பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்

இத் தட்டதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பின்னணி

ஆண் பெண் குழந்தை விகிதம் (Child Sex Ratio (CSR) குறைந்திருப்பது கவனத்துக்குரியது. 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண்குழந்தைகளும் பிறந்தன. 1991இல் இவ்விகிதத்தில் பெண்குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.

இந்த விகிதவேறுபாடு இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் பாலினத் தேர்வும், பிறப்புக்குப் பின்னர் பெண்சிசுக்கொலையும் ஆகியன அவை.

ஒருபுறம் பெண்குழந்தைகளுக்கு எதிரான சமூகக்கட்டமைப்பும், மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டுகொள்ளும் கருவிகள் எளிதில் கிடைப்பதும், வாங்க முடிவதும், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகப் பெண்குழந்தைகள் தேடி அழிக்கப்படுவதனால் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது.

பெண்குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்புச்சங்கமாகக் கூடிய  முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” ((BBBP) என்ற திட்டம் ஆண்பெண் குழந்தை விகிதத்தைச் சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தேசிய பிரச்சாரம் மூலமாக செயலாக்கப்படுறது. ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 161 மாவட்டங்களை கவனத்தில் கொண்டு, பல அடுக்குச் செயல்திட்டமாக செயலாற்றபடுகிறது.

இது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த குறிக்கோள்

பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள்

 • ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற அடிப்படையில் 161 மாவட்டங்களை அடையாளங்காண்பது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதியிலிருந்து குறைந்தது ஒரு மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் வீதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று விதிகளாவன:-
  • தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட குறைவான விகிதம் உடைய மாவட்டங்கள் (87 மாவட்டங்கள் / 23 மாநிலங்கள்)
  • தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், ஆனால் குறைந்துவரும் தன்மையைக் காட்டுபவை (8 மாவட்டங்கள் / 8 மாநிலங்கள்)
  • தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், மேலும் கூடிவரும் தன்மையைக் காட்டுபவை ( 5 மாவட்டங்கள் / 5 மாநிலங்கள்). இவை, ஆண்பெண் குழந்தை விகித அளவுகள் பராமரிக்கப்படுவதோடு மற்ற மாவட்டங்களும் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்பற்றிக் கற்றுக்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நோக்கங்கள்

 • பாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.
 • பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்
 • பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்.

செயல் திட்டம்

 • பெண்குழந்தைகளுக்குச் சமமதிப்பை உருவாக்கவும்,  அவர்களுக்கு  கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருஙகிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • ஆண் பெண் குழந்தை விகிதம் / பால்விகிதச் சமநிலை (SRB) குறைவாக இருக்கின்ற பிரச்சினையை மக்களுக்கு முன்வைத்து, விவாதித்து, எது சரியான தீர்வாகப் பெறப்படுகிறதோ அதனை மேம்படுத்துவது.
 • ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களையும் மாவட்டங்களையும் தேர்ந்தெடுத்து, தனிக்கவனம் செலுத்தி திட்டத்தைச் செயல்படச்செய்வது.
 • பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக விளங்கும் கடைநிலைப்பணியாளர்கள் ஆகியோரைத் திரட்டி, பயிற்சி தந்து, உள்ளுர் / பெண்கள் / இளைஞர் குழுக்களின் உதவியுடன் திட்டமிடுதல்.
 • சேவை  அமைப்புகள் / திட்டங்கள் / செயல்திட்டங்கள் ஆகியவை பாலின சமநிலையோடு, குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து, போதுமான பொறுப்புடன் செயல்படும் வகையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும்.
 • கடைநிலை / ஒன்றிய / மாவட்டம் அளவில் நிறுவனங்களுக்கிடையில் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.

திட்ட கூறுகள்

பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்: என்ற முழக்கத்தை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவது.

இந்தச் செயல்திட்டம் “பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற முழக்கத்துடன் தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கிப் பெண்குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குக் கல்விதரவும் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், பெண்குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதும் பாதுகாப்பிலும் வேறுபாடின்றி கல்வி கற்பிப்பதும் இந்த நாட்டில் சம உரிமையுடன் நாட்டின் ஆண்களைப் போல அதிகாரம் பெறுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், மத்திய, மாநில, மாவட்ட அளவில் ஊடகத் தொடர்புகொண்டு சமூக அளவிலான செயல்பாட்டினை 161 மாவட்டங்களில் பலரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தித் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற மாநில / யூனியன்களில் 161 மாவட்டங்களில் பல் முனை செயல்திட்டங்கள் செயலாற்றுவது.

பல கூறுகளை ஒருங்கிணணத்துச் செயல்படுத்த மனிதவள மேம்பாடு & உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சங்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஆண்பெண் குழந்தை விகிதாச்சாரத்தைச் சமப்படுத்த, மாவட்ட, மாநில அளவில் செயல்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டினை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்த, வளைந்து கொடுக்கக்கூடிய செயல்கட்டமைப்பை அமைத்து, நோக்கங்ககள் நிறைவேற கண்காணிக்க வேண்டும்.

திட்டச்செயலாக்கம்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிர்வாகமும் வரவு செலவு திட்டமிடவும் செய்யவும், மாநில அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் பொறுப்பேற்பார். திட்டத்தின் நடைமுறை அமைப்பினைப் பின்வருமாறு காணலாம்.

தேசிய அளவில்

“பெண் குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற தேசிய சவாலை நிறைவேற்றுவோராக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் தலைமையில் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், மனிதவளத்துறை அமைச்சகம், தேசிய சட்டச்சேவை நிறுவனம் / மாற்றுத்திறனாளி நலத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து, பாலின வல்லுநர்களும் சமூகப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுவர்.

மாநில அளவில்

மாநில அரசுகள், திட்ட செயலாற்றுக் குழு ஒன்றை அமைத்து அதில் உறுப்பினர்களாக உடல்நலம் & குடும்பநலம், கல்வி,  பஞ்சாயத்துராஜ் / நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடக்கிய மாநில சேவை அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை ஆகியன “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

துறைகளுக்கிடைியிலான கூட்டுச்செயல்பாடும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் பட்சத்தில் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராக முதன்மைச் செயலாளர் செயல்படுவார். யூனியன்களில் நிர்வாகத்தலைவர் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

சில மாநிலங்களில் / யூனியன்களில் தங்களது மாநிலச்செயல்திட்டத்திலேயே பெண்களுக்கான அதிகாரமளித்தல், பாலின மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்களுக்குத் தீர்வுகாணும் அமைப்பு இருந்தால் அதனையும் ஈடுபடுத்தலாம், அல்லது அவற்றைப் பலப்படுத்தலாம்.

முதன்மைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி / சமூகநலம் இந்த அமைப்பின் நெறியாளராகச் செயல்படவேண்டும். ICDS இன் இயக்குநரகம் மூலம் மாநிலங்களில் / யூனியன்களில் இத்திட்டம் சார்ந்த பணிகளை நிறைவேற்றவும் ஒருங்கிணைக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை பொறுப்பேற்க வேண்டும்.

மாவட்ட அளவில்

மாவட்ட திட்ட செயலாற்றுக் குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் / துணை ஆணையர் உடன் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் (உடல்நலம் / குடும்பநலம் / கல்வி / பஞ்சாயத்ராஜ் / கிராமப்புறவளர்ச்சி, காவல்) ஆகியோருடன் மாவட்ட சட்டச்சேவை அதிகாரி (DLSA) யும் இணைந்து மாவட்ட செயல்திட்டத்தைத் திறமையாகச் செயல்படுத்தவும் முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்.

ஓன்றிய அளவிலான செயல்திட்டங்களை, மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட ICDS அலுவலர் ஆகியோர் அமைத்துள்ளனர். அவர்களின் துணையோடு தொழில்நுட்ப உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்று மாவட்ட செயல்திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு பாலின வல்லுநர் / சமூக சேவையாளர் ஒருவரும் செயலாற்றுக் குழுவில் இடம்பெற வேண்டும்.

ஒன்றிய அளவில்

துணை வட்டார நீதிபதி /துணைவட்டார அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (தொடர்புடைய மாநில அரசால் முடிவுசெய்யப்பட்டவர்) தலைமையிலும் வட்டார அளவில் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரச் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும்,  முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அக்குழுவுக்குத் மேற்கண்டவர்கள் துணையிருப்பார்கள்.

கிராமப் பஞ்சாயத்து / வார்டு அளவில்

பொருத்தமான பஞ்சாயத்துச்சபை/ வார்டு சபைகள் (மாநில அரசுகளால் முடிவு செய்யப்பட்டது) கிராம பஞ்சாயத்து / வார்டு எல்லைக்குட்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்தைத் திறன் வாய்ந்த வகையில் செயல்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

முன்னணி பணியாளர்கள் (AWW, ASHAS) ANMs) ஆண்பெண் குழந்தை விகிதம் குறித்த விழிப்புணர்வை கடை நிலை வரை உருவாக்கவும், தரவுகளைத் திரட்டவும், பெண்குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பான செயல்திட்டங்கள்/ பணித்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பவும் வேண்டும்.

நகரங்கள் / நகர்ப்புறம்

மாநகராட்சிகளின் தலைவர் வழிகாட்டுதலுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.

சமூக ஊடகம்

குழந்தைகளின் பால்விகிதக்குறைவுப் பிரச்சினைபற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான காணொளிப் பதிவுகள் அனைத்தும் “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற யு..டியூப் (YouTube) சேனல் ஒன்று அமைக்கபட்டுள்ளது. வீடியோ காட்சிகள் தொடர்ச்சியாகக் சேர்க்கப்படும். இதன்மூலம் விழிப்புணர்வை உருவாக்கவும் எளிதாகச் செய்தியைப் பரவச் செய்யலாம்.

மேலும், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்’ என்ற கொள்கை முழக்கத்தை தேசிய அளவில் உருவாக்க ‘எனது அரசாங்கம்’ (MyGov) என்ற மின்தளம் வழியாகச் கருத்து பகிர்வு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணையவும் உங்கள் மதிப்பு வாய்ந்த ஆலோசனைகள், விமர்சனங்கள் முதலியவற்றை வழங்க உங்களை அழைக்கின்றோம்.

நிதி ஒதிக்கீடு

12ஆவது திட்டத்தில், இத்திட்டத்தினைப் பொதுமக்களிடையே பிரபலப்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரூ. 100 கோடி பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஆகியவை மூலம் திரட்டப்படும்.

நிதி நிர்வாகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசு அளவில் திட்டத்தை நிர்வகிக்கவும் நிதித்திட்டக்கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பாகும். தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இச்செயல்திட்ட ஒப்புதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க நிதியை அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.

மதிப்பீடு

12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இச்செயல்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்து தேவையான சரிப்படுத்தும் முயற்ச்சிகளை எடுக்கவேண்டும். ஆண் பெண்குழந்தை பிறப்பு ஆண்டு சதவீதத்தை அடிநிலைக்கணக்கீடு செய்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.


பெண் குழந்தை பாதுகாப்பு

ஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

2.98611111111
பத்மாவதி Jul 23, 2019 06:45 PM

மிகவும் அவசியமான, அருமையான திட்டம்.. இதில் எப்படி நாங்கள் பங்கேற்பது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top