பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொட்டில் குழந்தை திட்டம்

மறுவாழ்வு அளிக்கும் தொட்டில் குழந்தைகள் திட்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

தொட்டில் குழந்தை திட்டம்

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களைப் பல்வேறு காரணங்களுக்காக சுமை என்று எண்ணுவோர் அவர்களைக் கொலை செய்வது அல்லது பொது இடங்களில் வீசி எறிவது போன்ற செயல்கள் சில மாவட்டங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர். இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுகின்றன.

பெண் சிசுகொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதிலும் 1992இல் துவக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் தமிழகத்தில் பல பெண் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தது. பிறந்தவுடனே பெற்றோர்களால் கைவிடப்படும் பெண்  சிசுக்கள் இந்த திட்டம்  மூலம் அரசாங்கத்தால் வளர்க்கப்படுகிறார்கள். 1992 முதல் 2014 வரை, இந்த திட்டத்தின் கீழ் 4,000க்கும்  மேற்பட்ட பெண் குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

அறிமுகப்படுத்தக்கட்ட மாவட்டங்கள்

  1. சேலம்
  2. மதுரை
  3. திண்டுக்கல்
  4. தேனி
  5. தருமபுரி

குழந்தை இல்லாத பெற்றோர்கள் பலரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்திய மட்டுமல்லாது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் தொட்டில் குழந்தைகளை தத்தெடுக்கின்றனர்

திட்டங்களால் பெண் சிசுக்களின் உயிர்களைக் காக்கும் நிலை மாறி, சமூகத்தில் மாற்றம் வரவேண்டியது அவசியம். அத்துடன்  பெண் குழந்தைகளுக்கு கல்வியும் சமவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.06862745098
TASNA Jan 30, 2016 11:33 AM

விண்ணப்பித்த நகராட்சி அலுவலகத்தையே தொடர்புக் கொண்டு நகலைப் பெறலாம். நன்றி

சு.இளங்கோவன் Jan 29, 2016 06:56 PM

சென்னை மழை வெள்ளத்தில் எனது ITI சாண்றிதழ் இழந்தேன். பிறகு நகலுக்கு தாம்பரத்தில் மாடம்பாக்கம் நகராட்சியில் அரசு இலவச முகாமில் விண்ணபித்துள்ளேன், தோழர்களே மீண்டும் அதன் நகலை எங்கு பெற முடியும் சரியான தகவலை தெரிக்க உதவ முடியுமா?

TASNA Jan 29, 2016 05:15 PM

http://www.tn.gov.in/adoption/how_to_adopt.htm என்ற அரசாங்க வலைதளத்தை பார்த்து பயன் பெறவும். நன்றி

velsamy Jan 29, 2016 02:13 PM

எனக்கு ஒரு குழந்தை வேண்டும். யாரை தொடர்பு கொள்வது. வழி காட்டுங்கள் நண்பர்களே

Paramasivam Dec 04, 2015 03:29 PM

தத்து எடுப்போர் எங்கு குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற தகவல்கள் இருந்தால் என்னைப்போன்றோர்கள் பயன்பெருவார்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top