பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு உரிமை

உணவு உரிமை பற்றிய பல்வேறு அரசாங்க முன்முயற்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உணவு மற்றும் ஊட்டச் சத்துப் பாதுகாப்பு

தேசிய மதிய உணவுத் திட்டம் (National cooked Mid-day Meal Programme), ICDS, கிஷோரி சக்தி யோஜனா (Kishori Shakti Yojana) பதின் மகளிருக்கு உணவூட்டத் திட்டம் (Nutrition programme for Adolescent Girls) மற்றும் பிராதான் மந்திரி கிராமோதய யோஜனா (Pradhan Mantri Gramodaya Yojana) போன்ற திட்டங்களின் மூலம் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது.

மதிய உணவுத் திட்டமானது உலகளாவியத் திட்டமாக மாறிவிட்ட நிலையில் ICDS திட்டம் படிப்படியாகத்தான் உலகளாவிய நிலையை அடைய 11 முதல் 18 வயது வரையுள்ள இளம் பெண்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் கிஷோரி சக்தி யோஜனா திட்டத்தை உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்திக்கொண்டு வருகிறது. தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டத்தை (National Food Security Mission) ரூ.4882 கோடி செலவில் இந்திய அரசு துவங்கியுள்ளது. 2008-09 ஆம் ஆண்டில் இந்திய அரசு பெருமுயற்சி செய்து மிகப்பெரிய உடைக்கமுடியாத சாதனையைப் படைத்தது. மேலும் 26 லட்சம் டன் நெல்லையும் அறுவடை செய்து நெல்விளைச்சலின் மிகப்பெரிய உயரத்தினைத் தொட்டது. இதனால் அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) வெற்றிகரமாக உயர்த்தியது. கோதுமையின் கொள்முதல் விலையை 4 வருடங்களுக்குள் 2004-05 இன் அளவைவிட 56% அதிகப்படுத்தியது. 2008-09 ஒரு குவின்டால் கோதுமையின் விலை ரூ.1000/- ஆக உயர்ந்தது. 2004-05 இல் நெல்லின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ.560/- ஆக இருந்தது. அது 2008-09 இல் ரூ.850/- ஆக உயர்ந்தது. கோதுமையை போதிய அளவு சேமிப்பதன் மூலமாகவும் விலையை ஏற்றாமலிருப்பதன் மூலமாகவும் தேவையான உணவு பாதுகாப்பினை அளிக்க எண்ணிய அரசு 2007-08 இல் 17.69 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்தது.

பொது விநியோக முறை

உணவுப் பாதுகாப்பில் பொது விநியோக முறை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்தியாவில் நான்கு லட்சங்களுக்கு மேல் நியாய விலைகடைகள் (FPS) உள்ளன. வருடத்திற்கு ரூ.15000 கோடி மதிப்புள்ள பொருள்களை ஏறத்தாழ 16 கோடி குடும்பங்களுக்கு இந்நியாய விலைக்கடைகள் விநியோகம் செய்கின்றன. உலகிலேயே மிகப்பெரிய இதுபோன்ற பொது அளவில் விநியோகிக்கும் முறையினை பின்பற்றும் நாடு இந்திய நாடாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு..

தானியக்கிடங்குகள்

கிராமப்புறங்களிலுள்ள தானியக்கிடங்குகள் மாற்றியமைக்கப்பட்டு பெரிய அளவினதாக வடிவமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. பஞ்சம், பசி, பட்டினி, இயற்கைச் சீற்றம் ஆகியன எதிர்க்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தானியக் கிடங்குகள் செயல்படுகின்றன. முன்னதாக மலை சாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களும் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றனர். தற்சமயம் வறுமைக்கோட்டின் கீழ்வாழ்பவர்கள், பஞ்சப் பிரதேசத்தில் வசிப்பவர்கள், உழவுக்குப் பயன்படாத இடத்தில் வாழ்பவர்கள், உணவுப் பொருள்கள் விளையாத மலைபிரதேசங்களில் வசிப்பவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். கிராமங்களில் இருக்கும் தானியக் கிடங்குகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 4858-இல் இருந்து 18129 ஆக உயர்ந்துள்ளது..

அன்ட்யோதய அன்ன யோஜனா

அன்ட்யோதயா அன்ன யோஜனா மேலும் ஒரு குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதனால் பயன்பெறுவோரின் சதவிகிதம் 67% ஆக அதிகரித்துள்ளது. தேசிய மாதிரி மதிப்பீடு பயிற்சி (National Sample Survey) நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கூட முழுமையான உணவு உண்ணாமல் உறங்குகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த மக்களை ‘பசியோடிருப்பவர்கள் (hungry) என்று வகைப்படுத்தலாம். பசியோடிருப்பவர்களின் நிலையை TPDS மூலம் மேம்படுத்த அன்ட்யோதயா அன்ன யோஜனா திட்டம் டிசம்பர் 2000-இல் துவங்கப்பட்டது. ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்களின் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்ட்யோதய அன்ன யோஜனா திட்டமானது மாநிலத்தினுள் TPDS திட்டத்தினுள் அடங்கியுள்ள வறுமைக் கோட்டிற்குக் (BPL) கீழே வாழும் குடும்பத்தினரைக் இனம்கண்டு மிகக்குறைந்த மானிய விலையில், ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய் என்ற அளவிலும், ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்றும் விற்பனை செய்கிறது. இத்தானியங்களின் விற்பனை விலை விற்பனை செய்பவர்கள், கொள்முதல் செய்பவர்களுக்கான ஆதாயம், போக்குவரத்துச் செலவு போன்றனவற்றை அந்தந்த மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேசங்களோ செய்துக்கொள்ள வேண்டும். அதனால் மானிய விலை தானியங்கள் முழுமையும் தகுதியான நுகர்வோருக்குச் சென்றுச் சேரும்.

Filed under:
3.04347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top