பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்

கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தகுதிகள்

ஓய்வு பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கி வருகிறது. பூசாரியாகப் பணியாற்றிய கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலாக இருக்கக் கூடாது. கோயிலில் பூசாரியாக 20 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.

ஓய்வு பெறும் பூசாரியின் வயது 60க்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான வருமானச் சான்று, மருத்துவச் சான்று போன்றவைகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சரியாக இருக்கும் நிலையில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.

வழங்கப்படும் உதவி

கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 500 வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.08641975309
ஆனந்த பிரபு. ஜா May 16, 2020 01:58 PM

வணக்கம்
அமைப்பு சாரா கோயில் பூசாரிகள்
நல வாரியத்தில் உறுப்பினராக என் செய்யவேண்டும்

Senthilkumar Jun 17, 2018 09:14 PM

தற்சமயம் இந்த திட்டத்தில் மாதம் 1500

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top