பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர் அமைப்பு

இளைஞர் அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் பொறுப்புகள் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

சுயமான வாழ்வாதார முன்னேற்றத்திற்கும், புதியனவற்றை கற்று கொள்வதற்கும், திறன்களை புதுப்பித்து கொள்வதற்காகவும், திறன் வளர்ப்பு பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் மற்றும் திட்ட செயல்பாட்டின் மூலம் பயன்களை பெற்று கொள்வதற்காகவும் இளைஞர் அமைப்புகள் அமைக்கப்படும்.

இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதே இளைஞர் அமைப்புகள்

இளைஞர் அமைப்பு முறையின் மூன்று நிலைகள்

1. இளைஞர் அமைப்பு - கிராமத்திலுள்ள (18-35 வயது) பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் இளைஞர் அமைப்பில் இருக்க வேண்டும்.

2. இளைஞர் துணைக் குழு - இளைஞர் அமைப்பில் இருந்து 10-15 நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் குறைந்தபட்சம் 50ரூ இலக்கு மக்கள் குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 50ரூ பெண்களாக இருக்க வேண்டும். இந்த குழுவில் இருக்கும் இளைஞர் ஒருமித்த கருத்தோடும் ஆர்வத்துடனும் இளைஞர்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு செயல்பட உதவ வேண்டும்.

3. இளைஞர் துணைக் குழுவில் இருந்து இரு நபர்கள் (ஓரு ஆண் மற்றும் ஒரு பெண்) கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினர் ஆவர்.

இளைஞர் துணைக்குழு உறுப்பினர்கள் (இருவர்) கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்க்கு தேர்வு செய்தலை கிராம சபையில் ஒப்புதல் பெற்று இருத்தல் வேண்டும்.

இளைஞர் மேம்பாட்டு நிதி

இரண்டு வகையில் இளைஞர் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு நிதி பயன்படுத்த படவேண்டும்.

 1. திறன் வளர்ப்பு நிதி (திறன் மேம்பாட்டிற்கான யுக்திகளை உள்ளடக்கியது)
 2. இளைஞர், மேம்பாட்டு நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் 20ரூ நிதி இளைஞர் மேம்பாட்டிற்கு என்று பயன்படுத்தபடும்.

இந்த நிதியானது இதற்கு உட்பட்ட செலவினங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

இளைஞர் பட்டியல் தயாரிக்கும் போது தேவையின் அடிப்படையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்க வேண்டும்.

இளைஞர் மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த கூடிய செயல்கள் இளைஞர் அமைப்பில் கலந்தாய்வு செய்து பின்பு துணை குழுக்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்து திட்டமிட்டு அதை கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு இளைஞரின் தேவையை கண்டறிந்து திட்டமிடுதல் வேண்டும்.

இளைஞர் மேம்பாட்டு நிதியில் செயல்படுத்த கூடிய செயல்பாடுகள்

 1. இளைஞர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல்
 2. இளைஞர் சுய உதவிக்குழுவிற்கு பயிற்சியளித்தல்
 3. இளைஞர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதாரநிதி வழங்குதல்

இளைஞர் மேம்பாட்டிற்கான செயல்கள் குறித்த உதவிகள்

 1. ஆலோசனை (ஆற்று படுத்துதல்) மையம் அமைத்தல்
 2. விளையாட்டு மையம் அமைத்தல் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குதல்.
 3. வேலை வாய்ப்பு மையம் அமைத்தல்
 4. தையல் மற்றும் தொழில் பயிற்சி மையம் அமைத்தல்
 5. கிராம அளவில் கணிணி மற்றும் தகவல் மையம் அமைத்தல்
 6. நூலகம் அமைத்தல்
 7. தொழில் சார்ந்த களப்பயணங்கள் மேற்கொள்ளுதல்
 8. மருத்துவ முகாம் மற்றும் சமூக காரணங்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல்

இளைஞர் அமைப்பின் பொறுப்புகள்

ஒவ்வொரு குக்கிராமத்தை சார்ந்த இளைஞர் துணைக் குழு பிரதிநிதியின் துணையுடன் இளைஞர்களின் புள்ளி விவரப் பட்டியல் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு குக்கிராமத்து இளைஞர் பட்டியல்களை ஒருங்கிணைத்து ஊராட்சி அளவில் இளைஞர் புள்ளி விவரப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இளைஞர் புள்ளி விவரப் பட்டியலின், அடிப்படையில் இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை கண்டறிய வேண்டும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை திரட்டி தங்களுடைய கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்கள் பயன் பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.

இளைஞர் பட்டியலில் உள்ள தகுதியானவர்களை வேலை வாய்ப்பு பயிற்சிக்கு அனுப்பி வேலை வாய்ப்பினை பெற்றுத் தர உதவ வேண்டும்.

ஊராட்சியில் உள்ள படித்த மற்றும் படிக்காத அனைத்து இளைஞர்களையும் சுய உதவிக்குழுக்களாக இணைத்து அவர்களுக்கு தேவைப்படும் தக்க பயிற்சிகளை வழங்கி, ஒரு கூட்டமைப்பாக உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

ஊராட்சி அளவில் இளைஞர்கள் மேம்பாட்டுக்குத் திட்டம் தயாரிக்க வேண்டும். திட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இளைஞர் மேம்பாட்டு நிதியை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கோட்பாடுகளின்படி (உயிர் மூச்சு) சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

இளைஞர் அமைப்பு மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும். எந்த நாளில் நடத்த வேண்டும் என்பதை இளைஞர் அமைப்பே முடிவு செய்து கொள்ளலாம். உதாரணம், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் என்றவாறு.

கூட்டம் நடத்தி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதன் தீர்மானங்களை தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்தல் வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டம் நடந்து முடிந்த பிறகு அப்பொழுதே கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும்.

இளைஞர் அமைப்பு தகவல் பலகை பராமரிக்க வேண்டும்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை இந்த தகவல் பலகை மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

புதுவாழ்வு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இளைஞர் அமைப்பின் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பார்கள்

இளைஞர்களை பயிற்சி மற்றும் வேலைக்கு அனுப்ப ஊக்குவித்தல்

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் செயல்படும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களும் இளைஞர்களை வேலைக்கு அனுப்பலாம்.

இளைஞர்களை பயிற்சி மற்றும் வேலைக்கு அனுப்பும் நபர்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் ஊக்கத் தொகை வழங்கலாம்.

ஒரு இளைஞரை உள்ளூரில் பயிற்சிக்கு அனுப்பி வேலைக்கு ஏற்பாடு செய்தால் ரூ.100ம் வெளியூரில் பயிற்சி மற்றும் வேலைக்கு அனுப்பினால் ரூ.200ம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திடம் இருந்து ஊக்கத் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம். இதை கிராமத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

கிராம அளவில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டவும், பாகுபாடற்ற சமூக ஒற்றுமை உணர்வை உருவாக்கவும், வேலை வாய்ப்பு பயிற்சிகள் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய விழிப்புணர்வையும், இளைஞர்கள் மத்தியில் உருவாக்கிட வேண்டும். இதற்கு தூண்டுகோளாக வருடத்திற்கு ஒரு முறையாவது இளைஞர்களுக்கிடையே, விளையாட்டு போட்டிகள், கலைத்திறன் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் போன்றவைகள் நடத்த வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை, கிராம வறுமை ஒழிப்பு சங்க இளைஞர் திறன் மேம்பாட்டு நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

களப்பயணம் செல்லுதல்

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பயிற்சிகள் பற்றிய விழிப்புணர்வை, கிராம மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஏற்படுத்திட மாவட்ட மற்றும் மாநில அளவிலான வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய நிறுவனங்களுக்கு களப்பயணம் சென்று வரலாம். இதன் மூலமாக நிறுவனங்களைப் பற்றியும், பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் போன்றவைகளை நேரடியாக தெரிந்து கொள்வதற்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். இதற்கு தேவைப்படும் நிதியை இளைஞர் திறன் மேம்பாட்டு நிதியிலிருந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

களப்பயணத்திற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள், பெற்றோர்கள், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், இளைஞர் அமைப்பு மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழுவாக களப்பயணம் சென்று வரலாம்.

மாற்றுத்திறனாளி பிரதிநிதி (ஒருவர்)

மாற்றுத்திறனாளி பட்டியலில் இருந்து ஒருவர் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக நியமிக்கப்படுவார் இவரை கிராம சபை தேர்வு செய்யும்.

பொறுப்புகள்

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக உரிய திட்டங்களைத் தீட்டி அனைத்து செயல்களிலும் அவர்களின் பங்களிப்பையும், ஈடுபாட்டினையும் உறுதி செய்வார்.

சிறப்பு நிதி தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாக இருந்து அதனை கண்காணிப்பார்.

பிற அரசுத்துறை மற்றும் சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவி அளிப்பார்.

சமூக மாற்றுத்திறனாளிகள் ஊக்குநரின் பணி சிறக்க உதவியாக இருப்பார்.

வட்டார மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டினை கண்காணித்து, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு அறிக்கை அளிப்பார்.

நலிவுற்றோர் பிரதிநிதி (ஒருவர்)

நலிவுற்றோர் பட்டியலில் இருந்து ஒருவர் நலிவுற்றோர் பிரதிநிதியாக நியமிக்கப்படுவார். இவரை கிராம சபை தேர்வு செய்யும்.

பொறுப்புகள்

நலிவுற்றோரின் வளர்ச்சிக்காக உரிய திட்டங்களைத் மக்கள் பங்கேற்புடன் தீட்டி, அதனை செயல்படுத்த உதவியாக இருப்பார்.

தேவையான நிதியினை புதுவாழ்வு மற்றும் பிற துறைகளிலிருந்து பெற்றுத்தர உதவியாக இருப்பார்.

வட்டார ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டினை கண்காணித்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு அறிக்கை அளிப்பார்.

பழங்குடியினர் பிரதிநிதி (ஒருவர்)

நமது கிராமத்தில் பழங்குடியினர் இலக்கு மக்கள் 10 முதல் 49 குடும்பங்கள் இருந்தால், இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள ஒரு பழங்குடியின மகளிரை உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம்.

புதுவாழ்வு திட்டத்தில், பழங்குடி இன இலக்கு மக்கள் அனைவரும் பங்கு பெறுவதை உறுதி செய்வார்.

பழங்குடியினர் தொடர்பான செயல்களை கண்காணிப்பார்.

திட்ட செயல்பாடு குறித்த அனைத்து தகவல்களும் பழங்குடி இலக்கு மக்களை சென்றடைவதை உறுதி செய்வார்.

கணக்காளர்

அதே கிராமத்தில் வசிக்கக்கூடிய நன்கு எழுத படிக்க தெரிந்த மகளிர் ஒருவரை இலக்கு மக்கள் குடும்பங்களிலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு கணக்காளராக கிராம சபை கூட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும். இலக்கு மக்கள் குடும்பங்களில் இருந்து கணக்காளர் கிடைக்கவில்லையெனில் மற்றவர்களை தேர்வு செய்யலாம்.

இவர்குறைந்தது இரண்டு வருட பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் ஒப்புதல் செய்து கொள்ள வேண்டும்.

கணக்காளரின் பணிகள் சில

தீர்மான பதிவேட்டினை தவிர மற்ற பதிவேடுகளில் அன்றைய நிகழ்வுகளை அன்றே எழுத வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தை தினமும் திறந்து வைக்க வேண்டும் .

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தினசரி வேலைகளை செய்ய வேண்டும்.

பிற கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகளுக்கும் உதவி புரிதல்.

சமூக மாற்றுத்திறனாளிகளின் ஊக்குநர்

ஒரு ஊராட்சியில் 10 நபர்களுக்கு மேல் மறுவாழ்வு பயிற்சி தேவைப்படின் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சமூக மாற்றுத்திறனாளி ஊக்குனராக நியமித்துக் கொள்ளலாம், அதே ஊரில் வசிக்க கூடியவராகவும், 10ஆம் வகுப்பு படித்து வெளியூரில் தங்கி பயிற்சி எடுக்க விருப்பம் உடையவராகவும் நல்ல ஆர்வம் உடையவராகவும் இருப்பதை கிராம சபை ஒப்புதலுடன் நேரடி தேர்வு செய்ய வேண்டும். மகளிருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவர் குறைந்தது 2 வருடம் பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் ஒப்புதல் செய்து கொள்ள வேண்டும்.

பொறுப்புகள் சில

மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் தேவையான உதவிகளை செய்வது.

சிறப்பு சுய உதவி குழுக்களை கண்காணித்தல் மற்றும் பயிற்சி கொடுத்தல்.

மறுவாழ்வு பயிற்சிகள் கொடுப்பது.

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த உதவி செய்வது.

பிற கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகளுக்கும் உதவி செய்வ

பழங்குடியினர் சமுதாய ஊக்குநர்

பழங்குடியினர் சமுதாய மேம்பாட்டிற்கு, அவர்களுக்கு நெருங்கிய முறையில் முழு ஆதரவும் ஓத்துழைப்பும் கொடுத்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பழங்குடியினர் சமுதாய ஊக்குநர் ஒருவர் அந்த சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

பழங்குடியினர் சமூதாய ஊக்குநர் தேர்வுத் தகுதிகள்

பழங்குடியின சமுதாய ஊக்குநர் அதே ஊராட்சி மற்றும் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பழங்குடியினர் சமூக வளர்ச்சிக்காக, புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகளை தன்னார்வத்துடனும் துடிப்புடனும் செயல்படுத்துவராக இருக்க வேண்டும்.

கிராம மக்களிடையே திட்டத்தை தெளிவாகவும், விளக்கமாகவும், எடுத்துரைக்கும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் பழங்குடியினர் சமுதாய ஊக்குநராகவும் குறைந்தது இரண்டு வருடங்கள் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

பணி நியமனத்திற்கான தகுதிகள்

அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பணியாற்ற கூடியவராகவும், ஒரு ஊராட்சிக்குட்பட்ட குறைந்தது இரண்டு அல்லது முன்று கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் தொலைவை கருத்தில் கொண்டு செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.

இந்த பழங்குடியினர் ஓருங்கிணைப்பு அலுவலகத்திற்கு இரண்டு வழிநடத்துநர் (வாழ்வாதாரம், கணக்கு (ம) கண்காணித்தல்)மற்றும் ஒரு அணித்தலைவர் இருப்பர்.

தேர்வு முறை

பழங்குடியினர் சமுதாய ஊக்குநர் பற்றிய விழிப்புணர்வை குடியிருப்பு கூட்டங்களில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எளிதில் புரியகூடிய வகையில் தெரிவிக்க வேண்டும்.

தேர்வு குழுவில் கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர், பொருளாளர், ஒரு சமூக தணிக்கை குழு உறுப்பினர், உதவி திட்ட மேலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் திட்ட மேலாளர் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 3 நபர்களை சுருக்கப்பட்டியல் செய்து ஓரு நபரை பழங்குடியினர் ஊக்குநராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஊதியம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கமே இந்த பழங்குடியினர் சமுதாய ஊக்குநரின் ஊதியத்தை நிர்ணயம் செய்யும்.

பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

நமது ஊராட்சியில், 50க்கு மேல் பழங்குடியின குடும்பங்கள் இலக்கு மக்களாக இருந்தால், அவர்களின் மேம்பாட்டிற்காக சிறப்பு கவனம் எடுக்க, கூடுதலாக ஒரு பழங்குடியினர் வறுமை ஒழிப்பு சங்கத்தை நாம் அமைக்கலாம்.

ஆனால், ஒரு ஊராட்சியின் மொத்த குடும்பங்களில், பழங்குடியினர் குடும்பங்கள் 60 சதவிகிதத்திற்கு மேலாக இருந்தால் ஒரே ஒரு வறுமை ஒழிப்பு சங்கம் மட்டும்தான் அமைக்கப்படும்.

பழங்குடியினர் குக்கிராமத்தின் எண்ணிக்கை மற்றும் குடியிருப்புகளுக்- கிடையேயான தூரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிற்கு மேற்பட்ட பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உருவாக்கப்படும்.

5 கி.மீட்டர் தூரத்திற்குட்பட்ட ஊராட்சியில் ஒன்றிற்கு மேற்பட்ட பழங்குடியினர் குடியிருப்புகள் இருந்தாலும் ஓரே ஓரு பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்படும்.

5 கி.மீட்டர் தொலைவிற்கு மேல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குக்கிராமங்களை கொண்ட ஊராட்சியில் அருகிலுள்ள குக்கிராமங்களை ஒன்று சேர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை உருவாக்கலாம் அவ்வாறு அமைக்கும் போது ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலும் 50க்கும் மேற்பட்ட இலக்கு மக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக அமைக்கப்படும் பழங்குடியினர் வறுமை ஒழிப்பு சங்கம், பிற வறுமை ஒழிப்பு சங்கத்தைப் போல தன்னிச்சையாக செயல்படும்.

எனவே இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தனியாக திட்டமிட்டு, தனி வங்கி கணக்கு துவக்கி நேரடியாக மாவட்ட அலுவலகத்திலிருந்து நிதியினைப் பெறும்.

சமூக தணிக்கைக்குழுவும் தனியாக உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியின வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர் தேர்வு மற்றும் செயல்பாடுகள்

பழங்குடியின கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில், பழங்குடியின மக்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலும் குடியிருப்பின் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு 10 முதல் 20 நபர்களை உறுப்பினராக தேர்வு செய்யலாம். இதில் 50 சதவிகித உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.

இந்த பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் மாற்றுத்திறனாளி பிரதிநிதி ஒருவரும் கிராம வனக்குழுவில் இருந்து ஒருவரும், இளைஞர் அமைப்பிலிருந்து இருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பழங்குடி சமூகத் தலைவர் அல்லது மூப்பன் போன்ற பொறுப்புகளில் உள்ள ஒன்று அல்லது இரண்டு நபர்கள் வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவார்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் குடியிருப்பு பிரதிநிதிகளிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.

சிறப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் அமைப்பு முறை மற்றும் செயல்பாடுகள்

ஒரு ஊராட்சியின் மொத்த குடும்பங்களில், பழங்குடியினர் குடும்பங்கள் 60 சதவிகிதத்திற்கு மேலாக இருந்தால், ஒரே ஒரு வறுமை ஒழிப்பு சங்கம் அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்காக அமைக்கப்படும்.

இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பழங்குடியினர் குடியிருப்பு பிரதிநிதிகள் பெரும்பான்மையாக (70 விழுக்காடு) இருக்க வேண்டும். பழங்குடியினர் மற்ற பிற இனத்தவரின் தேவைகளை முன்வைத்து இந்த வறுமை ஒழிப்பு சங்கம் செயல்படுவதால், இதனை சிறப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் எனலாம்.

பொது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் பின்பற்றும் அனைத்து கோட்பாடுகளையும் பின்பற்றி, இப்பழங்குடியினர் சிறப்பு கிராம வறுமை ஒழப்பு சங்கம் செயல்படும்.

மேலும், கிராம வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்கள் மற்றும் 70 சதவிகிதம் குடியிருப்பு பிரதிநிதிகள், பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

நம் கிராமத்தில் உள்ள மற்ற சமூகத்தை சார்ந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கிராம நிதியானது, கிராம ஊராட்சியில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் சிறப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் வழங்கப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தேவையின் அடிப்படையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.

கிராம வறுமை ஒழிப்புச் சங்க கூட்டத்திற்கு கிராம வறுமை ஒழிப்பு சங்கத் தலைவரே தலைமையேற்று நடத்துவார்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க தலைவர் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு மட்டும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் தற்காலிகத் தலைவரை நியமித்துக் கொள்ளலாம்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டும் கூட்டம் நடத்த வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுடன் கலந்து பேசி கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் நம்முடைய தேவைகள் மற்றும் திட்ட செயல்பாடுகளை முன்வைத்து கூட்டப்பொருளை முடிவு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கூட்டத்தின் போதும் கடந்த கூட்டத்தின் அறிக்கையும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பற்றியும் விவரமாக பேச வேண்டும்.

புதுவாழ்வு திட்டத்தில், வெளிப்படையான நிர்வாகம், மக்கள் பங்கேற்பு ஆகியவை அடிப்படைக் கோட்பாடுகளாக விளங்குகின்றன, என்பதை நாம் அனைவரும் அறிந்ததே இதை நம்முடைய உயிர் மூச்சும் தெளிவாக விளக்குகிறது. எனவே நாம் ஒவ்வொரு முறையும் சந்தேகம் வரும் போதும், முடிவுகள் எடுக்கும் போதும் நம்முடைய உயிர் மூச்சைப் பின்பற்றி அதனடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

திட்டத்தின் ஒவ்வொரு கட்ட செயல்பாடுகளுக்கேற்ப ஊராட்சிக்கென கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிபற்றிய விவரங்கள், இதுவரை செலவு செய்யப்பட்ட விவரங்கள் (நடப்பு மாத செலவினம், ஒட்டு மொத்த செலவினம்) மாவட்ட அலுவலகத்திலிருந்து வரக்கூடிய தவணைத் தொகை பற்றிய விவரங்கள் ஆகியவை திட்ட தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

சமூக தணிக்கைக் குழு

புதுவாழ்வு திட்டமானது, மக்களால் செயல்படுத்தப்படும் ஒரு மக்கள் திட்டமாகும். ஆகவே, இத்திட்டம் உயிர் மூச்சின்படி முறையாக செயல்படுகிறதா, நிதி நாணயத்துடன் செலவு செய்யப்படுகிறதா, இலக்கு மக்களுக்கு திட்டம் சென்றடைகிறதா போன்றவைகளை கண்காணிப்பதும் நமது பொறுப்பு ஆகும். இதற்கு சுதந்திரமாக செயல்படும் வகையில் ஒரு சமூக தணிக்கைக் குழு அமைக்கப்படும்.

சமூக தணிக்கை குழு உறுப்பினர் தேர்வு மற்றும் விதிமுறைகள்

இந்த சமூக தணிக்கைக் குழுவில் ஐந்து முதல் ஏழு நபர்கள் வரை இருப்பர். இவர்களை கிராம சபை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும்.

இவர்களில் குறைந்த பட்சம் நான்கு முதல் ஐந்து உறுப்பினர்கள் இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.

ஐந்து நபர்களில், குறைந்தபட்சம் மூன்று நபர்கள் மகளிராக இருக்க வேண்டும். ஏழு நபர்களாக இருக்கும் பொழுது ஐந்து நபர்கள் மகளிராக இருக்க வேண்டும். ஒர் இளைஞர் பிரதிநிதி மற்றும் ஒரு உடல் ஊனமுற்றோர் பிரதிநிதி நேரடியாக தேர்ந்தெடுப்பர்.

சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்க, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மன்ற மற்றும் துணைக்குழுக்களின் உறுப்பினர்களாகவோ அல்லது அதிலுள்ள உறுப்பினர்களின் நெருங்கிய உறவினராக இருக்கக் கூடாது.

சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களின் குண நலன்கள்

 

சமூக தணிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் பின்வரும் குணநலன்களை உடையவராக இருக்க வேண்டும்.

சமூகத்தால் மதிக்கப்படுவராகவும், ஏழைகளின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும்.

கடினமாக உழைப்பவராகவும், சமூக தணிக்கை குழுவிற்கான வேலைகளை தன்னார்வமாக செய்யக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நியாயமாக செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.

தன்னலம் இல்லாமல் பொது நலம் கருதுபவராக இருக்க வேண்டும்.

சமூக தணிக்கை குழுவின் பணிகள்

 

அனைத்து குழுக்களும் திட்ட உயிர்மூச்சினை தவறாமல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

திட்ட செயலாக்கத்தில் அடிப்படை கோட்பாடுகள் மீறப்பட்டாலோ அல்லது முரண்பட்டிருந்தாலோ அதை உடனடியாக கிராம சபையில் தெரிவிக்க வேண்டும்.

புதுவாழ்வு திட்டத்தின் இலக்கு மக்களில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது, தொழில் திட்டங்களை செயல்படுத்துவது, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முடிவெடுக்கும் செயல்கள் ஆகியவை திட்டத்தின் உயிர் மூச்சு பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், பணிகள், சேவைகள் போன்றவற்றில் வெளிப்படையான தன்மையினைக் கண்காணிக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட திட்ட நிதியில், செலவு செய்யப்பட்டதற்கு சமூக தணிக்கைக் குழு சான்றளித்து கிராம சபையில் ஒப்புதல் பெறவேண்டும். பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்ட பின்னரே மாவட்ட அலுவலகத்திலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு நிதி விடுவிக்கப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கிராம நிதியை தவணைகளில் பெறுவதற்கு கொடுக்கும் அறிக்கைகள், சுய உதவிக் குழுவினர் தொழில் திட்ட நிதியை தவணைகளில் பெறுவதற்கு கொடுக்கும் அறிக்கைகள், திட்ட நிதி செயல்பாடு ஆகியவற்றை திட்ட கோட்பாடுகளின் படி முறையாக உள்ளதா என, சரிபார்த்து சமூக தணிக்கை குழு சான்றளிக்க வேண்டும்.

பழங்குடியினருக்கு தனியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ள ஊராட்சியில் அதற்கென்று தனியாக பழங்குடியினருக்கும் சமூக தணிக்கை குழு அமைக்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழுவின் பதவிக்காலம்

ஊராட்சி மன்றத் தலைவர் தனது பதவிக்காலம் வரை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலும் பதவியை தொடரலாம்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க மற்றும் சமூகத் தணிக்கைக் குழுஉறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

ஒரு உறுப்பினர் மீண்டும் தேர்வு செய்யப்படலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு முறைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்க முடியாது.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.98076923077
ARUNRAJ Apr 07, 2019 10:16 AM

இளைஞர்கள் குழுவின் விதிமுறை வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top