந்தால், தகுதியின் அடிப்படையில் டாம்கோ நிறுவனம் இக்கடனை வழங்கும்.
திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1 லட்சத்திற்கு மேல் ரூ.5 இலட்சம் வரை இருப்பின்,தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் (NMDFC) ஒப்புதல் பெற்று தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

போக்குவரத்து தொழில் தவிர பிறவற்றிற்கு வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் ஆண்டு வட்டி விகிதம் 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.
போக்குவரத்து வாகனங்கள் வாங்கிட ரூ.3.13 இலட்சம் வரை கடன் அளிக்கப்படுகின்றது. இக்கடன் தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 10 விழுக்காடு ஆகும்.

திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்கு தொகை எவ்வளவு விழுக்காடு ?

5 விழுக்காடு பயனாளியின் பங்கு ஆகும். மீதமுள்ள 95 விழுக்காடு கடனாக வழங்கப்படும்.

இக்கடன் தொகையைப் பெற விண்ணப்பிக்கும் முறை என்ன ?

கூட்டுறவு வங்கி கிளைகள், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (பி.ப) மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள டாம்கோ அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் (அல்லது) தட்டச்சு செய்து (அல்லது) ஒளிப்பட நகல் (photo copy) செய்தும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமோ (அ) கூட்டுறவு வங்கி கிளைகளிலோ (அ) மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரிடமோ சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்;துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை ?

அ) சாதிச்சான்றிதழ்/ ள்ளிச் சான்றிதழ்
ஆ) வருமானச் சான்றிதழ்
இ) குடும்ப அட்டை/இருப்பிட சான்று
ஈ) கடன் பெறுவதற்கான காரணம் (புதிய தொழில்/அபிவிருத்தி விபரம்)
உ) திட்ட (pசழதநஉவ) அறிக்கை (பெரிய திட்டமாக இருப்பின்)
ஊ) ஊர்தி ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கான கடன்களுக்கு)
எ) வங்கி கோரும் பிற ஆவணங்கள்

இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் முறை என்ன ?

டாம்கோ நிறுவனம், மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் தேர்வுக் குழுவின் ஒப்புதல் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கியின் பரிந்துரையைப் பெற்று கடன் தொகையை பயனாளிக்கு வங்கி மூலமாக வழங்கும்.

கடனுக்கு உத்திரவாதம் தரப்பட வேண்டுமா ?

கடனுக்கு வங்கியின் விதிமுறைக்குட்பட்டு கேட்கப்படும் உத்திரவாதம் அளிக்க வேண்டும். பெறப்பட்ட கடன் தொகையின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வங்கி அடமானமாக வைத்துக்கொள்ளும்.

கடன் தொகையை எவ்வளவு மாத தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும் ?

கடன் தொகையை 60 மாத கால தவணைகளில் கடன் பெற்ற வங்கிக்கு குறிப்பிடப்பட்ட தேதியில் திரும்பச் செலுத்த வேண்டும்.

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்படடு; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்க்கு வழங்கப்படுகின்றது ?

இத்திட்டத்தின் கீழ் இசுலாமியஇ கிறித்துவஇ சீக்கியஇ புத்த மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சுய தொழில் துவங்கிட கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகின்றது.

வழங்கப்படும் கடன் தொகை எவ்வளவு ?

அ. கேஸ் பொருத்தப்பட்ட (LPG) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ.1.21 இலட்சம் ஆ. சரக்கு (Carrier) ஆட்டோ வாங்க வழங்கப்படும் கடன் தொகை ரூ.1.28 இலட்சம். இ. புpற ஆட்டோ வாங்க கொடுக்கப்படும் கடன் தொகை ரூ.1 இலட்சம். இக்கடன் தொகையில் 95 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் ஏற்கும். மீதமுள்ள 5 விழுக்காடு தொகையை பயனாளி ஏற்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான தகுதிகள் என்ன ?

அ. மேற்குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆ. ஆட்டோ ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (licence) வைத்திருக்க வேண்டும். இ. ரூ.800/- அல்லது ரூ.1,000/- தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும். ஈ. தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கியில் வைப்பு நிதியாக (Fixed Deposit) ரூ.5,000/- செலுத்த வேண்டும் (இதற்கு வட்டி தரப்படும்). முற்றும் தொடர் வைப்பு நிதியாக (recurring deposit) பிரதி மாதம் ரூ.500/- நான்கு வருட காலத்திற்குச் செலுத்த வேண்டும்.

கடனுதவி பெற வருமான உச்ச வரம்பு உண்டா ?

ஆம். வுpண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம்இ நகர்புறம் எனில் ரூ.54,500/- க்கு மிகாமலும்இ கிராமப்புறம் எனில் ரூ.39,500/- க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் டாம்கோ நிறுவனம் வழங்கும் கடனை விட ஆட்டோ விலை அதிகமிருப்பின் என்ன செய்வது ?

மீதமுள்ள கடன் தொகையை ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம் அல்லது தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) ஆகியவற்றிலிருந்து பெறலாம்.

கடன் தொகையில் பயனாளி எத்தனை விழுக்காடு பங்கு தொகை அளிக்க வேண்டும் ?

வழங்கப்படும் கடன் தொகையில் பயனாளி 5 விழுக்காடு அவருடைய பங்கு தொகையாக அளி;க்க வேண்டும். மீதமுள்ள 95 விழுக்காடு கடன்தொகை டாம்கோ நிறுவனத்தினால் வழங்கப்படும்.

கடனுதவி பெறுவதற்கு பிணையம் (surety) ஏதும் தர வேண்டுமா ?

ஆம். பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் பிணையம் மற்றும் ரூ.5000/- வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

இத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கான ஆண்டு வட்டி 6 விழுக்காடு மட்டுமே ஆகும்.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான காலம் எவ்வளவு ?

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

கடன் எவ்வாறு திரும்ப வசூலிக்கப்படுகின்றது ?

ஆட்டோ தொழிற் கூட்டுறவுச் சங்கம் பயனாளியிடமிருந்து பிரதி மாத தவணை தொகையை வசூலித்து தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி லிட். (தாய்கோ) வங்கிக்கு செலுத்தும். தவணை தவறினால் பயனாளி தாய்கோ வங்கிக்கு செலுத்திய வைப்பு நிதியிலிருந்து ஈடுகட்டப்படும்.

போக்குவரத்து தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குதல்

தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நலிவடைந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகின்றது ?

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் போக்குவரத்து தொழில் தொடங்க கார்/ வேன்/டிராக்டர் போன்ற வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் கடன் தொகை எவ்வளவு ?

போக்குவரத்து வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்ய கொடுக்கப்படும் கடனின் உச்சவரம்பு ரூ. 3.13 இலட்சம் ஆகும்.

போக்குவரத்து கடன் தொகை பெறுவதற்கான தகுதிகள் என்ன ?

அ) இசுலாமியää கிறித்துவää சீக்கியää புத்தமதää பார்சி ஆகிய சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஆ) 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கடன் பெற வருமான உச்ச வரம்பு உண்டா ?

ஆம், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவரெனில் ரூ.54,500/-க்கு மிகாமலும்ää கிராமப்புறம் எனில் ரூ.39,500/-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பயனாளி (beneficiary) கடன் தொகையில் எவ்வளவு பங்கு தொகையை ஏற்க வேண்டும் ?

கடன் தொகையில் 90 விழுக்காட்டை டாம்கோ நிறுவனம் செலுத்தும். மீதமுள்ள 10 விழுக்காடு தொகையை பயனாளி செலுத்த வேண்டும்.

வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு ?

போக்குவரத்துக் கடன் தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 10% மட்டுமே.

ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்களுக்கு கடன் வழங்கப்படும் ?

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

கடன் பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் ?

விண்ணப்ப படிவங்களை டாம்கோ நிறுவனம்
(அ) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் அலுவலகம்
(அ) மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் (அ) மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள்
(அ) நகர கூட்டுறவு வங்கி
(அ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இவற்றில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பத்தினை பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை ?

அ) சாதி (உழஅஅரnவைல) சான்றிதழ்
ஆ) வருமானச் சான்றிதழ்
இ) ரேசன் கார்டு (அ) இருப்பிடச் சான்றிதழ்

3.30555555556
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ரா.காளிமுத்து. Dec 03, 2015 01:29 PM

வணக்கம்.நான் மரவேலை செய்கிரேன் என்தொலிலை விரிவுபடுத்த உங்கலிடம் கடன் உதவி கேக்கிரேன்

TASNA Nov 26, 2015 11:27 AM

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் நீங்கள் கடன் உதவி பெறலாம். http://www.bcmbcmw.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் வேண்டிய விவரங்களைப் பெறவும்.

ரா.களிமுத்து.ஆசாரியார் Nov 25, 2015 08:13 PM

நான் ஆராம் வகுப்பு படித்துஇருக்கிறேன் சுயதொலில் செய்கிறேன் என்தொலிலை விரிவுபடுத்த என்னிடம் வசதி இல்லை உங்கலிடம் கடன் உதவி கேக்கிரேன் எனக்கு உங்கள் வங்கியிள் இருந்து .ருபாய்.500000.கடன் உதவி வேன்டும் நான் மாதம் மாதம் சரயாக கட்டிவிடுவேன் .நன்றி.

சு.பொன்பாண்டியன் Nov 19, 2015 02:53 PM

சிறுபான்மையினர் என்றால் யாா் என்பதை தயவுசெய்து இந்தநாட்டு மக்களுக்கு தொிவிக்கவும். ஆம் சாதியாய் மதமாய் இந்த சமுகத்தை பிாிப்பதை தவிா்த்து எல்லோருக்கும் எல்லாம் சமம் என்பதை முதலில் அரசு செய்ய வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top