பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

கலப்புத் திருமணம் முதல்வகை

தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

  • திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  • வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  • திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை

ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.

கலப்புத் திருமணம் இரண்டாம்வகை

தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

  • திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
  • பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  • வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  • திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை

ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.05434782609
மணிகண்டன் Mar 11, 2020 01:30 PM

கலப்பு திருமணம் புரிந்த நாங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலப்புச் சான்று நகலுடன் பதிந்தால் , அரசு வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா? நிதியுதவி திட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவி மற்றும் மாநில அரசின் நிதிஉதவி எத்துணை நாட்களில் கிடைக்கப்பெறும்?

k.suja Feb 24, 2017 06:29 PM

நான் mcom பிஎட் பட்டம் முடித்து உள்ளேன். 2015 இல் கலப்பு திருமணம் செய்தேன். எனது கணவர் sc வகுப்பை சேர்ந்தவர் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா 86009

Renuga Oct 05, 2016 12:44 PM

கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் இரண்டாவதாக திருமணம்செய்து கொள்ளும்பொழுது கலப்புத் திருமண நிதியுதவித்தொகை கிடைக்குமா

கீா்த்தீகா Sep 23, 2016 10:42 PM

2011 ல் கலப்பு திருமணம் செய்தேன்..எனக்கு அரசு வேலை கிடைக்குமா..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top