பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராமிய குடியிருப்பு திட்டம்

இத்தலைப்பு கிராமிய குடியிருப்பு திட்டம்- இந்திரா ஆவாஸ் யோஜனா பற்றிய தகவல்களை அளிக்கிறது.

மனித வாழ்விற்கு வீடு மிகவும் இன்றியமையாததாகும். வசிப்பதற்கு இடமில்லாத துன்ப நிலையை நீக்கி பாதுகாப்பான மனநிலையும், ஒரு அடையாத்தையும் அது மக்களுக்குத் தருகிறது. வீடில்லா நிலையை நிக்குவதை, இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கும் ஒரு முக்கிய திட்டமாகக் கருதலாம்.

இந்திரா ஆவாஸ் யோஜனா

 • 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
 • 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.
 • கிராம மக்களுக்கான வீடுகள் எனும் திட்டம் கிராம வளர்ச்சி அமைச்சகத்தால் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது.
 • மத்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இத்திட்டத்தின் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.
 • பின்வரும் நிலைகளிலிருப்பின் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
 • மாநிலம் / யூனியன் பிரதேசம்
  • அதிக அளவு வீடில்லா மக்கள் இருக்கும் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • 75% வீடில்லா நிலைக்கும் 25% மாநில அளவிலான திட்டக்குழு பரிந்துரை செய்த வறுமை விகிதத்திற்கும் பயன்பாடு தரப்படுகிறது.
 • மாவட்ட அளவிலான ஒதுக்கீடு,
  • 75 சதவிகிதம் வீடில்லா நிலைக்கும், மக்கள் தொகையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 25 சதவிகிதமும் அளிக்கப்படுகிறது.
 • சாதாரணமாக இருக்கும் பகுதியில் உள்ளோருக்கு ரூ.45,000 உதவித்தொகையாகவும், மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்கு ரூ.48,500-ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. DRDAs உதவித்தொகையை இரண்டு தவணைகளில் தருகிறது.
 • வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களின் முன்னேற்றத்தைக் குறியாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.
 • இத்திட்டத்தால் பயன்பெறுபவர்களில் 60 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.
 • கழிப்பறை மற்றும் புகையில்லா சுல்கா (chulha) ஆகியனவற்றைக் கட்டும் செலவும் இவ்வுதவித் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தின்படி வீட்டின் உரிமை முதலில் குடும்பத்தின் உறுப்பினருக்கே சேரும்.

மூளை மற்றும் உடல்திறன் குறைந்தோர், முன்னாள் இராணுவ வீரர்கள், விதவைகள் மற்றும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் போன்றவர்களுக்கும் இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Filed under:
3.01666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top