பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முத்ரா வங்கித் திட்டம்

முத்ரா வங்கித் திட்டம்

முத்ரா வங்கித் திட்டம்

 1. சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency  என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம்  வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.
 2. பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.
 3. அரசு நிறுவனங்கள் தொகுத்த தரவுகளின்படி 57.7 மில்லியன் நபர்கள், கிட்டத்தட்ட ரூ. 11 லட்சம் கோடி முதலீட்டில் சிறுதொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதாவது சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு சிறுதொழில் அமைப்புக்கு ரூ. 17,000 மட்டுமே மூலதனம். எனவே சிறுதொழில் முனைவோரின் மூலதனச் சிரமங்களை அகற்றி, அவர்கள் சாதனை படைக்க உதவி புரியவே முத்ரா வங்கி தொடங்கப்பட்டிருக்கிறது.
 4. முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதான அம்சங்கள்

 1. சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி அமைப்புகளுக்கான வரையறைகள் உருவாக்குவது.
 2. சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்கொள்ளுதல்
 3. சிறு/குறு நிதி அமைப்புகளை வரன்முறைப் படுத்துதல்
 4. சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம்/தர நிர்ணயம் செய்தல்
 5. கடனுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் வகுக்கவும் கடனிலிருந்து மீளவும் ஒரு அமைப்பை உருவாக்குதல்.
 6. அனைத்து சிறு/குறு தொழில் நிறுவனங் களுக்கும் ஒப்பந்ததத்துடன்கூடிய கடன்கள் அளிப்பது.
 7. கடன்களுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளை பரிந்துரைத்தல்
 8. பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ் குறு தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கான வழிவகைகளைக் கட்டமைப்பது
2.8813559322
TASNA Jan 28, 2016 11:33 AM

கருத்துக்களுக்கு நன்றி. தாங்கள் வேண்டும் விவரங்களை தெளிவாக குறிப்பிட்டால் தகவலைப் பெறலாம்.

கனகராஜ் Jan 24, 2016 07:55 PM

மேலும் விவரங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top