பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேலைவாய்ப்பு

சமுதாய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வேலைவாய்ப்புகள்

வறுமையினை நீக்குதல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் ஆகியன வறுமை ஒழிப்புத் திட்டத்தின் அங்கங்களாகும். வேலைவாய்ப்பு தரும் பல திட்டங்கள் பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதிக வேலை வாய்ப்பினை உருவாக்குதல், ஆக்கபூர்வமான வளங்களை உருவாக்குதல், தொழில் மற்றும் தொழில்துறை சார்ந்த திறமைகளை வளர்த்தல் மற்றும் வறுமையாக இருப்போர் வருமானத்தை உயர்த்துதல் போன்ற செயல்களின் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இத்திட்டங்களின் மூலம், கூலி வேலைகளும், சுயதொழில் வாய்ப்பும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களுக்குத் தரப்படுகின்றன. 1998-99 முதல் செயல்படுத்தப்பட்டுவரும் வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் பின்வருமாறு இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன.

 • சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள்
 • கூலி வேலைத் திட்டங்கள்

நல்ல விளைவினை எதிர்நோக்கியே நிதியுதவியும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன. இத்திட்டங்களால் வறுமை ஒழிப்பினை முதன்மைக் கூறாகக் கொண்டு செயல்படுகின்றனவேயொழிய வேலை வாய்ப்பினைத் தக்க வைத்துக்கொள்ள உதவிகரமாக இல்லை.

இந்தியாவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள்

கூலிக்காக அல்லது வருமானத்திற்காக நேரடியாகவோ, நிறுவனம் மூலமாகவோ, ஒப்பந்ததாரர் மூலமாகவோ பணிபுரிபவர்கள், தன்னிச்சையாக தன் வீட்டிலிலோ, நிலத்திலோ, பொது இடத்திலோ வேலை செய்பவர்கள், சுயவேலை செய்பவர்கள் இவர்களனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். மேலும் ணிஷிமிசி சட்டத்தின் மற்றும் பொது சேம நிதி (P.F Act), எல்.ஐ.சி-யின் தனிநபர் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் போன்றனவைகளின் மூலம் கிடைக்கும் பயன்கள் எதனையும் அடையாதவர்களும் அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பினை உருவாக்குல் / அதிகரித்தல் - அரசாங்கத்தின் முயற்சி

 • தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (National Rural Employment Guarantee Act (NREGA)) -. இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு 100 நாட்களுக்கு உறுதிசெய்யப்பட்ட வேலை வாய்ப்பினைத் தருகிறது. சமுதாயத்தைக் காக்க இது போன்ற பாதுகாப்பு வலை, உலகின் எந்த நாட்டிலும் இதுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 200 மாவட்டங்களில் பின்பற்றப்ப¢பட்ட இத்திட்டம் 614 கிராம மாவட்டங்களில் ஏப்ரல் 2008 முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
 • கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (Khadi and Village Industries Commission (KVIC)) சிறுதொழில் மற்றும் கிராமப்புற தொழிற்சாலை மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 • அமைப்புசாரா தொழில்துறை வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் (National Commission for Enterprises in the Unorganized Sector (NCEUS)) - . அமைப்புசாரா தொழில்துறை வளர்ச்சிக்கான தேசிய ஆணையம், ஒழுங்குமுறை சாரா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளின் முன்னேற்றத்தையும் உற்பத்தியையும் பெருக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவாகவும் கண்காணிப்பாளராகவும் செயல்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்கவும் உதவுகிறது. இது ஒரு கடமையைச் செய்ய முற்படும்போது அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னேற்றத்திற்கான ஒப்பந்தத்திலுள்ள (United Progressive Alliance Government) குறைந்தபட்ச பொது நல திட்டத்தின் மூலம் ஒரு தேசியக் குழுவினை, அமைப்பு சாரா பகுதிகளில் உருவாக்க செய்யும் முயற்சியாகும். இது உலகளாவிய சுற்றுச்சூழலில் (global environment) அமைப்பு சாரா பகுதிகளில் போட்டி மனப்பாங்கை உருவாக்கவும், அப்பகுதியை, கடன், மூலப்பொருள், கட்டமைப்பு, தொழில் மேம்பாடு மற்றும் விற்பனை போன்ற துறைகளில் நிலையான ஒருங்கமைப்போடு இணைக்கவும் தேவையான பரிந்துரைகளையும், வழிகாட்டுதலையும் தருகிறது.
 • தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவித் திட்டம் மற்றும் பருத்தித் தொழில்நுட்பக்குழு - மிக இன்றியமையாததான வரிவிலக்கு தரப்பட்டுள்ளது. வரி அமைப்பானது வளர்ச்சியையும் நாட்டினுள் உச்சபட்ச விலையையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித்திட்டம் மற்றும் பருத்தி தொழில்நுட்பக் குழு, தொழிற்சாலைகளை நவீனப்படுத்துதலையும், மேம்படுத்துதலையும், மூலப்பொருள்களை மலிவுவிலையில் வாங்குவதையுமே, நோக்கமாகக் கொண்டுள்ளது; முதலீடும் இக்காரணங்களுக்காகவே செய்யப்படுகிறது. முதலீடு மானியத்தில் 10% அதிகரிக்கப்பட்டதால், தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தில் (Technology Upgradation Fund Scheme) செய்யப்பட்ட முதலீடு ரூ.1300 கோடியிலிருந்து (2003-04) ஏறத்தாழ ரூ.20,000 கோடிக்கு (2006-09) அதிகரித்துள்ளது ஒருங்கிணைக்கப்பட்ட நெசவுப்பூங்கா (Integrated Textiles Parks) எனும் திட்டம். நெசவுத் தொழில் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 40 ஒன்றிணைந்த நெசவுப் பூங்காக்கள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக தொழில்நுட்பக்குழு ஒன்று 11ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்படுத்தப்படும்.
 • தேசியச் சணல் நார் வாரியம் (National Jute Board): 2004-05ஆம் ஆண்டில் ஒரு குவின்டால் சணல் ரூ.890க்கு விற்கப்பட்டது. ஆனால் 2004-05 இல் இது 1250 ஆக அதிகரித்துள்ளது. தேவையைப் போதுமான அளவு சமாளிக்க சர்க்கரை மற்றும் தானியங்களுக்கான பாக்கெட்டுகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. முதன் முறையாக சணல் விளைப்போரின் நலனைப் பாதுகாக்கவும், சணலுக்கான தேவையை அதிகரிக்கவும், செறிவான தேசியச் சணல் நார் திட்டமொன்று (Comprehensive National Jute Policy) உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சணல் கழக (Jute corporation of India) மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. சணல் தொழில்நுட்பக் குழு (Jute Technology Mission) ஒன்று சணல் தொழிலின் மேம்படுத்துதலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சணல் உற்பத்தியிலுள்ளப் பல்வேறு சணல் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒன்றிணைக்கத் தேசிய சணல் ஆணையம் (National Jute Board) உருவாக்கப்பட்டது..

மூலம் : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசு

தொடர்புள்ள வளங்கள்

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம்,2005
 2. ஆஜீவிகா - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (NRLM)
 3. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம்(PMEGP)
Filed under:
2.98305084746
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top