பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இணைப்பு

புதுவாழ்வு மாவட்ட சங்கம் மற்றும் ஊராட்சிக்கு இடையேயான நிதி ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பு பற்றிய தகவல்.

புதுவாழ்வு மாவட்ட சங்கம் மற்றும் ஊராட்சிக்கு இடையேயான நிதி ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தமானது -----------ஆம் நாள் --------- மாதம் ----ஆம் ஆண்டு என்ற இடத்தில் -------- ஊராட்சிக்கும் மாவட்ட புதுவாழ்வு சங்கத்திற்கும் இடையே ஏற்படுகிறது.

நோக்கம்:

புதுவாழ்வு திட்டமானது தமிழக அரசால் நமது கிராம மக்களின் ஆற்றலை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டுள்ள மாநில புதுவாழ்வு சங்கமும் (மாநில சங்கம் என்று அழைக்கப்படும்) மாவட்ட புதுவாழ்வு சங்கமும் (மாவட்ட சங்கம் என்று அழைக்கப்படும்) புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்புள்ள நிறுவனங்களாகும். கிராமத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவது பற்றிய புதுவாழ்வு திட்டக்கையேட்டினை, மாநில புதுவாழ்வு திட்ட சங்கம் தயாரித்துள்ளது.

----------நாளிட்ட தீர்மானத்தின் படி --------ஊராட்சி கிராம சபை புதுவாழ்வு திட்டத்தை ஏற்று செயல்படுத்த மாநில சங்கத்திற்கு விண்ணப்பித்ததின் பேரில் இந்நிதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ------- ஊராட்சியின் விவரங்கள் இணைப்பு 1ல் இடம் பெற்றுள்ளன.

புதுவாழ்வு திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை செயல்படுத்த துவக்க நிதியாக ரூ.35,000/-ஐ பெற ஊராட்சி தகுதி உடையதாகிறது.

புதுவாழ்வு திட்டத்தினை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்தும் கிராம ஊராட்சி ரூ.6/- இலட்சம் வரையிலான ஊக்கத்தொகையினை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் வழிகாட்டிக் குறிப்புகள் புதுவாழ்வு திட்டக் கையேட்டில் விரிவாக தரப்பட்டுள்ளது.

எனவே, இதன்படி கீழ்கண்ட நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஊராட்சியின் கடமைகள்

திட்டத்தின் துவக்க நிதியான ரூ.35,000/-ஐ கீழ்கண்ட செயல்பாடுகளை கிராமத்தில் செயல்படுத்த இத்தொகையை செலவு செய்ய வேண்டும்.

(அ) ஊராட்சியின் அனைத்து குடியிருப்புகளிலும் திட்டத்தின் நோக்கங்கள் அதன் திட்ட விவரங்கள் மற்றும் வழிகாட்டி நெறிகள் போன்றவற்றை, செய்தித் தொடர்பு முகாம்களை நடத்தி தெரிவிக்க வேண்டும்.

(ஆ) புதுவாழ்வு திட்டக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி,

எல்லா குடியிருப்புகளிலும் இலக்கு மக்களை, மக்களின் பங்கேற்புடன் கண்டறிந்து பட்டியலிட்டு அதை கிராம கூட்டத்தில் விவாதித்து அதை கிராமத்தில் சில முக்கிய இடங்களில் மக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்தி கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

(இ) ஏற்கனவே உள்ள சுய உதவிக்குழுக்களில் சேராமல் விடப்பட்ட, இலக்கு மக்களைக் கண்டறிந்து அவர்களை இணைத்து புதிய சுய உதவிக் குழுக்களாக அமைக்க வேண்டும்.

(ஈ) புதுவாழ்வு திட்டத்தினை பொறுப்புடன் செயல்படுத்த மக்கள் பிரதிநிதிகளை கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தொடங்கப்பட வேண்டும்.

(உ) திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும், சமூக தணிக்கை குழுவை கிராம சபை நியமிக்க உதவ வேண்டும்.

துவக்க நிதிக்கான கணக்குகளை பராமரித்து அதன் முடிவான அறிக்கையினை மாவட்ட சங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

திட்டத்தினை செயல்படுத்தும் வளர்ச்சி முறைகள் மற்றும் வழிகாட்டுநெறிகளை அனைத்து குடியிருப்புகளிலும் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் அல்லது துணைக்குழு உறுப்பினர்கள் அல்லது கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் யாராவது ஒருவர் நிதியை தவறாக பயன்படுத்தினால் உடனடியாக புதுவாழ்வு திட்டம் கிராமத்திற்கு எந்த நிதியும் அளிப்பது மட்டுமல்லாமல் திட்டமும் கிராமத்திலிருந்து விலக்கிக் கொள்ளும்.

மாவட்ட புதுவாழ்வு சங்கத்தின் கடமைகள்

திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியுடன், தேவையான வழிகாட்டுதலை அளித்து மாவட்ட சங்கம் ஊராட்சிக்கு உதவும்.

புதுவாழ்வு திட்ட கையேட்டின் உதவியுடன் தேவையான திறன் பயிற்சியை ஊராட்சிக்கு மாவட்ட சங்கம் வழங்கும்.

கிராம வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட சங்கம் தொடர்ந்து அளித்து வர உறுதுணையாக இருக்கும்.

கீழ் குறிப்பிட்ட ஆவணங்கள் இந்த ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு - 1            கிராமத்தின் விவரங்கள்

இணைப்பு - 2            புதுவாழ்வு திட்டத்தின் உயிர் மூச்சு

இணைப்பு - 3            கிராம சபை தீர்மானத்தின் நகல்

(......நாளிட்டது)

மாவட்ட சங்கத்திற்காக                         மாவட்ட திட்ட மேலாளர்

புதுவாழ்வு திட்டம்

ஊராட்சிக்காக         தலைவர்        உறுப்பினர்

ஊராட்சி சாட்சிகளின் முன்னிலையில்

(குறைந்தது 2 கிராம உறுப்பினர்கள் அதில் ஒருவர் மகளிர்)

ஊராட்சி புள்ளி விபரங்கள்

ஊராட்சியின் பெயர்------------------

பகுதி ------------ வட்டாரம்--------------

மாவட்டம் ------------------------------

ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை -------------

1.                                        குடும்பங்களின் எண்ணிக்கை

2.

3.

4.

5.

மொத்த மக்கள் தொகை -------------------------

ஆண்கள் (எண்ணிக்கை) ------------------------

பெண்கள் -----------------------------------

ஊராட்சிகளில் வசிக்கும் மிகவும் ஏழை குடும்பங்கள்--------------

ஊராட்சிகளில் வசிக்கும் பழங்குடியினரின் குடும்பங்கள் -----------------

ஊராட்சிகளில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் -------------

ஊராட்சிகளில் உள்ள மொத்த சுய உதவிக்குழுக்கள்--------------

தொழில் செய்யும் குழுக்கள் ------------------------------

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெயர் மற்றும் முகவரி

சுய உதவி குழுவிற்கும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கும் மற்றும் புதுவாழ்வு மாவட்ட

சங்கத்திற்கும் இடையேயான ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தமானது ------------ஆம் நாள் --------------மாதம்--------------- ஆண்டு ---------- என்ற இடத்தில் ----------------- சுய உதவி குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கும் ------------- புதுவாழ்வு மாவட்ட சங்கத்திற்கும் இடையே ஏற்படுகிறது.

------- மாவட்டம் --------- ஒன்றியத்தில் தொடங்கப்பட்டுள்ள புதுவாழ்வு திட்டத்தில் இணைந்து இத்திட்டத்தின் குறிக்கோள், நோக்கம், கோட்பாடு - உயிர்மூச்சு, மக்கள் கிராம சபையில் பங்கேற்பதன் அவசியம் போன்றவற்றை எங்கள் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாரியாக, மற்ற சுய உதவி குழுக்களுக்கும் - மற்றும் மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைப்போம் என உறுதி கூறுகிறோம்.

இத்திட்டத்தின் உயிர்மூச்சு

1.

2.

3.

4.

இத்திட்டத்தின் உயிர்மூச்சு, திட்டக் கோட்பாடு, கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எங்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் தெரிவித்து, அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் இத்திட்டத்தில் இணைந்து பாடுபடுவோம். இத்திட்டத்தைப்பின்பற்றி பறைசாற்றி புதுவாழ்வு மாவட்ட சங்கம் வழங்கும் ஐநூறு சேவைக் கட்டணத்தை (மதிப்பூதியத்தை) எங்கள் குழு வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கையொப்பங்கள்

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகளை நமது கிராம ஊராட்சி செய்து முடித்தவுடன் பயன்பாட்டுச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

பயன்பாட்டு சான்றிதழ் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களால் பரிசீலிக்க பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் அதை கிராம பொது இடங்களில் பொது மக்களின் பார்வைக்கு சில நாட்கள் வைத்து பின்னர் கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும். பயன்பாட்டு சான்றிதழுக்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பயன்பாட்டு சான்றிதழ் மாதிரி படிவம்

அனுப்புநர்

----------- கிராம ஊராட்சி

பெறுநர்

மாவட்ட திட்ட மேலாளர்

புதுவாழ்வு திட்டம்.

----------மாவட்டம்

பொருள் : பயன்பாட்டு சான்றிதழ் தொடர்பாக

எங்களது கிராம ஊராட்சியில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினம் ஊராட்சி துவக்க நிதியாக மாவட்ட புதுவாழ்வு சங்கத்தி டம் இருந்து பெறப்பட்ட ரூ.35,000 த்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது.

மேல் குறிப்பிடப்பட்ட செலவினங்கள் திட்டக்கோட்பாடுகளின் படி பயனுள்ள வகையில் செலவு செய்யப்பட்டது என்று சான்றளிக்கின்றேன்.

ஊராட்சித் தலைவர்:

கையொப்பம் :

ஊராட்சி முத்திரை:

சமூக தணிக்கை குழுவின் சான்றிதழ் துவக்க நிதிக்காக கிராம ஊராட்சி அளித்த செலவு ரசீது எங்களால் சரிபார்க்கப்பட்டது. ரசீதுகளில் கொடுக்கப்பட்டிருக்கும் செலவினங்களும் பயன்பாட்டு சான்றிதழ்களும் முரண்பாடு இல்லை என்றும் அனைத்து செலவுகளும் திட்ட கோட்பாடுகளுக்கு ஏற்ப செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால் சான்றளிக்கின்றோம்.

தேதி :                                             சமூக தணிக்கை குழு தலைவர்                                                                   கையொப்பம்

சமூக தணிக்கை குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயன்பாட்டு சான்றிதழின் நகல்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட வேண்டும். பின்னர் கிராம சபையின் ஒப்புதலுக்கு வைக்க வேண்டும். கிராம சபையில் ஒப்புதல் பெறப்படும் பட்சத்தில் நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தனது துவக்க நிதிக்காக விண்ணப்பிக்க தகுதி அடைகிறது.

நமது கிராம ஊராட்சியிடம் செயல்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்ட பின் மீதம் நிதி இருந்தால் அதனை கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதிக்கு மாற்றி அதனை பயன்பாட்டு சான்றிதழில் தெரியப்படுத்தலாம்.

பின்னர் நமது கிராம ஊராட்சியின் வறுமை ஒழிப்பு சங்கம் மாவட்ட மையத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் ரூ.40,000 துவக்க நிதிக்கு கையொப்பம் இடும் இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிதி நமது முதல் தவணையிலிருந்து கொடுக்கப்படும் முன்பணம் ஆகும். இந்த நிதியினை கொண்டு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு துவக்க நிதியின் செயல்பாடுகள்

  1. குடியிருப்பு வாரியாக திட்டத்தை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
  2. கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு புதுவாழ்வு திட்ட கையேடு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துணை குழுக்கள் உருவாக்குதல்.
  4. ஏழை, மிகவும் ஏழை மற்றும் மாற்றுத்திறனாளியரை சுய உதவி குழுக்களாக உருவாக்குதல்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.13333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top