பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராம நிதி

புதுவாழ்வு திட்டத்தின் கிராம நிதி சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கிராம நிதி - அறிமுகம்

கிராமத்திலுள்ள மக்களை ஆற்றல் படுத்துதல் ( திறமை வளர்த்தல் ) மற்றும் வறுமையை ஒழித்தல் இந்த நிதியின் நோக்கமாகும்

கிராம நிதி வழங்கப்படுவதன் நோக்கங்கள்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தால் நேரடியாக கிராம நிதி வழங்கப்படுகிறது.
 • மக்களே திட்டமிட்டு, செயல்படுத்தி, கண்காணித்து, நிதி நிர்வாகம் செய்ய உதவுகிறது.
 • இந்த நிதி மக்கள் நிதி, அதை மக்களின் தேவைக்காக சிக்கனமாகவும் நாணயத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும்.
 • சுயசார்புடைய, நிலைத்த தன்மையுடைய, ஏழைகளுக்கு உதவும் அமைப்புகளான கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக்குழுக்கள், கூட்டமைப்புகள் மற்றும் சமூக தணிக்கைக்குழு போன்ற மக்கள் அமைப்புகளின் திறன்களை மேம்படுவதற்கு பயன்படுத்தப்படும்.
 • மிகவும் ஏழைகள், ஏழைகள், ஊனமுற்றோர் மற்றும் நலிவுற்றோரின் திறன்களை கண்டறிந்து வளர்ப்பதற்கு பயன்படும்.
 • தொழில் திறன்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் திறன்களை வளர்க்கவும், வருமானம் பெருக்கும் வகையில் தொழில் துவங்குவதற்கும் அல்லது சுய வேலை வாய்ப்பிற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
 • பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் தங்களின் வறுமை மற்றும் துயரங்களிலிருந்து மீளும் வகையில் உறுதுணையாக, வாழ்வாதார நிலையினை மேம்படுத்திட பயன்படுத்தப்படும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உயிர் மூச்சு கொள்கைகளை அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் உறுதியாக பின்பற்றவும், கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபடவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.

கிராம நிதியின் வகைகள்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி
 • வாழ்வாதார தொகுப்பு நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி

ஒரு கிராமத்தில் புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதற்கு அந்த கிராமத்தின் ஊராட்சியால் சில துவக்க நிலை செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக வழங்கப்படுவதே ஊராட்சி துவக்க நிதியாகும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முதல் தவணை பெறுவதற்கு முன் சில தொடக்க செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவது கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியாகும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க தொடக்க செயல்பாடுகள் முடிந்த நிலையில், இலக்கு மக்களான ஏழை, மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோரின் திறன்களை வளர்ப்பதற்காக இந்த  திட்டத்தின் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி என்றும் வறுமையை குறைத்து வாழ்வாதார நிலையினை மேம்படுத்திட வாழ்வாதார தொகுப்பு நிதி என்றும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊக்க நிதி என்றும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிளுக்கு ஊராட்சி ஊக்கநிதி என்றும் திட்ட நிதியானது பகிர்ந்து வழங்கப்படுகிறது

துவக்க நிதி

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி
 • ஊராட்சி துவக்க நிதி

ஊராட்சி துவக்க நிதி

மாவட்ட புதுவாழ்வு சங்கம் செய்தி தொடர்பு முகாம்கள் நடத்தி திட்டத்தின் நோக்கம், குறிக்கோள் போன்றவற்றினை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். திட்டத்தின் உயிர் மூச்சின்படி செயல்படுத்த மக்களுக்கு விருப்பம் இருப்பின், திட்டத்தின் ஊராட்சி துவக்க நிதியை பெறுவதற்காக கீழ்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

1. புதுவாழ்வு திட்ட உயிர் மூச்சின்படி நடக்க கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்,

2. .......................ஊராட்சி துவக்க நிதி என்ற பெயரில் தனி வங்கி கணக்கு துவக்குதல்,

3. மாவட்ட அலுவலகத்திற்கும் ஊராட்சிக்கும் ஊராட்சி துவக்க நிதி ஒப்பந்தம் மேற்கொள்ளுதல்

கிராம ஊராட்சியும், மாவட்ட அலுவலகமும் இணைந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவர். மேற்கூறியவாறு செயல்பாடுகளை நிறைவேற்றிய பிறகு ஊராட்சி துவக்க நிதியாக ரூபாய் 25,000 / 35,000 / 45,000 மக்கள் தொகைக்கேற்ப வழங்கப்படும்.

ஊராட்சி துவக்க நிதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

ஊராட்சி துவக்க நிதியினை கொண்டு செயல்படுத்த வேண்டிய துவக்க நிலை செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. திட்டத்தைப் பற்றிய செய்தித் தொடர்பு முகாம்கள் நடத்துதல்

2. அறிவிப்பு பலகைகள் அமைத்தல்

3. ஊனம் குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்துதல்

4. மக்கள் நிலை ஆய்வின் மூலம் ஏழை, மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் மற்றும் பழங்குடியினரை கண்டறிந்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்.

5. இலக்கு மக்களை கொண்ட சுய உதவி குழுக்கள் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

6. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

7. குடியிருப்பு கூட்டம் நடத்தி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களை தேர்வு செய்தல்.

8. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான அதன் செயலாளர், பொருளாளரை கிராம சபை மூலம் தேர்வு செய்தல்

9. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான கணக்காளரைக் கண்டறிந்து பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி அளித்தல்

10. தேசிய வங்கியில் .............................. (ஊராட்சியின் பெயர்) வறுமை ஒழிப்பு சங்கம் என்ற பெயரில் தனி வங்கி கணக்கு துவங்குதல்

11. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு அலுவலகம் கண்டறிதல்

12. ஊராட்சி துவக்க நிதிக்கான சமூக தணிக்கை குழுவின் பயன்பாட்டு சான்றிதழ் பெற்று கிராம சபை ஒப்புதல் பெறுதல்

13. மேற்கூறிய செயல்பாடுகள் முடிக்கப்பட்ட பிறகு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான துவக்க நிதியை பெறுவதற்காக மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்பட வேண்டும்

14. மாவட்ட அலுவலகம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் இடையே கூட்டு நிதி ஒப்பந்தம் ஏற்படுத்துதல்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஏற்படுத்தப்பட்டு முதல் தவணை பெற சில செயல்பாடுகள் செய்ய வேண்டும். அதாவது சமுதாய வழிகாட்டியில் உள்ள அம்சங்களை சமுதாய மக்களுக்கு புரிய செய்ய, தொலை நோக்கு பார்வையில் கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயார் செய்ய வேண்டும். இதற்கு சராசரியாக 30 நாட்கள் தேவைப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆரம்ப கூட்டத்திற்கான செலவுகள் செய்ய வேண்டும். இச்செலவுகள் மேற்கொள்ள ரூ.40,000 கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியாக விடுவிக்கப்படும்.

1. மக்கள் நிலை ஆய்வு செய்து இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபை ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

2. கணக்காளர் நியமனம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான வங்கி சேமிப்பு கணக்கை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கியிருக்க வேண்டும்.

4. மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவின் திருப்திகரமான மதிப்பீட்டை   பெற்றிருக்க வேண்டும்.

5. மாவட்ட அலுவலகம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் இடையே கூட்டு நிதி ஒப்பந்தம் ஏற்படுத்துதல்

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியினை கொண்டு செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. கிராம வறுமை ஒழிப்பு சங்க மற்றும் சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு திட்ட கையேடு உள்வாங்கும் பயிற்சி அளித்தல்.

2. சமுதாய வழிகாட்டி கையேட்டில் உள்ள அம்சங்களை சமுதாய மக்களுக்கு புரிந்து கொள்ள செய்தல்.

3. தொலை நோக்கு பார்வையில் வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரித்து கிராம சபையின் ஒப்புதல் பெறுதல்.

4. மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான முகாம்கள் நடத்துதல்.

5. கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் அமைத்தல் மற்றும் ஆரம்ப நிர்வாக செலவுகள் செய்தல்

6. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்தல்

இந்த செயல்பாடுகளை செயல்படுத்த ஆரம்ப நிதி தேவைப்படும், எனவே வறுமை ஒழிப்பு சங்க முதல் தவணை நிதியிலிருந்து ஒரு பகுதி ரூ.40,000/- ம் கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியாக வழங்கப்படுகிறது. இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியை பெறுவதற்கு கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் (கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதிகளை விடுவிக்க)

1. வேறு பகுதியைச் சேர்ந்த பொறுப்பு உதவித் திட்ட மேலாளர்

2. அதே பகுதியைச் சேர்ந்த அணித்தலைவர்

3. நற்திறன் உடைய ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்

4. நற்திறன் உடைய ஒரு சமூக தணிக்கைக்குழு உறுப்பினர்

மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சியினை பணியாளர்கள் அளிக்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

அனுப்புநர் தேதி:

. . . . . . . . . . . . . கிராம வறுமை ஒழிப்பு சங்கம்,

. . . . . . . . . . . . . . ஊராட்சி,

. . . . . . . . . . . . . . ஒன்றியம்,

. . . . . . . . . . . . . . மாவட்டம்

பெறுநர்

மாவட்ட திட்ட மேலாளர்,

புதுவாழ்வு திட்டம்,

. . . . . . . . . . .. . . . மாவட்டம்.

ஐயா / அம்மா,

பொருள் : விண்ணப்பம் - கிராம வறுமை ஒழிப்பு சங்கம் - துவக்க நிதி

வழங்க கோருதல் - தொடர்பாக.

எங்களது ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டு . . . . . . . . . . . . . . . . அன்று நடந்த கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனை நமது புதுவாழ்வு திட்டத்தில் உள்ள உயிர்மூச்சு கொள்கைகளின்படி செயல்படுத்த பொறுப்பேற்று உறுதி பூண்டுள்ளோம். எங்களது ஊராட்சி பெற்றுக்கொண்ட ஊராட்சி துவக்க நிதி ரூ.35000/-லிருந்து திட்ட வழிகாட்டியில் கூறிய செயல்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளன என்பதினை உறுதி செய்கிறோம்.

. . . . . . . . . . . . . . . .. அன்று நடந்த கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி ரூ.40,000/= ஐ மாவட்ட திட்ட அலுவலகத்திடமிருந்து பெற விண்ணப்பம் அனுப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கிராம வறுமை ஒழிப்பு துவக்க நிதியின் மூலம் கீழ்கண்ட செயல்பாடுகள் நடைபெற இதே கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

1. கிராம வறுமை ஒழிப்பு சங்க மற்றும் சமூக தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திட்டவிளக்க கையேடு உள்வாங்கம் பயிற்சியளித்தல்.

2. சமுதாய வழிகாட்டி கையேட்டில் உள்ள அம்சங்களை சமுதாய மக்களுக்கு புரிந்து கொள்ள செய்தல்.

3. தொலை நோக்கு பார்வையில் வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரித்து கிராம சபை ஒப்புதல் பெறுதல்.

4. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான முகாம்கள் நடத்துதல்.

5. கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் அமைத்தல் மற்றும் ஆரம்ப நிர்வாக செலவுகள்.

6. கிராம வறுமை ஓழிப்பு சங்க அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு

மேலும் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு இக்கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்கண்ட உறுதி மொழிகளை அளிக்கிறது

1. கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி, திட்ட விதிமுறைகள் மற்றும் உயிர்மூச்சு கொள்கைகளின்படி செயல்படுத்தப்படும்.

2. திட்ட செயல்பாடுகள் பற்றிய மாதாந்திர அறிக்கை மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் திட்டத்தை கைவிடும் பட்சத்திலும், முதல் தவணை பெறுவதற்கான மைல்கற்கள் அடைய தவறும் பட்சத்திலும், இந்த துவக்க நிதி ரூ.40,000/= ஐ திருப்பி செலுத்த சம்மதிக்கிறோம்.

4. முதல் தவணை வழங்கும்போது இந்த துவக்க நிதியை பிடித்தம் செய்து கொள்ள சம்மதிக்கிறோம்.

மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு எங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி ரூ.40,000/= ஐ .............................. வங்கியின்..............................கிளையிலுள்ள............................சேமிப்பு கணக்கு மூலம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நன்றி

கிராம வறுமை ஒழிப்புசங்க பொருளாளர்                 கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்

இணைப்பு

1. கிராம வறுமை ஒழிப்பு சங்க வங்கி சேமிப்பு கணக்கு நகல்

2. ஊராட்சி துவக்க நிதிக்கான பயன்பாட்டு சான்றிதழ் கிராம சபை ஒப்புதல் பெற்ற நகல்

மாவட்ட அலுவலகம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் இடையே கூட்டு நிதி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

வாழ்வாதார தொகுப்பு நிதி (அமுதசுரபி நிதி)

 1. திட்டத்தின் முக்கிய குறிக்கோளான வறுமையைக் குறைத்து வளம் பெறுதல் என்பதனை அடைய வாழ்வாதார நிதி உதவும்.
 2. சுய உதவிக்குழு மற்றும் தொழில் குழு மூலமாக இலக்கு மக்கள் தங்களது வருவாய் பெருக்கும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
 3. இந்த நிதியினை தொழில் உற்பத்திக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, உபகரணங்கள் வாங்குவது, தொழில் நுட்ப ஆலோசனை பெறுவது, விற்பனை இணைப்புகளை ஏற்படுத்துவது, உற்பத்தி பொருளின் தரத்தை உயர்த்துவது, போன்ற செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்வாதார நிதி /அமுதசுரபி நிதி செயல்பாடுகள் :

இந்த நிதியானது மானியமாக கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக விடுவிக்கப்படும். இந்நிதி சுழல்நிதியாகப் பயன்படுவதோடு அடிப்படை நிதியாகவும் இருக்கும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு இரண்டு தவணைகளில் (60 : 40) அவர்கள் அடைந்த இலக்கின் அடிப்படையில் விடுவிக்கப்படும்.

கூட்டமைப்பானது அமுத சுரபி நிதி கணக்கு மற்றும் பொதுநிதி கணக்கு என இரண்டு வங்கி சேமிப்பு கணக்குகளை கூட்டமைப்பின் பெயரில் துவங்கி செயல்படுத்த வேண்டும்.

இந்த நிதி இலக்கு மக்களுக்கு கடன் உதவி வழங்க பயன்படுத்தப்படும்.

முதல் தவணை விடுவிக்கும் போது பிற் சேர்க்கை-2 ஒப்பந்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் மாவட்ட சங்கமும் கையொப்பமிட வேண்டும்

மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தால் இந்த நிதி மறு சீரமைப்பு செய்யப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்த பிறகு அமுதசுரபி என்ற கூட்டமைப்பின் வங்கி கணக்கிற்கே விடுவிக்கப்படும்

நிதியினை வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவதற்கோ அல்லது வீட்டின் விழா, ஊர்த்திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கோ பயன்படுத்தக்கூடாது.

குறைந்த பட்சம் 80% நிதி குறைந்தது 80% இலக்கு மக்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். கடன் வழங்கப்படும்போது மிகவும் ஏழைகள், ஏழைகள், ஊனமுற்றோர் மற்றும் நலிவுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

கூட்டமைப்பு பெற்ற நிதியில் இலக்கு மக்களுக்கு தொழில் கடனாக 70% நிதியும், பிற தேவைகளுக்காக 30% நிதியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

செயல்படுத்தப்படும் முறைகள்:

தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு (ஒன்று அல்லது அதற்கு மேல்) கடனுதவியினை சுய உதவிக்குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும்.

பெற்ற கடனை சரியாக திருப்ப செலுத்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த நிதியிலிருந்து உதவியினைப்பெறலாம், இருப்பினும் ஒவ்வொரு தனிநபரும் முதல் கடனை ரூ.25,000/- க்கு மேற்படாமலும் பெறலாம்.

ஊராட்சி அளவிலானக் குழுக்கூட்டமைப்பிற்கு கிடைக்கும் வட்டி வாயிலாக பெறப்படும் இலாப தொகையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் பகிர்ந்துக்கொள்ளலாம்.

அமுதசுரபி நிதி தவணைகளை விடுவிப்பதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அடைய வேண்டிய இலக்குகள் :

1. குறைந்த பட்சம் 80% தகுதி வாய்ந்த இலக்கு மக்கள் (பழங்குடியினர், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உட்பட) சுய உதவிக்குழுவாக இணைந்திருத்தல்.

2. வாழ்வாதார வள ஆய்வு முடிக்கப்பட்டு அது குறித்த தகவல் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

3. சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பினை புதுவாழ்வு திட்ட விதிமுறைப்படி அமைந்திருக்க வேண்டும்.

4. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு சமூக பொறுப்புணர்வு பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

5. அமுதசுரபி விதிமுறைகள் மற்றும் வழிகாட்டியினை ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பொதுகுழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. பிற்சேர்க்கை-2 ஒப்பந்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் மாவட்ட சங்கமும் கையொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும்.

வாழ்வாதார நிதி (அமுத சுரபி) முதல் தவணைபெறுவதற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அடைய வேண்டிய இலக்குகள்

முதல் தவணை

குழு கூட்டமைப்பு அதன் உறுப்பினர்களிடம் உறுப்பினர் கட்டணமாக ரூ.2 (ஒரு உருப்பினருக்கு) பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பொதுக் குழு அனுமதிக்கும் பட்சத்தில் உறுப்பினர்களிடம் இருந்து பங்கு தொகை வசூல் செய்திருக்க வேண்டும்.

குறைந்தது 70 சதவீதம் குழுக்களின் நிதித்திட்டம் போட்டு அதை தொகுத்து, கூட்டமைப்பின் ஆண்டு தொகுப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுக் குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

கூட்டமைப்பின் செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு ஆளுமை மற்றும் பொருப்புணர்வு, நிதி மேலாண்மை ஆகிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிர்வாகிகள் மற்றும் கணக்காளருக்கு புத்தக பராமரிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

குழு கூட்டமைப்பு அதன் உறுப்பினர்களிடம் இருந்து உறுப்பினர் கட்டணமாக குறைந்தது ரூ.10/- (ஒரு உருப்பினருக்கு) பெற்றிருக்க வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்ட கூட்டமைப்பும் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அடைய வேண்டிய இலக்குகள்

இரண்டாம் தவணை

1. குறைந்தது 60% பயன்படுத்தப்பட்டு, முன்னேற்ற அறிக்கை மற்றும் பயன்பாட்டு சான்றிதழுக்கு சமூக தணிக்கைக்குழு மற்றும் கிராம சபை ஒப்புதல் பெற்று மதிப்பீடடுக் குழுவிடம் அறிக்கை அளித்திருக்க வேண்டும்.

2. குறைந்தது 80% நிதிப்பலன், இலக்கு மக்கள் பயனடைந்து இருக்கவேண்டும் மிகவும் ஏழைகள், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோரில் முன்னுரிமை வேண்டும்.

3. இடர்பாட்டிலுள்ள நிலுவை 3 மாதங்களில் 5% க்கும் குறைவாக இருக்க வேண்டும். (அதாவது கடன் திரும்ப செலுத்த வேண்டியதில் 3 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் உள்ள நிலுவைத் தொகை)

4. ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு தன்னுடைய நடைமுறை செலவினங்களுக்கான தொகையினை தங்களது வருவாயின் மூலம் மேற்கொள்ள தகுதி பெற்றிருக்க வேண்டும்.

5. மண்டல மதிப்பீட்டு குழுவினரால் இலக்குகள் அடைந்த விபரம் சரிபார்க்கப்பட்டு திட்ட இயக்குநரால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊராட்சி அளவிலானக் குழுக்கூட்டமைப்பின் செயல்பாட்டு செலவுகள்:

கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பும் ஒரே அலுவலகக்கட்டிடத்தில் செயல்படலாம். கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டமைப்பு நிர்வாக செலவுகளான கூட்டச் செலவுகள், வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றினை தொடக்கத்தில் வழங்கலாம்.

ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு ஒரு கணக்காளரை அமர்த்தி வாழ்வாதார அடிப்படை நிதியினை பராமரிக்கும். கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்கர் இந்த பயிற்சியை அளிப்பார். அவருக்கான மதிப்புத்தொகை பின்வருமாறு வழங்கப்படும்.

ஒரு வருடம் வரை வழங்கும் மதிப்புத்தொகை - கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

ஒரு வருடத்திற்கு பிறகு வழங்கும் மதிப்புத்தொகை - ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு

கூட்டமைப்பு மேற்கொள்ளும் கொள்முதலுக்கான கொள்கைகள்:

அமுத சுரபி நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து கொள்முதல் நடவடிக்கைளிலும் சமுதாய கொள்முதலுக்கான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கொள்முதல் துணைக்குழுவினர் அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாடு

3.1
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top