பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தனியாக நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

நிபந்தனைகள்


 • மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும்.
 • ஆணின் வயதுக்குக் கட்டுப்பாடு இல்லை.
 • மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 • வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.

விண்ணப்பம்

 • மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன்
 • பெண்ணிற்கான வயதுச் சான்றிதழ்
 • முதல் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ்
 • முதல் கணவரின் இறப்புச் சான்றிதழ்
 • இரண்டாம் கணவருக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ்

-போன்றவைகளையும் இணைத்து மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு

விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

உதவித் தொகை

இத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு நிதியுதவியாக ரூபாய்10,000 அளிக்கப்படுகிறது. இதில் ரூபாய் 7,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3,000-க்கான காசோலையாகவும் வழங்கப்படுகின்றன. தேசிய சேமிப்புப் பத்திரத்தை 5 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து மாற்றிக் கொள்ளும்படியான நிபந்தனையுடன் அளிக்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.8
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top