பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு

புதுவாழ்வு திட்டத்தின் ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

புதுவாழ்வு - மக்களால் நிர்வகிக்கப்படும் திட்டம் (மக்கள் திட்டம்)

பொதுவாக ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ எந்த செயல்பாடுகளை செய்தாலும் அதன் முழு பயனும் உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டுமானால் அந்த செயல்பாடுகள் நேர்மையானதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும், அப்பழுக்கற்ற, எந்த விதமான லஞ்ச லாவண்யத்திற்கு இடம் கொடுக்காமலும் மற்றும் ஊழலுக்கு வழி வகுக்காமலும் இருந்தால் அதனுடைய முழு பயனும் உரியவர்களுக்கு போய் சேரும்.

நமது திட்டமானது ஏழைகளின் எதிர்கால கனவுகளை, அவர்களின் லட்சியங்களை நினைவாக்க, அடைய, உதவுகிற திட்டமாகும். இதில் நமது மக்கள் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூக தணிக்கை குழு, குடியிருப்பு அளவிலான கூட்டங்கள், சுய உதவி குழுக்கள், இளைஞர் அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் இவைகளின் செயல்பாடுகள் தூய்மையானதாகவும், நேர்மையானதாகவும், சிறந்த ஆளுமைத்தன்மை உடையதாகவும் இருந்தால் மட்டுமே நாம் திட்டமிட்ட இலக்குகளை, நமது கனவுகளை மற்றும் லட்சியத்தை அடைய முடியும்.

இதில் எங்காவது குறைகளோ, தவறுகளோ நிகழ்ந்தால் நிர்வாக சீர்கேடுகள், நிதி மோசடி, லஞ்ச லாவண்யம், திட்ட செயல்பாட்டில் தொய்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அல்லது சாத்தியக் கூறுகள் அதிகமாகும்.

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு என்பது

சிறந்த ஆளுமை என்பது ஒரு சமூகம் தன்னிடம் உள்ள வளங்களை செம்மையாக பயன்படுத்தி நேர்மையான நிதி நிர்வாகம் செய்து அதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதற்கான சரியான முடிவுகளை உரிய நேரத்தில் செயல்படுத்தி நிர்வகிப்பதே ஆகும்.

ஆளுமையின் அவசியம்

 • புதுவாழ்வு திட்ட செயல்பாட்டில் ஈடுபட்டு இருக்கும்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
 • சமூக தணிக்கை குழு
 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு
 • ஒத்த தொழில் குழுக்கள், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான மக்கள் கற்றல் மையங்கள்.
 • இலக்கு மக்கள்
 • திட்ட பணியாளர்கள்

அனைவரும் சிறந்த ஆளுமை மற்றும் பொறுப்புணர்வுக்கான தேவை மற்றும் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு திட்டத்திலும் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆளுமைக்கான கோட்பாடுகள்

 • மக்கள் பங்கேற்புடன் முடிவெடுப்பது.
 • திட்ட உயிர்மூச்சு கோட்பாடுகளின்படி செயல்படுவது.
 • நேர்மையான மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் செய்வது.
 • மக்கள் அமைப்புகளில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது.
 • பொது நலனுக்காக செயல்படுவது.
 • இலக்கு மக்களுக்கு நிலையான நீடித்த வருமானம் ஈட்டக் கூடிய உள்ளுர் வளங்களை ஆராய்ந்து வாழ்வாதாரத்தை உருவாக்கி அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது.

தவறான ஆளுமையால் ஏற்படும் விளைவுகள்

எந்த ஒரு மக்கள் அமைப்பும், சிறந்த ஆளுமையை கையாளாமல் திட்ட உயிர் மூச்சினை கடைபிடிக்காமலும் இருந்தால், திட்டத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, கீழ்வரும் விளைவுகள் ஏற்படும்:

 • ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யம் ஏற்படும்.
 • தனிநபர், ஒரு இனம், ஒரு குறிப்பிட்ட ஜாதி, ஒரு குறிப்பிட்ட குடியிருப்பு போன்றவற்றின் ஆதிக்கம் செலுத்துதல்.
 • சொந்த தேவைகளுக்காக விதிமுறைகளை மீறுதல்.
 • சுய நல நோக்கமாகவே முடிவு எடுத்தல்.
 • திட்டம், முழுமையான அளவில் மக்களிடம் சென்றடையாது.
 • திட்ட செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருத்தல்.
 • வறுமையினை ஒழிக்கும் நோக்கத்தினை அடையாதிருத்தல்.
 • அரசியல் தலையீடு.
 • தவறான முறையில் நிதியை கையாளுதல்/நிதி மோசடி.
 • மக்கள் அமைப்பு நிறுவனங்களில் பணியாளர்கள், திட்ட பணியாளர்களின் தலையீடு.

சமூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன?

சமூகப் பொறுப்புணர்வு என்பது கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் இதர குழு உறுப்பினர்கள் அந்த கிராமத்து மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப பொறுப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பணியினை திட்ட வழிகாட்டி மற்றும் உயிர்மூச்சு கொள்கைகளின்படி இலக்கு மக்கள் திருப்தி அடையும் வகையில் செயல்படுவதோடு அப்படி செயல்படும் பொழுது அதில் ஏற்படும் தொய்வுகளுக்கும், தோல்விகளுக்கும் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்வதாகும்.

சமூகப் பொறுப்புணர்வு மூலம் கீழ்கண்டவற்றை உறுதி செய்யலாம்.

 • திட்ட கோட்பாடுகளின் படி செயல்பாடுகள் நிறைவேற்றுதல்.
 • நிதியினை சரியான முறையில் செலவிடுதல்.
 • நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள், மிகவும் ஏழை மற்றும் ஏழை மக்களை முன்னுரிமை படுத்தப்பட்டு பயன் அடைய வழிவகுத்தல்.
 • முன்னூரிமை படுத்தப்பட்டு தேவையின் அடிப்படையில் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருதல்.
 • அனைத்து முடிவுகளும் பங்கேற்பு அடிப்படையில் எடுத்தல்.
 • கிராமத்திலுள்ள அனைவருக்கும் திட்ட செயல்பாடுகளை வெளிப்படையாக தெரிவித்தல்.
 • நமது கிராமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தல்.
 • திட்ட இலக்கினை அடைய தேவைப்படும் நிலையான மக்கள் அமைப்புகளை உருவாக்குதல்.

1. உயிர்மூச்சு

மக்கள் அனைவரும் எல்லா செயல்களிலும் உயிர்மூச்சினை கீழ்கண்டவாறு கடைப்பிடித்தால் சமூகப் பொறுப்புணர்வை உறுதி செய்யலாம்.

உயிர்மூச்சு

உயிர்மூச்சினை நமது கிராமத்தில் பின்பற்றும் முறைகள்

நாம் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து செயல்படுத்துவோம்.

 • அனைத்து முக்கிய முடிவுகளும் கிராம சபை மற்றும் ஊர்க் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து செயல்களிலும் வெளிப்படையாக இருப்போம்

 • அனைத்து முக்கிய செயல்களை பற்றியும் நம் கிராமத்தில் எல்லோருக்கும் கீழ்கானும் முறைகளில் தெரிவிப்போம்.
 • தகவல் பலகை
 • கூட்டங்கள்
 • விழிப்புணர்வு முகாம்
 • கணக்கு புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல்.

மகளிர்ருக்கு முன்னுரிமை அளிப்போம்.

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார மற்றும் மாவட்ட மகமை, சமூக தணிக்கை குழுவிலும் 50% மகளிர் பங்கேற்பை உறுதி செய்தல்.
 • கிராம சபையிலும், ஊர்கூட்டங்களிலும் 50% மகளிர் பங்கேற்பை உறுதி செய்தல்.
 • நிர்வாகி தேர்தலில்; ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார மற்றும் மாவட்ட மகமை, கிராம வறுமை ஒழிப்பு சங்கம்,சமூக தணிக்கை குழுவில் 50% மகளிர் பங்கேற்பை உறுதி செய்தல்.

ஏழை எளியோரை ஏற்றம் பெற செய்வோம்

 • இலக்கு மக்களில் பயன்பெற்றவர்களின் பட்டியலை தயார் செய்தல்.
 • அனைத்து இலக்கு மக்களையும் குழுவில் இணைத்தல்.
 • இலக்கு மக்களை வருவாய் பெருக்கும் செயல்களில் ஈடுபட உதவி செய்தல்.

மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்றோர்க்கும் உறுதுணையாக இருப்போம்.

 • மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் பிரதிநிதியை அனைத்து மக்கள் அமைப்புகளிலும் இணைத்தல்.
 • மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் ஆகியோரது தனித்தேவைகளை குறிப்பிட்டு திட்டம் தயாரித்தல்.
 • சிறப்பு நிதியை அவர்களது பயன்களுக்காகவே ஒதுக்கீடு செய்தல்.
 • உதவிகள் (நிதி மற்றும் நிதி சாராத) பெற துணை செய்தல்
 • வருமானத்தை பெறக்கூடிய வாழ்வாதார செயல்பாடுகளை மேற்கொள்ள உதவிகள் செய்தல்.

நாணயத்துடன் நமது கிராம நிதியை பயன்படுத்துவோம்.

 • கிராம நிதியை மிக அவசியமான தேவைக்கு, செயல்பாட்டின் அவசியத்திற்கேற்ப செலவிடுதல்.
 • நிதியை ஏற்றுக் கொள்ளதக்க திட்ட வழிமுறைகளின் படி பயன்படுத்தபடுவதை உறுதி செய்தல்.

2. தகவல் பலகை

பல சமயங்களில் நமக்கு போதுமான தகவல்கள் இல்லாத காரணத்தால் நமது நிர்வாகிகளை தவறாக நினைக்கிறோம். நாம் கிராம சபை கூட்டங்களில் நிர்வாகிகள் சொல்லும் கருத்துகளை கேட்பது இல்லை. நாம் நம்முடைய பணிகளை கவனிக்கவும் முக்கிய சொந்த காரணங்களுக்காகவும் சென்று விடுகிறோம். அப்போது தகவல் பலகை, சமூகப் பொறுப்புணர்வு உள்ள ஒரு முக்கிய கருவியாக நமது கிராமத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. புதுவாழ்வு திட்டம் பற்றி தகவல்களை அனைத்து குடியிருப்புகளிலும் உள்ள தகவல் பலகையில் தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்யலாம்.

 • நமக்கு நேரம் கிடைக்கும் போது நமது கிராமத்தில் செயல்பட்டு வரும் செயல்பாடுகளை மற்றும் பயன்பெற்றவர்கள் விவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
 • தகவல் பலகையை கடந்து செல்லும்போது பார்வையிட்டு புரிந்து கொள்ளலாம்.
 • நாம் படிக்காதவர்களாக இருந்தாலும் நம்முடைய பிள்ளைகளையோ, மற்றவர்களையோ தகவல் பலகையில் எழுதப்பட்டிருப்பதை படிக்க சொல்லி கேட்டு அறிந்து கொள்ளலாம்.

தகவல்பலகையில் நாம் பல்வேறு செயல்களை எழுதுகிறோம். அவற்றில் சில மாதிரி செயல்பாடுகள் பின்வருமாறு இருக்கலாம்.

1. நமது இலக்கு மற்றும் நாம் அடைந்துள்ள சாதனைகள்.

2. பயனாளிகள் பட்டியல்.

3. பிரச்சினைகளை களைய உதவும் மரம் (Problem solving tree) மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள்.

3. கூட்டம் மற்றும் தீர்மானம்

புதுவாழ்வு திட்டத்தில் கிராமத்திலுள்ள அனைத்து இலக்கு மக்களும் பல குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றுள்ளோம். நமது முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை அடையும் பலத்தையும் பெற்றுள்ளோம்.

கிராம நிறுவனங்கள்

 • கிராம சபை
 • சுய உதவிக் குழுக்கள்
 • சமூக தணிக்கை குழு
 • ஊர் கூட்டம்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க துணை குழுக்கள்
 • தொழில் குழு

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை கீழ்காணும் விபரங்களை கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.

 • €€ இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூட்டங்கள் நடத்தல்.
 • €€ அனைத்து உறுப்பினர்களும் கூட்டங்களில் பங்கேற்று கலந்துரையாடுவதை உறுதி செய்தல்.
 • €€ அனைத்து முக்கிய முடிவுகளும் கூட்டங்களில் விவாதிக்கபட்டு ஒரு மனதாக முடிவெடுத்தல்.
 • €€ கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள், முக்கிய விவாதங்கள் மற்றும் முடிவுகளை தீர்மான புத்தகத்தில் பதிவு செய்தல்.
 • €€ அனைத்து நிதி நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களால் எடுக்கப்படாமல் அனைவரின் பங்கேற்போடு எடுப்பது.

பல்வேறு அமைப்புகள் கூட்டம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால இடைவெளி மற்றும் பங்கேற்பு முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய தகவல்கள் பின் வருமாறு:-

கிராம நிறுவனங்கள்

கூட்டத்திற்கான கால இடைவெளி

குறைந்த பட்ச அளவு கூட்டத்தில் பங்கேற்கப்பட வேண்டியவர்கள்

கிராம சபை

ஆண்டிற்கு 4 முறை

புதுவாழ்வு திட்டம் - 2/3 பங்கு இலக்கு மக்கள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

மாதத்திற்கு இரண்டு முறை கூட்டம்

அனைத்து உறுப்பினர்களில் 2/3 பங்கு

சமூக தணிக்கை குழு

மாதத்தில் இரண்டு கூட்டம்

அனைத்து உறுப்பினர்களில் 2/3 பங்கு

ஊர்க்கூட்டம்

தேவைக்கேற்ப

குறைந்தது 50ரூ இலக்கு மக்கள்

சுய உதவிக் குழு

மாதத்திற்கு 4 முறை

பரிந்துரைக்கப்பட்ட அளவு சுய உதவிக் குழு / கூட்டமைப்பு

உறுப்பினர்கள் – 80%.

 

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

மாதத்திற்கு 2 முறை

 

4. கணக்கு புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள்

நமது உள்ளூர் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக் குழு, தொழில் குழு மற்றும் கூட்டமைப்புகள் ஆகியவை தனது செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை முறையாக கணக்கு புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கிராமத்திலுள்ள எந்தவொரு உறுப்பினரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். செலவின விவரங்கள், ரசீதுகள், ரொக்கப்புத்தகம் ஆகியவற்றில் எதைபற்றி கேட்டாலும் முறையாக பராமரிக்கப்படும் பதிவேடுகளால் அவர்களுக்கு தகுந்த முறையில் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவதால் பல வகைகளில் நமக்கு உதவுகிறது.

 • சிறு தவறுகளைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
 • உறுப்பினர்கள் தங்களது சந்தேகங்களை பதிவேடுகளை பார்ப்பதன் மூலம் தீர்த்து கொள்ள முடியும்.
 • பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் தங்களது செயல்பாடுகளை கவனத்துடன் செயல்படுத்த முடியும்.
 • பழைய உறுப்பினர்கள் மாறி புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றால் கூட பதிவேடுகளின் மூலம் புரிந்து கொண்டு தொடர்ந்து செயல்பட முடியும்.
 • வெற்றிகரமான செயல்பாடுகளின் அடையாளமாகவும் / சாட்சியாகவும் புதுவாழ்வு திட்ட குழுமம் / மதிப்பீட்டு குழு மற்றும் இதர பார்வையாளர்களுக்கு காட்ட முடியும்.

இப்பதிவேடுகளை விருப்பப்படும் நபர்கள் எவரும் ஆய்வு செய்யும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராமத்திலுள்ள எந்தவொரு உறுப்பினரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம். செலவின விவரங்கள், ரசீதுகள், ரொக்கப்புத்தகம் ஆகியவற்றில் எதைபற்றி கேட்டாலும் முறையாக பராமரிக்கப்படும் பதிவேடுகளால் அவர்களுக்கு தகுந்த முறையில் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். தவறுகள் எதுவாக இருப்பினும் கிராம சபையில் விவாதிக்கப்பட்ட பின் புத்தகத்தில் திருத்தப்பட வேண்டும்.

உள்கற்றல்

உள்கற்றல் என்பது மக்கள் அமைப்புகளின் (கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கூட்டமைப்பு , துணை குழுக்கள் , சுய உதவி குழுக்கள்) செயல்பாடுகளில் உள்ள முன்னேற்றங்களுக்கு துணை நிற்கவும், செயலாக்கத்தின் பொழுது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து மக்கள் பங்கேற்புடன் தீர்வு காண்பது உள்கற்றல் ஆகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை உள்கற்றல் நடத்துவது சமூக தணிக்கை குழுவின் கடமையாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.06666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top