பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்

பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

  • பணிபுரியும் மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் வகையில்  உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.  அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் களைவதன் மூலம் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது.  தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும்.  எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும்

இடங்கள்

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

வசதிகள்

  • பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளில் தாய்மார்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்ள சிறிய மேஜை மற்றும் பெஞ்ச் வைக்கப்பட வேண்டும்
  • மேலும், பணி மற்றும் பயண நிமித்தமாக வெளியே செல்லும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாநிலம் முழுவதும் 351 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி அறைகளையும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை

3.01369863014
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top